ஏலியனுடன் ஒரு நாள் போட்டிக் கதை: ஏலியன் பரிசு

by admin 1
41 views

“ஹேமா, ஹேமா ” அழைத்தபடி வசந்த் வீட்டிற்குள் நுழைந்தான்.
“ என்னங்க , ஏன் இப்படி ஊரே கேட்கற மாதிரி கத்திட்டு இருக்கீங்க? “
என்று எரிந்து விழுந்தாள் ஹேமா.
“ இங்க பாரு நோட்டீஸ்! “ என்று காட்டியபடி கூறத் தொடங்கினான்
வசந்த் .” நம்ம வீட்டிற்கு ஏலியனை கூட்டிட்டு வரலாமா? “ என்றான்
வசந்த.
“ ஏங்க உங்களுக்கு உங்க கூட்டத்துக்கு வேலை செய்யிறது பத்தாதா “ . “
ரொம்ப முக்கியம் போங்க “ என்று அழுத்துக்கொண்டு ஹேமா.
“அதுசரி, எதுக்கு ஏலியனை கூட்டிட்டு வரபோறீங்க? “ என்றாள் ஹேமா.
“ஏய்….. உன் சந்தோஷத்திற்காகத் தான் சொல்றேன் “ என்றான் வசந்த்.
“ஏங்க சும்மா நிப்பாட்டுங்க முடிஞ்சா உதவி செய்யுங்க , இல்லன்னா
என்னை விடுங்க ! சும்மா வேலையெத்த வேலைய பேசிக்கிட்டு
இருப்பீங்க. “ என்றாள் ஹேமா
“நான் சொல்றத கேளு ஹேமா, கொஞ்சம் அமைதியா என் பக்கத்துல
உட்காரு… ப்ளீஸ் …. என்று கெஞ்சினான் வசந்த்
“முறைத்தபடி, அமர்ந்தாள் ஹேமா. இங்க பாரு ஒரு மாதம் நம்ம
ஒற்றுமையா சண்டை போட்டுக்காம, அதே நேரம் வீட்டை சுத்தமா
வைச்சுக்கிட்டா… அப்புறம் கடையில சாப்பாடு வாங்கா இருந்தா ஏலியனை நமக்கே தந்திடுவாங்களாம். இந்த போட்டியில கலந்துக்கலாமா ? சொல்லு… என்றான் வசந்த்

“ஏலியனையை கூட்டிட்டு வந்துட்டு என்ன செய்யறது என்றார் , ஹேமா.
ஏலியன் எல்லா வேலையுடன் பார்த்துக்கும் நீ அப்புறம் ஜாலியா
இருக்கலாம் “ என்றான் வசந்த்.
கண்ணை மூடி கற்பனையில் ஏலியனுடன் உலாவர தொடங்கினாள். ஏங்க
ரோபோ ன்னு சொல்லுறாங்கல்ல … அது மாதிரியா என்றார் ஹேமா.
“ஆமா, ஹேமா !” என்றான் வசந்த்.
“சரி நான் போய் அதற்கு அப்ளை பண்ணிட்டு வரேன் என்றான் வசந்த்
“. சரி !” தலையசைத்தாள்.
வசந்த் ஹேமாவும் போட்டியில் வெற்றி பெற்று ஏலியனை அழைத்து
வந்தனர்.
சட்டை மாட்டிக்கிட்டு வெளியே வந்து நண்பர்களிடம் என்று நடந்ததை
கூறி சிரித்தான் வசந்த்.

முற்றும்.

ஏலியனுடன் ஒரு நாள் கதைப் போட்டியில் கலந்துக் கொள்ள வேண்டுமா?!

https://aroobi.com/13504-2/

10 வரி கதை போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமா?! https://aroobi.com/10%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!