கால நேரம் பாராமல்
வேலை இல்லா போதெல்லாம்
மூளை சொன்ன வார்த்தையெல்லாம்
நாலாய் ரெண்டாய் எழுதியதை
பாழாய் ஆக்கி போட்டிருந்தேன்
ஏழோ எட்டோ எத்தனையோ
எழுதிய வார்த்தை அத்தனையும்
பழுதே இல்லா பாக்களென
தோழன் ரசித்து வாசித்ததால்
பாழாயான காகிதங்கள் கவிதைகளாயாகினவே….
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: கால
previous post