பெண் உறுப்பில் சிறு பருக்கள் என்பது தவிர்க்கமுடியாதது.
எப்போதாவது ஒரு முறையாவது இவை உருவாக கூடும்.
குறிப்பாக பருவம் அடைந்த பிறகு பெண்கள் பெண் உறுப்பில் இருக்கும் முடிகளை அகற்றும் போது இலேசாக அந்த இடத்தில் தொற்று உருவாகலாம்.
இது அந்த இடத்தில் இலேசான புடைப்பை பருவை உண்டாக்கும்.
சிறு பருக்கள் கட்டிகள் தானாகவே சரி ஆக கூடியது.
இவை குறையாமல் அதிகரிக்கும் போது அது கவனிக்க வேண்டியது.
இது மயிர்க்கால்களை அடைத்து அந்த இடத்தில் மேலும் தொற்றை அதிகரிக்க வாய்ப்புண்டு.
இதே போன்று இங்கு புண்கள், கட்டிகள் வருவதும் கருப்பையின் குறைபாட்டுக்கான அறிகுறியாக இருக்கலாம்.