வெளி உலகை காட்டும் சாளரங்கள்
தனது திசைக்கான
காட்சிகளை விவரணப்படுத்தும். திரையிட்டு மறைத்தாலும் கத விட்டு மூடினாலும் காணும் போதெல்லாம் உண்மையை உரைக்கும்.
படிக்கு அருகில் இருந்தாலும்
அறைக்கு பக்கத்தில் இருந்தாலும்
வெறும் காற்றை மட்டும் உள் அனுப்புபவை அல்ல.
ஒலி ஒளி இரண்டையும் அகம் புறமாக கடத்தும் ஊடகம்.
_அரும்பாவூர் இ.தாஹிர் பாட்சா.