பொட்டுக்கடலை சட்னி

by Admin 4
13 views

பொட்டுக்கடலை சட்னி:
            
தேவையான பொருட்கள்:
            
♦️பொட்டுக்கடலை – 1/2 கப்


♦️தேங்காய் துருவல் – 1/2 கப்


♦️மிளகாய் வத்தல் – 2


♦️பெரிய வெங்காயம் – 1


♦️தக்காளி – 1


♦️இஞ்சி – ஒரு சிறிய துண்டு


♦️பூண்டுப்பல் – 2


♦️உப்பு – தேவையான அளவு


தாளிக்க தேவையான பொருட்கள் :-


🥣நல்லெண்ணெய் – 3 மேஜைக்கரண்டி


🥣கடுகு – 1 தேக்கரண்டி


🥣கறிவேப்பிலை – சிறிது
            
 ✨செய்முறை:
            
 🍲முதலில் வெங்காயம், தக்காளி இரண்டையும் நறுக்கி வைக்கவும்.

🍲இஞ்சி, பூண்டு இரண்டையும் வெட்டி வைக்கவும்.

🍲அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

🍲வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

🍲இஞ்சி, பூண்டு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

🍲தக்காளி வதங்கியதும் பொட்டுக்கடலை, தேங்காய் துருவல், மிளகாய் வத்தல் சேர்த்து நன்கு வதக்கவும்.

🍲நன்கு வதங்கியதும் சிறிது நேரம் ஆறவிடவும்.

🍲ஆறிய பிறகு உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

🍲அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும்.

🍲கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும்.

🍲இப்போது சுவையான பொட்டுக்கடலை சட்னி தயார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!