வெட்டி வெட்டி வீழ்த்தினாலும்
பற்றிப் பற்றிப்
பாசமாய் வளர்வேன்
கருவினை புவியில்
விட்டுச் செல்வேன்
காற்றாய்க் கலந்து
காலமாய் நிற்பேன்
எங்ஙனம் வேர்கள்
விரவி நிற்கும்
என்னை அழிக்க முடியுமா முயன்றுபார்
தன்னையே தான்
அழிப்பது சிறப்பா?
சிந்தி செயல்படு
முந்திய மானிடரே!
கவிஞர்
சே. முத்துவிநாயகம்
படம் பார்த்து கவி: வேண்டும் மரம்
previous post