படைப்பாளர்: ஸ்ரீபிரியா ராஜகோபாலன்
அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த பிரியாவுக்கு வினோதமான சத்தமும் தன் மேசையில் ஏதோ அசைவது போல் தெரிய “ஏய் யாரது?”என்று கேட்டாள்.
“நான் ஏலியன். எங்கள் பறக்கும் தட்டில் கோளாறு ஏற்பட்டதால் உங்க இடத்தில் இறங்கினோம். நான் உங்கள் இடத்தை சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்த போது நீ என்னை உன் தோள்பையில் போட்டு விட்டாய்” என்றது.
யோசித்த பிரியாவுக்கு “ஆமாம் நேற்று என் அலுவகத்திலிருந்து வரும்போது கல்தடுக்கி என் தோள்பையில் உள்ளது எல்லாம் சிதறியது. அப்போது உன்னையும் போட்டுவிட்டேன் போலிருக்கிறது”
“நீ ஏலியன் என்றால் எப்படி எங்கள் மொழியில் பேசுகிறாய்” என்றாள்.
“நான் எங்கள் மொழியில் தான் பேசுவேன் எனக்குள் இருக்கும் ட்ரான்ஸ்லேடர் சிப் மொழிமாற்றம் செய்ய வல்லது ” என்று ஏலியன் கூறியதை கேட்டு வியந்தாள் பிரியா.
“சரி உன்னோடு பேசி நேரம் வீணாகி விட்டது. இன்று என்னோட ப்ராஜெக்ட் ப்ரெசென்ட்டேஷன் கொடுக்கணும். ரொம்ப டென்ஷனா இருக்கு. நான் எதுவுமே ஆரம்பிக்கல ” என்று கூறினாள் பிரியா.
” கவலைப்படாதே நான் உனக்கு ப்ராஜெக்ட் ப்ரெசென்ட்டேஷன் முடிக்க உதவி செய்யறேன்” என்றது ஏலியன்.
சிரித்துக் கொண்டே பிரியா”ஜோக் அடிக்காத. இந்த ப்ராஜெக்ட் விவரத்தை ஒரு வாரமா படிச்ச என்னாலேயே இன்னும் பண்ண முடியலே. நீ எப்படி பண்ணுவ?”
” நீ ப்ராஜெக்ட் விவரத்தை காட்டு நான் முடித்து தரேன் ” என்ற ஏலியனிடம் பிரியா ப்ராஜெக்ட் விவரத்தை கணினியில் காண்பித்தாள்.
ஏலியன் ஐந்து நிமிடத்தில் ப்ரெசென்ட்டேஷன் முடித்துக் கொடுத்தது. அதிர்ச்சியான பிரியா ஏலியனின் திறமைகளை பாராட்டி அலுவலகம் கிளம்பி ப்ரெசென்ட்டேஷன் கொடுத்து பாராட்டும் பெற்றாள்.
“ஏய் பிரியா எழுந்திரு அலுவலகம் போக நேரம் ஆச்சு ” என்று தாய் எழுப்பியதும் எழுந்தாள்.
“ஐயோ அத்தனையும் கனவா அப்போ நான் இனிமே தான் ப்ராஜெக்ட் ப்ரெசென்ட்டேஷன் தயார் செய்யணுமா. நேரம் ஆச்சே ” என்று அலறியடித்துக் கொண்டு கணினியை வேலை செய்ய உயிர்ப்பித்தாள் பிரியா.
முற்றும்.