முதலில் பழரசம் அல்லது பழங்களைச் சாப்பிட்டு உணவைத் தொடங்க வேண்டும்.
இதனால் வயிற்றில் ஏற்படும் சுகத்தை உணர்வீர்கள்.
நிச்சயமாகப் பழம் சாப்பிடும்போது வயிறு காலியாக இருக்க வேண்டும்.
உலகம் 70% அளவு தண்ணீரால் சூழப்பட்டிருக்கிறது. மனித உடலில் 80% நீர்ச் சத்து உள்ளது.
உலகோடு உடலை ஒத்து வாழச் செய்ய 80% நீர்ச்சத்து உள்ள பழங்களைச் சாப்பிடுவதே சிறப்பாகும்.
திட உணவுகளைச் சாப்பிடும்போது அவை ஜீரணிக்க அதிக நேரமாகும். அதுவே ஒரு கப் பழ சாலட் அரைமணி நேரத்தில் ஜீரணமாகிவிடும்.
இதையே பழச்சாறாகச் சாப்பிடும்போது அதன் சத்துக்கள் ரத்தத்தில் வெகு வேகமாகக் கலந்துவிடும்.
இதனால் உடலின் சக்தி, உணவை ஜீரணிக்கச் செலவிடுவதற்குப் பதிலாக உடலின் வேறு செயல்பாடுகளுக்குப் பயன்படக்கூடும்.