ஏலியனுடன் ஒரு நாள் போட்டிக் கதை: அனிமனின் அறிமுகம்

by admin 1
72 views

வீட்டின் பின்பக்க கிணற்றில், வந்து விழுந்தவனை பார்த்து பயந்தவள், அவன் ஆபத்தற்றவன் என்பது புரிய.. “ஹாய் ஏலியன் பையா..? எனக்கு நீ இருப்பேன்னு தெரியும். ஆனா, நானே உன்னை பார்ப்பேன்னு நினைச்சுக்கூட பார்க்கலை..


என்டா சொல்ற.. அய்யோ தலை வலிக்குது..” என்று ஆதிரா தன் தலையை கைகளில் தாங்கிக் கொண்டு குனிய..“எம்மா ஆதிரா.. எனக்கு சக்தி வேணும் உன்னோட சக்தியை கொஞ்சம் உறிஞ்சுக்கிறேன்.” என்றஅனிமன்.தனது மார்பின் மத்தியில் இருக்கும் முடி போன்ற அமைப்பை எடுத்து அவளது கழுத்தின் கீழ்வைக்க..


அதிலிருந்து ஒரு ஊசி போன்ற அமைப்பு ஆதிராவின் உடலில் சென்று அவளது சக்திகளை எடுக்க.. அதனால் ஆதிரா சற்று சோர்வடைந்தாள்.
“அடேய்.. உயிரை வாங்குறதுன்னா இதுதானடா..? விட்டா நீ என்னை கொன்னுடவ போலையே..?” என்று முறைத்தவாறே இவள் கேட்க..
“கவலை படாத ஆதிரா.. நான் எடுத்த சக்தி எனக்கு ஒரு ஒலியாண்டு அளவுக்கு வரும்.” என்று சொன்ன அனிமன்.


தனது வாயை குவித்து வானத்த நோக்கி.. ஊதி விட
அதை ஆச்சரியமாக பார்த்த ஆதிராவிடம், “நாங்க இப்படி தான்.. எங்களோட ஆளுங்களுக்குதகவல் சொல்லுவோம்.” என்று கூற
ஆதிரா இதை எல்லாம் ஆச்சரியமாக பார்த்தாள்.


அடுத்த சில வினாடிகளில் வானத்தில் இருந்து கண்ணாடி பந்து உருண்டைகளை இரு ஏலியன்கள் வந்து அனிமனிற்கு ஒரு உருண்டையை தர.. அவன் ஆதிராவை பார்த்தவாறே ஏறி செல்ல பார்க்க..
“ஏய் அனிமன் இரு, உனக்கு ஒரு டாடா கூட சொல்ல தெரியாதா..? பை.” என்று தன் கையைஆட்ட..


அனிமனும் அவள் செய்தவாறு சைகை செய்து பிறருடன் ஏறி சென்றது.
“அப்பாடா.. நம்மளை ஒன்னு செய்யாம போயிட்டான் அதுவரை சந்தோஷம்.” என்று நினைத்த ஆதிரா தனது அடுத்த வேளையை பார்க்க ஆரம்பித்தாள்.

முற்றும்.

10 வரி கதை போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமா?! https://aroobi.com/10%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!