என் மன வானின்
வானவில்லை
சூறையாடி வந்த
மழை முகில் குவியலோ !
இல்லை…..
என் கனவுலகின்
வர்ணஜாலங்களின்
ஊற்றா !
இல்லை
என் வாழ்வை
வசந்தமாக்க வந்த
வர்ண தேவதை
புயலோ !
இல்லை….
என் கவலைகளை மறந்து
உன் வர்ணங்களை வருடி பட்டாம்பூச்சியாய் சிறகடித்து விளையாடி
மகிழவோ !
இல்லை …..
அந்த பிரம்மனே மதிமயங்கிட
உன் வர்ணங்களை தொட்டு பேரழகி ஓவியத்தை தீட்டிடவோ !
இல்லை….
நீ எனக்கு புரியாத
புதிரோ….. !!!
— இரா. மகேந்திரன்—
படம் பார்த்து கவி:
previous post