புனைவெழுத்துகளில் வாசகன் கேள்விகள் எழுப்புவதை விடத் தானாகப் புரிந்து கொள்ள முனைவதே சரியான அணுகுமுறை. அவன் பிரதியை அவன்தான் படைப்பிலிருந்து உருவாக்கிக் கொள்ள வேண்டும். அப்படி அவனால் உருவாக்க இயலாத படைப்பு அவனுக்கானதல்ல. விலகி விட வேண்டும்.
படைப்பாளியும் அதற்கு வியாக்கியானம் சொல்வது தேவையற்ற வேலை; பயனற்ற விளக்கம். இன்னும் நூறு கேள்விகள் கேட்பார்கள். க்ளாஸிக் என்று சொல்லத்தக்க படைப்புகளிலேயே அத்தகு கேள்விகளைத் தன்னை மேதாவியாகக் கருதிக் கொள்ளும் ஒருவர் எழுப்ப முடியும். புனைவில் மேலோட்டமான தர்க்கமும் நம்பகத்தன்மையும் போதுமானது. தகவல் பிழையோ தர்க்கப் பிழையோ சரி செய்ய அல்லது விளக்கம் தர இது ஒன்றும் அபுனைவு நூல் / கட்டுரை அல்ல.
நல்ல வாசகன் இம்மாதிரி சல்லி விஷயங்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க மாட்டான். நல்ல வாசகரல்லாதவர்களை நல்ல எழுத்தாளன் பொருட்படுத்த அவசியமில்லை.
© SaravanaKarthikeyan Chinnadurai