போதிய நேரம் தூங்காமல் இருந்தாலோ அல்லது அதிக நேரம் கணினியைப் பயன்படுத்தினாலோ கண்களுக்கடியில் கருவளையம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
காஜலை ரிமூவ் செய்யாமல் இருந்தாலும் கருவளையம் ஏற்படலாம். இதற்குத் தீர்வு பெற, சில எளிய வழிகளைக் கடைப்பிடிக்கலாம்.
வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்குகளை வட்டமாக வெட்டி தினமும் தூங்கப் போகும் முன் ஐந்து நிமிடங்கள் கண்களிலும், கருவளையங்களிலும் வைக்க வேண்டும்.
இவ்வாறு தினமும் தொடர்ந்து செய்து வந்தாலே போதும் கருவளையங்கள் மறைந்துவிடும்.