பார், எழுது போட்டிக் கதை: டிஜிட்டல் மோகம்

by Nirmal
5 views

கிராமத்தின் ஓரத்தில் இருந்த அந்த ஓட்டு வீட்டுக்குள் நுழைந்தாலே ஒரு தனி அமைதி கவ்வுக்கும். ஆனால், அந்த வீட்டுக்குள் வசிக்கும் முதியவர் சோமசுந்தரத்திற்கு அந்த அமைதி எப்போதுமே பிடிக்காது. எப்போதும் வீட்டின் மூலையில் இருக்கும் ரேடியோ சத்தம், இல்லையென்றால்
யாராவது பேசும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
வயது முதிர்வு காரணமாக உடல் தளர்ந்துபோய், படுக்கையை விட்டு எழ முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருந்தாலும், அவரது உலகம் சுருங்கிப் போய்விடவில்லை.

அவரது பேரன் கதிரவன், பெருநகரத்திலிருந்து கொண்டு வந்து கொடுத்த அந்த மார்டன் ஸ்மார்ட்போன்தான் இப்போது சோமசுந்தரத்தின் ஒட்டுமொத்த உலகமும். ஆரம்பத்தில் ஸ்மார்ட்போனைத் தொடவே பயந்தவர், போகப் போக அதன் வழியாக உலகத்தையே தன் கைக்குள் பார்க்கத் தொடங்கினார். தொலைந்துபோன பழைய நண்பர்களை
முகநூலில் கண்டுபிடிப்பது, தன் சொந்த ஊரின் பழைய புகைப்படங்களை யூடியூப்பில் பார்ப்பது, உறவினர்களுடன் வாட்ஸ்அப்பில் குரல் பதிவு அனுப்புவது என்று சோமசுந்தரத்தின் பகல்கள் அந்தத் திரைக்குள்ளேயே கரைந்தன.

நாட்கள் செல்லச் செல்ல, அந்தப் போனுடனான அவரது பிணைப்பு போதையாக மாறியது. காலையில் கண் விழித்தவுடன் போனைத் தேடுவதுதான் அவரது முதல் வேலையாக இருந்தது. ஒரு நாள், இரண்டு நாள் என்று இணையத் தொடர்பு இல்லாவிட்டால் அவருக்குள் ஏதோ ஒரு
பதற்றம் உருவாகும். போனின் பேட்டரி இறங்கினால் கூட உலகமே நின்றுவிட்டது போல் துடிப்பார்.

அந்த குளிர்கால மாலையில், வழக்கம் போல் சோமசுந்தரம் தன் படுக்கையில் சாய்ந்து கொண்டு போனில் ஏதோ ஒரு காணொளியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

வீட்டின் வெளியே திடீரென்று பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. அந்த மழையின் சீற்றத்தில் ஊரின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அடுத்த சில விநாடிகளில், வீட்டின் மூலையில் வைக்கப்பட்டிருந்த வைஃபை ரவுட்டர் அணைந்து, அதன் விளக்குகள் இருண்டு போயின.

கையில் இருந்த போனின் திரையில் ‘No Internet Connection’ என்ற வாசகம் தோன்றியது.

சோமசுந்தரம் எப்போதும்போல அலட்சியமாக அதைத் தட்டிவிட்டார். ஆனால், வழக்கம் போல் சிக்னல் வரவில்லை. வைஃபை குறியீட்டைக் காட்டும் அந்தச் சின்ன ஐகான் அருகில் ஒரு குறுக்குக் கோடு விழுந்து கிடந்தது.

“என்ன இது… திடீர்னு நெட் கட் ஆயிடுச்சு?” என்று தனக்குத்தானே முணுமுணுத்தவர், போனை கைகளில் ஏந்திச் சிக்னலைத் தேட முயன்றார்.

ஆனால், அவரது கைகள் தாங்க முடியாத நடுக்கத்தைச் சந்தித்தன. உடம்பில் பல மாதங்களாகத் தேங்கி நின்ற சோர்வு ஒரே நேரத்தில் அவரைத் தாக்கிக் கொண்டது. இதயத்தின் துடிப்பு திடீரென
எகிறி, பின் மெல்லக் குறைந்தது. மழையின் சத்தம் மட்டும் வெளியே கேட்டுக் கொண்டிருந்தது. அந்த அறையின் தனிமையில்,
சோமசுந்தரத்தின் உயிர் அவது உடலை விட்டு மெல்லப் பிரிந்தது.
சில மணி நேரங்களுக்குப் பிறகு, வெளியூரிலிருந்து வந்த கதிரவன் கதவைத் திறந்து உள்ளே பார்த்தான். படுக்கையில் சோமசுந்தரம் அசைவமற்றுச் சாய்ந்து கிடந்தார்.

கைகளில் அந்த ஸ்மார்ட்போன் இன்னும் இறுகப் பற்றப்பட்டிருந்தது.
அப்போதுதான் அந்த அறைக்குள் ஒரு விசித்திரமான மாற்றம் நிகழ்ந்தது. சோமசுந்தரத்தின் உடல் அங்கே செயலற்றுப் கிடந்தாலும், அவரது ஆன்மா எழுந்து நின்றது. மனிதன் இறந்த பிறகு அவனது ஆசைகளும் பற்றுகளும் உடனே அழிந்துவிடுவதில்லை என்பதைப் போல,
சோமசுந்தரத்தின் ஆன்மா தன் வாழ்நாளின் கடைசி விநாடியில் எதைத் தேடியதோ, அதே நிலையிலேயே நின்றது.

தன் உடல் இறந்துவிட்டது என்பதைப் புரிந்து கொள்ளக் கூட அவனுக்குத் தோணவில்லை. அவனது கண்கள் படுக்கையில் கிடந்த போனின் மீதுதான் நின்றன. இன்னும் இன்டர்நெட் இணைப்பு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் அவனுக்குள் ஒரு பெரும் தவிப்பாக மாறியது.

சவமாய் மாறிய தன் எலும்புக்கூடு போன்ற உடலோடு, தரையில் முழங்காலிட்டு அமர்ந்தான்அவன். கைகளைக் கூப்பியபடி, தன் வாழ்நாளின் கடைசித் தேவையாக அந்த வைஃபை சிக்னல்
மீண்டும் கிடைத்துவிடாதா என்று கண்ணீர் மல்கத் தவித்தான்.

மண்ணில் எவ்வளவோ சாதனங்களை மனிதன் கண்டு பிடித்தாலும், அந்தத் தொழில்நுட்பத்தின் மீது அவன் கொண்ட தீவிரமான அடிமைத்தனம், மரணத்தைத் தாண்டி ஆன்மாவையும் எப்படித் தவிக்க வைக்கிறது என்பதை விளக்கியது அந்தச் சூழல். நவீனத்தின் உச்சத்தில் மனிதன் எப்படி ஒரு டிஜிட்டல் கைதியாக மாறிப்போகிறான் என்பதைச் சொல்லாமல் சொன்னது அந்தத் தருணம்! அதன் பிறகு அவரை நரகத்திற்கு அனுப்புவதா இல்லை சொர்க்கத்திற்கு அனுப்புவதா என்று சொல்வதற்காக மேலோகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் அங்கு எமதர்மராஜா முன்பு அவரைநிறுத்தி வைத்தனர்.. எமதர்ம ராஜா அவரைப் பார்த்து ஏன் நீங்கள் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள் என்ன கவலை உங்களுடைய உயிர் பிரிந்தது உங்களுக்கு பிடிக்கவில்லையா எனக் கேட்டபோது..

நான் இத்தனை வருடங்கள் பூமியில் வாழ்ந்தேன் ஆனால் எதற்காக வாழ்ந்தேன் என்று தெரியவில்லை இப்பொழுது என்னுடைய கையில் புதிதாக ஒரு போன் என்னுடைய பேரன் கொடுத்தான். அதன் பிறகு அதன் மூலம் உலகத்தையே நான் பார்க்கிறேன் அது இல்லாமல் என்னால் இப்பொழுது இருக்க முடியவில்லை என்பதை எமதர்மராஜாவிடம் சோமசுந்தரம் சொன்னார்….

அப்படி என்ன வசதி அதில் இருக்கிறது அதற்காக நீங்கள் இப்படி சோகமாக இருக்கிறீர்கள் என்று கேட்டபோது.. உங்களுக்கு அதைப் பற்றி எதுவும் தெரியவில்லை தெரிந்திருந்தால் நீங்களும் அதை உங்களிடம்
வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள் என சோமசுந்தரம் எமதர்மராஜாவிடம் கூறும் பொழுது..

சரி சொல்லுங்க அதில் அப்படி என்னதான் இருக்கிறது அவரிடம் ஆர்வமாக கேட்டார்… அதற்கு சோமசுந்தரம் நான் என்னுடைய பள்ளியில் படிக்கும் நண்பர்கள் என்னுடன் இதற்கு முன்பு நாங்கள் இருந்த ஊரில் இருக்கும் போது பக்கத்தில் இருப்பவர்கள் என அனைவரையும் இதில் நான் தொடர்பு கொள்கிறேன்… என்னுடைய பேரனை தினமும் ஃபோனிலேயே பார்த்து பேசுகிறேன் இது எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா..

இதற்கு முன்பு அவன் ஆறு மாதத்திற்கு ஒரு தடவை தான் ஊருக்கு வருவான் ஆனால் அவன் முகத்தை ஒரு தடவையாவது பார்த்து விடமாட்டேன் என்று ஏக்கம் எனக்கு எப்பொழுதும் இருக்கும் ஆனால் இப்பொழுது அப்படி கிடையாது நான் நினைக்கும் போதெல்லாம் அவனுக்கு வீடியோ கால் போட்டு பேசுகிறேன் அந்த வசதி இருந்தால் எவ்வளவு தூரம் டெக்னாலஜி வழங்கி இருக்கிறது என்று உங்களுக்கே புரியும்..

சரி அதை உங்களுக்கு நாங்கள் கொடுத்தால் நீங்கள் சந்தோசமாக இருப்பீர்களா என கேட்டபோது இங்கு நெட்ஒர்க் கிடைக்குமா wi-fi இருக்கிறதா என்று கேட்டார் சோமசுந்தரம்…

நீங்கள் என்ன சொல்கிறீர்கள் அப்படி என்றால் என்ன எனக் கேட்டபோது இது கூட உங்களுக்கு தெரியாதா? வயதான எனக்கே தெரிகிறது உலகத்தில் உள்ள அனைவரையும் தங்கள் இறுதி நாட்களை உங்களிடம் தான் வந்து சேர்கிறார்கள்…

அவ்வளவு பெரிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு இதைப் பற்றி தெரியவில்லையே என்ன ஒரு வேடிக்கை… சரி அதைப்பற்றி சொல்லுங்கள் எங்கு வாங்குவது என்று அது பூலோகத்தில் தான் கிடைக்கும் நீ கிடைக்குமா என்று எனக்கு தெரியாதே… உடனே எமதர்மராஜா ஏ சித்திரகுப்தா இங்கு வா இவர் ஏதோ பெயர் சொல்லி சொல்கிறார்கள் உலகத்தின் அது எங்கே இருக்கிறது? அதை இங்கு மேலே பயன்படுத்த முடியுமா என்று விசாரித்துவிட்டு உடனடியாக வந்து எனக்கு பதில் சொல்ல வேண்டும்…

உத்தரவு மகாராஜா என்று கூறிவிட்டு சித்திரகுப்தர் இப்பொழுது பூலோகத்திற்கு வந்து இருக்கும் மக்கள் அனைவரையும் பார்த்தார் அனைவரும் ஒரு கையில் ஒரு சின்னதாக ஏதோ ஒன்றை வைத்துக்கொண்டு அதையே பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒருவர் சிரிக்கிறார் ஒருவர் பேசுகிறார் என்று ஒவ்வொருவராக ஒவ்வொன்று செய்து கொண்டிருக்கிறார்…

அதன்பிறகு தான் புரிந்தது சோமசுந்தரம் இதைதான் சொல்கிறார் என்று சரி இதை மேலோகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டு அதை மேலோகத்திற்கு எடுத்து வந்து விடுகிறார்…
சோமசுந்தரம் நீங்கள் போனை கொண்டு வந்து விட்டீர்கள் இன்டர்நெட் கனெக்சன் யார் கொடுப்பது? இங்கு டவர் கிடைக்கவே இல்லையே என கேட்டபோது..

சரி யார் அதைக் கொடுப்பார்கள் என கேட்டதற்கு அங்கு நிறைய கம்பெனிகள் இருக்கிறது அவர்கள்தான் கொடுப்பார்கள் என்று சோமசுந்தரம் கூறினார்..

சரி அந்த கம்பெனியின் பெயரை கூறு என்று கூறிய பிறகு சில பல கம்பெனி பெயர்களை சோமசுந்தரம் கூறினார் அதில் நன்றாக வேலை செய்பவர்களை இப்பொழுது மேலோகத்திற்கு சித்திரகுப்தன் அழைத்து வந்துவிட்டார்.. எங்களை நீங்கள் எதற்கு அழைத்துக் கொண்டீர்கள் என கேட்டபோது கீழே ஏதோ மொபைல் போனால் நெட்வொர்க்கா டேட்டாவாம் இவையெல்லாம் எங்கும் வேண்டும் என எமதர்மராஜா
கேட்டபோது இங்கேயும் அது வேண்டும் என்று எதற்கு ஆசைப்படுகிறீர்கள் என கேட்டதற்கு..

இதோ இந்த வயதான கிழவன் இவன் பெயர் சோமசுந்தரம் இவனுக்கு அதில் வாழ்ந்து பழக்கம் ஆகிவிட்டது அது இல்லாமல் இப்பொழுது வாழ்நாளில் ஒரு பகுதியை இழந்தது போல சோகமாக இருக்கிறான்…

காரணம் என்ன எனக் கேட்டபோது கூறினார் இவை எல்லாம் இருந்தால் சந்தோசமாக இருக்க முடியும் என்று…

ஆனால் சித்ரகுப்தனுக்கு இதில் விருப்பமே இல்லாமல் தான் செய்தார் இங்கு நாம் இயற்கையாகவே சந்தோஷத்துடன் தான் இருக்கிறோம் இதை எமதர்மராஜாவுக்கும் இந்த சோமசுந்தரத்திற்கும் புரிய வைக்க வேண்டும் என நினைத்து …

அனைவரையும் அந்த நெட்வொர்க் எப்படி வைக்க வேண்டும் என பார்க்கிறார்கள் ஆனால் அங்கு வைக்க முடியவில்லை காரணம் அது சிவனின் உத்தரவு இல்லாமல் எதுவும் வைக்க முடியாது என்பதால்.. அதன் பிறகு என்ன செய்யலாம் என்று எமதர்மராஜா சித்திரகுப்தனிடம் கேட்டபோது… இவைகள் எதுவும் இல்லாமல் இங்கு அனைவரும் நாம் சந்தோஷமாகத்தான் இருக்கிறோம். ஏன் நமக்கு இந்த பொருள் இருந்தால் தான் சந்தோசம் கிடைக்குமா எனக் கேட்டபோது எமதர்மராஜா யோசிக்க தொடங்கினார்..

அதன்பிறகு சோமசுந்தரம் யாருக்கும் எந்த தீங்கு செய்யாமல் இவ்வளவு நாள் வாழ்ந்து வந்ததால் அவருக்கு இப்பொழுது சொர்க்கத்திற்கு அனுப்புவது என முடிவானது.. அங்கு போன பிறகுதான் அதை பார்த்தார் சொர்க்கத்தில் அனைவரும் எந்த ஒரு ஃபோனும் இல்லாமல் மிகவும் சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் தங்களுடைய நாட்களை கழித்தனர்..

அதன் பிறகு தான் புரிந்து கொண்டால் சோமசுந்தரம் நம் மகிழ்ச்சி நம் இடம் தான் இருக்கிறது வேறு யாரிடமும் இல்லை அதுவும் முக்கியம் உயிர் இல்லாத அந்த பொருள் மீது நான் இவ்வளவு பற்றுடன் இருந்தேன் என்று என்னை நினைத்து நானே வருந்துகிறேன்..

இது வருத்தத்துடன் எமதர்மராஜாவிடம் போய் மன்னிப்பு கேட்டுக் கொண்டார் அதன் பிறகு தான் புரிந்தது இவை அனைத்தும் எமதர்மராஜாவின் நாடகமே என்று!!!!!?

இப்போட்டியில் கலந்துக்கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!