எழுத்தெனும் சிலைக்கு
உளியாகி
வரலாற்றுப் பக்கங்களின்
தாயனையாய்
தாளெனப் பெயரானாலும்
மதிப்புடனே
மதிப்புக் கூட்டுப்
பொருளானாய்
பத்திரத்தின் ரத்தினமாகி
உன்னதமாய்
கள்ளமில்லா உள்ளத்தின்
உருவாய்
மலரிதழின் மென்மையான
மணமாய்
நூல்களுக்கு நூலாகிப் போனாய்
நினதணியை எம் ‘மை’
கொண்டு எழுதினாலும் போதாது!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: எழுத்தெனும்
previous post