பழமொழி போட்டி கதை: வீழாத கனவுகள்

by admin 2
85 views

எழுதியவர்: உஷாராணி

பழமொழி: தன் கையே தனக்கு உதவி.

வினோதினி மீது காமிராவின் வெளிச்சம் பரவியது.

பிரபல டிவி நிருபர் முகத்தில் மகிழ்ச்சி ரேகை பரவ, இவளை காண்பித்து ,இவர் Mrs. வினோதனி பாண்டிய ராஜ் என்றதும், கரகோஷம் எழுப்பியது.

இவர் பன்முகத் தன்மையுடையவர். சிறந்த குடும்ப தலைவி. மாரத்தான் போட்டியிலும் கலந்துக் கொண்டு
பல பரிசுகளை பெற்று இருக்கிறார்.

யோகாவில் சகலமும் கற்றுணர்ந்து இன்று உலகெங்கும் பிரபலமடைந்து இருக்கிறார் என்று தன் காது ஜிமிக்கி ஆட. இவரைப் பற்றி கூறினாள்.

வாருங்கள் நாம் நேரிடையாகவே அவரை கேட்டோம்.

வினோதனியிடம், முதலில் நீங்கள் எந்த கல்லூரியில் படிக்கின்றீர்கள் என்று சொல்லுங்கள் என்று கேட்க ,

வினு தன் அழகான பல்வரிசையை காண்பித்து சிரித்து .’”நான் கல்லூரிக்கே போனதில்லை. அந்த வயசை யெல்லாம் தாண்டி விட்டேன். என் வயது 51. என்றதும்,

மைகாட்…!!! உண்மையாக வா சொல்கிறீர்கள். 51 வயதா ………. என்று தொகுப்பாளனி அதிசயித்தாள்.

அங்கு வந்துயிருந்த ஆடியன்ஸை பார்த்து கேட்டாள்

நீங்கள் நம்பிவீர்களா இவருக்கு வயது 51ம்.

அவர்கள் கோரஸாக இல்லை என்றார்கள்.

சொல்லுங்கள் மேடம். எப்படி இந்த மேஜிக். முகஸ்துதிக்காக சொல்லவில்லை. உண்மையிலே கல்லூரியில் படிக்கும் பெண்ணை போன்று இருக்கின்றீர்கள்.

வினோதினி சொல்ல ஆரம்பித்தாள்.

எனக்கு 9வது படிக்கும் போதே திருமணமாகி விட்டது.

தென் தமிழகத்து கோடியில் இருக்கும் ஒரு கிராமத்தில் பிறந்த சாதாரண பெண். வாழ்க்கையை பற்றிய புரிதல் இல்லாமல் இருந்த காலகட்டத்தில் திருமணமாகி விட்டது.

சாதாரண குடும்பத்து பெண்ணா என் வாழ்க்கையை ஆரம்பித்தேன். இரண்டு பிள்ளைகள், ஒரு பெண் ,ஒரு ஆண் பிள்ளை இருக்கிறார்கள். என் 35 வயதில் கீழே விழுந்து அடிப்பட்டதில் முதுகு தண்டுவடத்தில் அடி. எழுந்து நடக்க வே முடியாத தருணம். என் வாழ்க்கை கட்டிலில் தான் என்று இருந்த போது, யோகா பயிற்சியை மேற்கொண்டேன். என் குரு சாந்த மூர்த்தி ஐயா” என்னை சரிபடுத்தியதோடு அல்லாமல்,
யோகாவும் சொல்லிக் கொடுத்தார் என்று கண்கள் கலங்க சொன்னாள்.

அதுக்கு அப்புறம் நடந்தது தான் மேஜிக். என் தீவிர உழைப்பினால் யோகா முழுவதும் கற்றுக் கொண்டு, அதில் பல பரிசுகள் பெற்று, இடையில் தொகுப்பாளினி இடைமறித்தாள்.

“நீங்க இண்டர் னேஷனல் லெவலில் பரிசு வாங்கி இருப்பதாக தெரியும்.

‘“ஆமாம். முதல் பரிசு கிடைத்தது.”

இதோ, ஓர் சாதாரண பெண் இவ்வளவு பெரிய தொலைகாட்சியில் உங்கள் முன் நிற்பது எனக்கு பெருமையே என்று முடித்துக் கொண்டாள்.

மக்கள் கரகோஷம் எழுப்பினர்.

தொகுப்பாளனி தன் வேலையில் கவனமாக சில ஆசனங்கள் செய்து காண்பிக்க முடியுமா “என்று கேட்க,

நிச்சயமா என்று சொல்லி, சில ஆசனங்கள் பற்றிச் சொல்லியும், செய்தும் காண்பித்தாள்.

முடிந்தவுடன், மக்களே, உங்களுக்கும் இவரைப் போல் சாதனை பெண்மணி ஆக வேண்டுமா, முக்கியமாக இளமையான தோற்றம் வேண்டுமா என்று சொல்லி தினமும், உங்களுக்காக தினந்தோறும் காலை 6 மணியிருந்து 6.30 மணி வரை சில பயிற்சிகளை சொல்லி தருவார். தவறாமல் பாருங்கள். இளமையுடன் வாழுங்கள் என்று கண் சிமிட்டிக் கொண்டும் உடலை அசைத்துக் கொண்டும், உரக்க சொல்லி தன் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டாள்.

வினோதினி தன் காரில் ஏறிக் கொண்டாள்.

டிரைவர் அவளிடம் எங்கே அம்மா போவது என்றார்.

ஆசிரமம் போ”” என்றாள்.

கார் சீராக செங்கல் பட்டை நோக்கி பயணித்தது.

பரந்து விரிந்திருக்கும் சாந்தமூர்த்தி ஐயாவின் ஆசிரமம் இவளுக்கு மிகவும் பிடித்த இடம். மனம் கனக்கும் போதெல்லாம் இலேசாக தன்னை வைத்திருப்பதற்கு உதவும் இடம்.

அந்த தெய்வீக அமைதியும் பறவைகளின் மெலிதான . ஒலியும் செடி, கொடிகளின் பசுமையும் ,ஓங்கி வ ளர்ந்த மரங்களும் அதிர்ந்து பேசாத மனிதர்களும் அவளை ஆழ்ந்த தியான நிலைக்கு செல்ல உதவும்.

ஆம்.. இப்போது மனம் கனத்து தான் போனது.

இந்த இண்டர்வியூவில் தன் திருமணம் நடந்தேறியதை இலேசாக சொல்லி விட்டாள்.

அதற்கு அவள் பட்ட பாடும் திருமணம் நடந்து முடிந்த பின் பட்ட பட்டபாடும் இருக்கே. அப்பப்பா..

கண்களை மூடினால் அந்த காட்சி வந்தது.

நீலகலர் பாவாடையும், வெள்ளை கலரில் தாவணியும், ஜாக் கெட்டும் அணிந்து, இரட்டை ஜடையில் வாடி வதங்கிய கனகாம்பரபூவுடன் , பையை தூக்கிக் கொண்டு ஓடிவர வாசல் நிறைய செருப்புகள் இருந்தது –

அம்மா பின்வாசல் வழியாக அவளை தரதரவென்று இழுத்து, கொல்லை புறத்தில் முகம் கழுவ வைத்து, உள்ளே அழைத்து போய் பள்ளி கூட உடுப்பை அவிழ்த்து தன் நல்லபுடவை ஒன்றை கட்டினாள்.

‘“அம்மா… அம்மா… எதுக்குமா இதெல்லாம் பண்ற, “ என்று கேட்டாள்.
“ சத்தம் போடாதா.
உன்னை பெண் பார்க்க வந்து இருக்கிறார்கள் “என்று தலையில் இடியை இறக்கினாள்.

என்னம்மா…. தீடீரன்று …… சொல்லவே இல்லையே என்று அழுதுக் கொண்டே திணறினாள்..

“எங்களுக்கு தெரியாதுடி.. உன் அத்தை கொண்டு வந்த சம்பந்தம். “

வேறு வினையே வேண்டாம். அப்பாக்கு அத்தை சொல் வேதவாக்கு.”

பிற்பாடு அத்தை வாங்கின பணத்திற்கு இவளை அடகு வைத்துவிட்டாள் என்று தெரிந்துக் கொண்டாள்.. அத்தை இறப்பிற்கு கூட இவள் போக மறுத்து விட்டாள்.

திருமணம் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேற, அப்பா சைக்கிள் எடுத்துக் கொண்டு தேடி கண்டுபிடித்து புளியங் கொம்பெடுத்து விளாறி விட்டார்.

தன்னை விட 14 வயது மூத்தவனுடன் திருமணம் நடந்தேறியது.

வினோதினிக்கு அவள் பள்ளி கூடத்தில் படித்த மகேஸ்ஸை மிகவும் பிடிக்கும். அவனைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துயிருந்தாள். இருவரும் எதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்று பேசிக் கொள்வார்கள்.

எல்லாம் போச்சு. படிப்பும் , கனவும் கானல் நீராகிவிட்டது.

மாமியார் வீட்டிலாவது சுகப்பட்டாளா அதுவுமில்லை.

அடி உதை குறைந்த அளவு சாப்பாடு.

மாமியார் இவள் அத்தை வாங்கின பணத்திற்கு உன்னை போய் என் மவனுக்கு ஈடா கொடுத்துட்டாளே. சல்லி காசுக்கு தேறு வியா”” என்று வசைபாடிக் கொண்டே , மொத்த வேலைகளையும் இவள் தலையில்
சுமத்தினாள்.

வேலைகளை கூட பழகலாம். ஏண்டா இரவு வருகிறது என்று பயப்படற அளவுக்கு பாண்டிய ராஜின் வெறி இருக்கும். அவளால் அதை மட்டும் சகித்து கொள்ளவே முடியவில்லை.

முரண்டு பிடித்தால் அடி உதை கிடைக்கும். மூர்க்க தனமாக அடிப்பான்.

‘“படித்துக் கொண்டியிருந்த என்னை இப்படி பாழுங் கிணத்தில் தள்ளி விட்டார்களே. “” என்று அழாத நாளே இல்லை.

உறவுகள் மீது அசூயை வந்தது.

தன் மனதில் சாதிக்கணும் என்ற தீயை அணையாமல் பார்த்துக் கொண்டாள்.

தன் 17வது வயதில் பெண் குழந்தையை பெற்றெடுத்தாள்.

முதலில் பெண் பிறந்தால் மூடர்கள் ஏற்றுகொள்வதில்லையே.

ஏச்சும் ,பேச்சும் கேட்க வேண்டியதா போயிற்று.

அடுத்து ஓர் ஆண் குழந்தை பிறந்தது. ‘

சரி. அப்போதாவது பாசமாக இருப்பார்கள் என்று ஏங்கினாள்.

ஆனால், மாமியாரே, ஊரில் இல்லாத குழந்தையை பெற்று விட்டாள். இவள் அப்ப காரன் முதல் குழந்தைக்கே ஒன்றும் செய்யவில்லை. சரியான பிச்சைக் காரன் குடும்பத்தில் பெண் எடுத்து விட்டேன்” என்று வருவோர் போவோரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்..

ஆனால் ஆண் குழந்தை பெற்றதும் கணவனின் போக்கு மாறியதோ என்று நினைத்தாள். பாசமாக இருந்தான்.

தன் பிள்ளைகளிடம், ஒரு மாதிரியும், தன் மகள் பிள்ளைகளிடம் நல்ல மாதிரியும் அம்மா இருந்ததை கவனித்து கொண்டு தான் இருந்தான்.

“ஏம்மா இந்த பாகுபாடு. இரண்டுமே உங்கள் பேரப் பிள்ளைகள் தானே. ‘ஒரு கண்ணில் வெண்ணெயும், ஒரு கண்ணில் சுண்ணாம்புமாய் இருக்கிறீர்கள்” என்றதற்கு,

அந்த ஒன்றுமில்லாதவள் பெத்தது எல்லாம் எப்படிடா என் மகள் பிள்ளைகளுக்கு ஈடாகும் என்றாள்.

‘“அம்மா அது என் பிள்ளை என்று வாதாடி பார்த்தான் ஒன்றும் நடக்கவில்லை.

கோபத்துடன் அப்பாவிடம் பணம் வாங்கிக் கொண்டு சென்னையில் தொழில் செய்வதாக சொல்லி வீட்டை விட்டு தம் மனைவி, பிள்ளைகளுடன் வெளியேறினான்.

கெட்ட வார்த்தையோடு என் பிள்ளையை என்கிட்டேயிருந்து பிரிச்சிட்டல்ல. என்று சொல்லிக் கொ ண்டே அவளை அடிக்க ஓடி வந்தாள்.

அடிக்க வந்த தன் அம்மாவின் கையை பிடித்து தடுத்து என் மனைவி மீது கையை வச்ச ………… உனக்கு அவ்வளவுதான் மரியாதை என்ற தன் கணவனை அதிசயமாக பார்த்தாள்.

மனிதர்கள் எப்போது எப்படி மாறுவார்கள் என்ற நிலை அரிதே.

ஆனாலும், தன் கணவன் மீதிருந்த பயமும், கசப்பும், அறுவறுப்பும் போகவே இல்லை.

சென்னை போனதும், அவனிடமிருந்து விலகினாள். தன் குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பதில் குறியாக இருந்தாள்.

அவனும், வியாபாரத்தை விரிவு படுத்தினான்.. உழைப்பதில் இவள் விலகியதை பொருட்டுத்தவில்லை.

தன் 35வது வயதில், கோவிலுக்கு போகும் போது இருட்டில் வேறெரு பெண்மணியிடம் செயினை அறுத்துக் கொண்டு ஓடி வந்த ஒருவன், இவள் மீது இடித்ததில் பின்பக்கமாக விழுந்தாள். முதுகில் அடி.. டாக்டர்கள் கைவிட்ட நிலையில் , வாழ்க்கை சூன்யமாகி விட்டதை உணர்ந்தாள்.

மகனும்,மகளுமே இவளை சாந்தமூர்த்தி ஐயாவிடம் அழைத்துச் சென்றார்கள்.

அன்றிலிருந்து யோகா மூலமே படிப்படியாக குணமானாள்.

யோகா கலையை தன் உயிர் நாடியாக ஏற்றுக் கொண்டாள்.

அது தனக்கு இன்னொரு வாழ்க்கையை கொடுக்கும் என்று நினைக்கவில்லை.

பிரபலமானவர்களுக்கு ஆசான் ஆனாள். புகழ் வெளிச்சம் இவள் மீது படர்ந்தது.

டாக்டர் படித்த மகளுக்கும், என்ஜினியரிங் முடித்த மகனுக்கும் அவரவர் விருப்படியே திருமணம் நடந்தது.

இதற்கிடையில் பாண்டிராஜ், வினோதினியின் கதி அவ்வளவுதான் என்று நினைத்து வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டான்.

இவள் அதற்கெல்லாம் கலங்கவில்லை. விட்டு விட்டாள்.

ஆனால், உறவுகள் மீதான மொத்த நம்பிக்கையும் விலக்கினாள்.

நாடு நாடாக, ஊர் ஊராக யோகா கலையை மேம்படுத்தினாள்.

மகன், மகளிடத்தில் உங்கள் தேவைகளை நீங்களே பார்த்துக் கொள்ளங்கள். என்னை எதிர்பார்க்க வேண்டாம்”என்றாள். .

அவர்கள் புரிந்துக் கொண்டார்கள்.

ஆனால், சம்பந்தி வீட்டாரும், மருமகனும், மருமகளும் வசை பாடினார்கள்.

திருமணம் செய்து வித்தால் போதுமா …….. பேரபிள்ளைகளை யார் பார்த்துக் கொள்வது. இப்படி விட்டேத்தியாக நடந்து கொண்டால் எப்படி. என்று அவளிடமே கேட்டார்கள்.

புன்சிரிப்பையே பதிலாக கொடுத்து சென்று விடுவாள்.

யாரிடமும் உறவை பலபடுத்திக் கொள்ளவில்லை.

தான் உண்டு தன் வேலையுண்டு என்று தனித்தே இருக்கிறாள்.

தன்னை வாழ வைத்த யோகா கலையில் தன்னை முழுவதுமாக அர்பணித்துக் கொண்டாள்.

ஆசிரமம் வந்ததும் , கண்களை மூடிக் கொண்டு இருந்தவளை மேடம… மேடம் …… என்று எழுப்பினான்.

காரைவிட்டு இறங்கியதும், சில்லென்று மிதமான காற்றை உள்வாங்கி உற்சாகமானாள்.

முற்றும்.

📍பழமொழி கதை போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!