- வெண் தாரகையே *
இயற்கை படைப்பில் மனிதன்
கண்டுபிடிப்பில்;
சிக்கி முக்கி கற்களில்
தோன்றிய பொறியிலிருந்து
உருவான
வெண் தாரகையே;
அக்னி தேவதையின் அணைப்பிற்கு பின் வரும்
வெண் தாரகையே;
சுபமான இடத்தில் தூபமாகும்
வெண் தாரகையே;
வண்ணங்களில் தனித்துவமான
வெண் தாரகையே;
கருமை நிற திறைக்கு முன்
எழுச்சி பெறும்
வெண் தாரகையே;
கணகளை கவராது
கலங்க வைக்கும்
வெண் தாரகையே;
விரல்களால் பிடிக்க
முடியதா உனை,,,
வார்த்தைகளில் வரைந்து
மகிழ்கிறேன்
வெண் தாரகையே,,,!!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.