படைப்பாளர்: ம. புனிதா
ஒரு நாள் காலை பொழுது நான் என் அமைதியான நடை பயணத்தை தொடர்ந்தேன் . வீசும் குளிர் மற்றும் , பாடும் பறவை, என நானும் மனம் போகும் போக்கில் மகிழ்ந்தது என் நடை பயணம்.
திடீரென வானிலை மாற்றம் கருமேகங்கள் சூழ இடி, மின்னல்,மழை என முழங்கியது . நான் என்னை காக்க ஒரு படகில் ஒழிந்து கொண்டேன்.சரி மழை விட்டது என செல்ல முயன்றேன்.
அப்போது சட்டென ஒரு கைதொடுவதை உணர்ந்தேன். ஓர் உருவம் என் முன்னென்று நான் ஒரு ஏலியன் பால்வழி மண்டலத்தில் நடந்த காலநிலை மாற்றம் காரணமாக இங்கு பூமியில் வந்து விட்டேன். பயப்படாதீங்க! நான் உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன் என
மென்மையான குரலில் உறுதி தந்தது. மற்றும் ஏலியன் பயணித்து வந்த எலி பெட் என்னும் வாகனம் சேதமடைந்ததால் தன் உலகில் உள்ளவர்களுக்கு தகவல் அளித்துள்ளது அங்கிருந்து வருவதற்கு சில மணி நேரங்கள் ஆகும் என கூறியது.அதிர்ச்சியில் இருந்து மீளாத நான்,
என்னை கிள்ளி உண்மை அறிந்தேன்.
பார்ப்பதற்கு பாவமாக இருந்ததால் சில நேரங்கம் தானே என்று கூப்பிட்டு கொண்டு போனேன். ஏலியன் என்னை பார்த்து சட்டென ஒரு கேள்வி கேட்டது.என்னை பார்த்து உங்களுக்கு பயமாக இல்லையா ? நான் யார் என கேட்டால் என்ன பதில் சொல்லுவீங்க என்று? அதற்கு நான், நான் ஒரு ரோபோட்டிக் படித்த மாணவி அதனால் இது என் ரோபோட்
என்று கூறுவேன் என சர்வ சாதாரணமாக பதில் அளித்தேன் பின்னர் நாங்கள் நடந்து சென்றோம் மெரீனாவின் மையப்பகுதி நோக்கி உன்னை பற்றி கூறு என நான் கேட்டேன்.
அதுவும் கூற ஆரம்பித்தது ரசனை உணர்வுடன் கூட, நட்சத்திரக் கூட்டம் கோள்கள், விண்மீன்கள் கொண்டது எங்கள் உலகம் மிகவும் சுறுசுறுப்பாக ஆனவனும் கூட நான் விளையாட்டில் ஆர்வம் கொண்டவனும் . விளையாட்டு பொருளாக நட்சத்திரங்கள் மற்றும்
நிலா தான் எங்களுக்கு நாளும் விருப்பமான விளையாட்டு பொருளாக உள்ளது.அதுமட்டுமின்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோள்களும் என சுற்றுலா கூட்டி செல்வார்கள் என் பள்ளியில் அப்பொழுது பூமியை பற்றி கூறினார் என் ஆசிரியர் .
மேலும் “பூமியில் வாழும் மக்கள் வாழ்க்கை “ என்ற தலைப்பில் கட்டுரையில் நான் முதல் பரிசு பெற்றேன் தெரியுமா?
என்றது. ஆஹா நம்முடன் புத்திசாலியாக இருக்கிறது அவர்களது உலகம் என்று நானும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன். பின் நாங்கள் இருவரும் அலுப்பு இல்லாமல் பேசிக் கொண்டே போனோம். ஏலியன் நண்பன் வந்து எலிபாட்டில் கூட்டிக்கொண்டு சென்றார். அப்போது புன்முறுவல் உடன் என்னை பார்த்து சிரித்தது. பின்னர் என் அம்மாவின் காலை நேர ஜாதக
பலன்கள். “நல்ல காலம் பிறக்குது “. என்கிற நிகழ்ச்சியில் குரலை கேட்டு விழித்தேன்.இது பிறகு கனவு என உணர்ந்தேன்.
ஏன் அக்காவின் அலாரத்தில் போத குறைக்கு கனவே கனவே
கலையதே கனவை தூக்கி எறியதே உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே…… என பாடல் வேறு… இதழ் ஓரம் புன்னகை உடன் ஜன்னலின் காற்று அடித்து வானத்தை காட்டியது………. ஏலியன் உடன் ஒரு நாளாக!
முற்றும்.