அறுசுவை அட்டில் : தக்காளி குருமா

by Admin 4
123 views

தக்காளி குருமா

♦️தேவையான பொருட்கள்:

🔸தக்காளி – 2 அல்லது 3 பெரியது

🔸வெங்காயம் – 1

🔸புதினா – 5 இலை

🔸கொத்தமல்லி நறுக்கியது – 1/4 கப்

🔸பச்சை மிளகாய் – 2

🔸சாம்பார் பொடி – 2 தேக்கரண்டி

🔸கரம் மசாலா – 1/4 தேக்கரண்டி

🔸மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

🔸முந்திரி – 8

🔸பட்டை – ஒரு சிறு துண்டு

🔸லவங்கம் – 2

🔸ஏலக்காய் – 1

🔸எண்ணெய் – 3 மேசைக்கரண்டி

🔸உப்பு – தேவையான அளவு

♦️செய்முறை:

🔻பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பாதி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

🔻இத்துடன் 1 1/2 தக்காளி சேர்த்து வதக்கவும்.

🔻கடைசியாக கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கி மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.

🔻மீண்டும் அதே பாத்திரத்தில் மீதம் உள்ள எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து மீதம் உள்ள பாதி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

🔻வெங்காயம் வதங்கியதும் பாதி தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

🔻குழைந்து வந்ததும் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டி சிறிது நீர் விடவும்.

🔻அரைத்த வெங்காய தக்காளி விழுது சேர்த்து தேவையான நீர் விட்டு தூள் வாசம் போக கொதிக்க விடவும்.

🔻நன்றாக கொதித்து எண்ணெய் பிரியும் போது ஊற வைத்த முந்திரியை அரைத்து ஊற்றவும்.

🔻நன்றாக கொதித்து குருமா பதம் வந்ததும் கொத்தமல்லி சிறிது தூவி பரிமாறவும்

You may also like

Leave a Comment

error: Content is protected !!