வெய்யோன் என் வீச்சின் தகிப்பில் வரமாய் வந்த தாரகையே..
தளிர் முகம் பற்றி..
அலை கூந்தல் முட்டி..
நாசி ஒட்டா எட்டி..
இமைமூடி
உளத்தூறல் கோரி..
கங்காய் உயிர் துடிக்க..
கோனாய் நானுன்னை வதைக்க..
அந்தகார அசிரீரி
விசும்பாய் கிசுகிசுக்க
நான் கொண்ட அனலொல்லாம் ஆறிப்போக..
கனல் மொத்தமும் குளிராய் மாற..
ஜிலுஜிலுக்கும் கிளுகிளுப்பு கபாலமேற..
நீரூபம் அத்தனையும் கிளர்ச்சியாய் மாற..
மோகத்தின் உருவெடுத்து நான்தாங்க
உள்ளங்கை ஊஞ்சலில் பது(உற)ங்கியிருக்கும் பதுமையே..
நின் நுதல் படர்ந்து..
விழி வழிந்து..
பாலிகை மீட்டும்
உன்அரசன் நானடி!
என் பெயர் கேடிடி!
💚 கேடி