மாதவிடாய்க்கு ஒரு வாரம் முன்பிருந்தே கண்டிப்பாய் உணவில் பழங்கள், இளநீர், மோர் சேர்த்துக் கொள்ளுங்கள்.
உளுந்து சாதம், எள்ளுத் துவையல் சாப்பிடுங்கள்.
முடிந்தால் தினசரித் தலைக்குக் குளிப்பது மிகவும் நல்லது.
முகத்தைப் பாசிப்பயறு, கோரைக் கிழங்கு, கிச்சிலிக் கிழங்கு, வெட்டி வேர், கஸ்தூரி மஞ்சள் சேர்த்து வீட்டில் தயாரிக்கும் நலுங்கு மாவு கொண்டு மாலையும் இரவும் கழுவுங்கள்.
அதையும் தாண்டி முகப்பரு வந்தால், திருநீற்றுப் பச்சிலை (துளசி வகை) சாறை அவ்விடத்தில் தடவிடுங்கள்.