படம் பார்த்து கவி: விழியின்

by admin 1
29 views
  • விழியின் மொழி *
    உண்மையை உரக்க கூறும்
    உரிமை பறிக்க படும் போது
    குரோதம் சினமாகிவிடுவதால் விழிகள் பேச தொடங்குகிறது;…
    ஒடிக்கொண்டே இருந்தாலும்
    கடிகாரத்தின் முள் ஊர்போய்
    சேர்வதில்லை ; ….
    மனிதனுள் ஆயிரம்
    வார்த்தைகள் அலையாய்
    வந்தாளும் வன்மம் கொண்ட
    வஞ்சகர்களால் வாயடைத்து
    நிற்கும் நிலையில்
    குளமாகும் விழிகள்
    உயிரின் மொழியாகிறது ;….
    இப்பிரபஞ்சத்தில் நாம் பேசும்
    ஒவ்வொரு வார்த்தைகளுக்கும்
    நாமே பொறுப்பாகிறோம்,;
    பல இடங்களில் நாம்
    பேசிய சில வார்த்தைகள்,
    நமக்கு சாதகமாகும்.;…
    சில இடங்களில் நாம்
    பேசிய பல வார்த்தைகள்
    நமக்கு பாதகமாகும்.;…
    இடம் பொருள் அறிந்து
    பேச தொடங்கு;
    வார்த்தைகள்
    விலை மதிப்பற்றது,
    கோடி கொடுத்தாளும்
    சிந்திய வார்த்தைகலை
    சீர்திருத்த முடியாது.,
    சில நேரங்களில்
    விழிகளின் மொழியே
    சிறந்ததாகிறது;….

✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!