மஞ்சள் சூரிய வெளிச்சத்தைப் பிரதிபலிக்கும் நிறம். மகிழ்ச்சி, ஒற்றுமையை வெளிப்படுத்தும் நிறம் இது. கவனம், அறிவாற்றல், மனநலத் திறனையும் இந்த வண்ணம் அதிகரிக்கும். உரையாடல்களை மேம்படுத்துவதற்கும் மஞ்சள் வண்ணம் உதவும்.
சமையலறை, சாப்பாட்டு அறை, குளியலறையில் பயன்படுத்துவதற்கு இந்த நிறம் சிறந்தது. வரவேற்பறை, நுழைவாயில், சிறய அறைகளில் மஞ்சளைப் பயன்படுத்தலாம்.
ஆனால், பெரிய அறைகளுக்கு மஞ்சள் ஏற்ற நிறமல்ல. பெரிய இடங்களுக்கு மஞ்சள் பயன்படுத்தும்போது அது எரிச்சல், கோபத்தை உருவாக்கும்.
அறைகளில் சிறய அளவில் மஞ்சளைப் பயன்படுத்துவது சிறந்தது என்கின்றனர் உட்புற வடிவமைப்பாளர்கள். வரவேற்பறையில் மஞ்சள் நிறக்கை நாற்காலியைப் பயன்படுத்தலாம்.