மலேசியன் குவெஹ் பங்கிட்

by Nirmal
190 views

தேவையான பொருட்கள் 

  • சாகோ மாவு – 800 கிராம் 
  • பிளெய்ன் மாவு – 400 கிராம் 
  • தேங்காய் பால் – 450 மிலி
  • பாண்டன் இலைகள் – 2
  • சர்க்கரை – 400 கிராம் 
  • முட்டைகள் – 4 (லேசாக அடித்தது)
  • பேக்கிங் சோடா – 1 கரண்டி 
Bangkit cookies sample picture 1

குவெஹ் பங்கிட் செய்முறை 

  • இரண்டு மாவுகளையும் ஒன்றாக கலந்து மிதமான சூட்டில் பொன்னிறமாக வரும் வரை வறுத்தெடுக்க வேண்டும்.
  • ஒரு பானையில் தேங்காய்ப்பால் மற்றும் பாண்டன் இலைகளை அதிகமாய் கொதிக்க விடாத தீயில் நிறம் லேசாய் மாறும் வரை வதக்க வேண்டும். 
  • பின்னர், சூடான தேங்காய் பாலில் சர்க்கரை சேர்த்து கிளறிடவும். கலவையிலி இருக்கின்ற பாண்டன் இலைகளை எடுத்திட வேண்டும்.
  • ஏற்கனவே, வறுத்தெடுத்து வைத்திருந்த கலவை மாவினில் பேக்கிங் சோடாவை சேர்க்கவும்.
  • அடுத்ததாய், தேங்காய் பால் கலவையை படிப்படியாக அம்மாவில் சேர்த்து கிண்டவும். பின்னர், முட்டைகளை சேர்த்து மீண்டும் தொடர்ந்து பதமாய் கிண்டவும்.
  • மாவு பிசுபிசுக்காதவாறு கிண்டி அதை நன்றாக பிசைந்து உருண்டையாக்கி ஓரமாய் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர், முழு உருண்டையிலிருந்து கொஞ்ச மாவை பீய்த்தெடுத்து அதை 1 செமீ தடுமனான அளவில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு, விருப்பமான அலுமினிய அச்சு வடிவத்தை கொண்டு மாவினை வெட்டி குக்கீஸ் தட்டினில் வரிசையாய் அடுக்கிடவும்.
  • பிறகு, 170° சூட்டில் ஓவனை தயார் செய்துக் கொள்ள வேண்டும்.
  • இறுதியாக, ஏறக்குறைய 20 நிமிடங்களுக்கு குக்கீஸ்களை சுட்டெடுத்திடலாம்.
  • இந்த குக்கீஸ்கள் வழக்கத்தை விட சற்று குறைந்த வெப்பநிலையிலேயே சுடப்படும். ஏனெனில் மாவில் உள்ள தேங்காய் பால் உலர அதிக நேரம் எடுக்கும். தேவைப்பட்டால் இன்னும் கொஞ்ச நேரம் எடுத்துக் கொள்ளலாம் குக்கீஸை சுடுவதற்கு. 
  • எமிஸ் மலேசியன் குவெஹ் பங்கிட் ரெடி.
  • தயாரான பலகாரத்தை எவனீங் ஸ்னேக்ஸ்சாக உண்டு மகிழுங்கள்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!