எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் டைனோசொரோடு
என் பெயர் பப்ளிபப்ன் .நான் ஒரு காட்டு யானை . நான் ஆப்பரிக்க காடுகளில் வாழ்ந்தவன் . என் நண்பன் பெயர் மக்கிதத்தி. அவன் ஒரு டைசொனர் . அவனை பற்றி உலகில் தவறான கருத்துகள் பரவி உள்ளது. நான் உண்மையை சொல்ல இத்தனை காலம் காத்து இருந்தேன் .இப்போது தான் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது . நங்கள் இருவரும் இப்போது உள்ளது விண்ணுலகில் விலங்குலகம் .
டைனோசரை பற்றி தவறான கருத்துகளை தந்தவர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். நம்மூர் டைரக்டர் விட்டாலச்சரியை மிஞ்சியவர் . மக்கள் மனதில் உள்ள பயம் என்ற உணர்ச்சியை கண்டு பொய் , புரட்டு செய்து பணம் பார்கிறார்கள் . இதற்கு ஆதாரம் தேவையா ..? ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் எடுத்த ஜுராசிக் பார்க் படம் பண்ண ஒரு அறிவியல் நிபுணர் குழு அமைத்தார். அந்த குழு ஆராய்ச்சி செய்து அறிக்கையை டைரக்டர் இடம் சமர்பித்தது . அதில் முக்கிய 2 விஷ்யங்களை நான் சொல்லியே தீர வேண்டும்
- டைனோசர் மனிதர்களை துரத்தாது
- மனிதனை சாப்பிடாது
இது போதும் .டைரக்டர் அவர்கள் சொன்ன உண்மை பற்றி கவலை பட வில்லை. மக்களிடம் பெரிய விலங்கு என்றால் நிச்சயம் பயம் இருக்கு. இந்த பயத்தை பயன்படுத்தி மில்லியன் மில்லியனாக பணம் பண்ணினார் .. இது ஒரு இயக்குனர் செய்திருக்க கூடாது . அவருக்கு உண்மை பற்றி என்ன கவலை …? அத்தோடு இல்லமால் படத்தின் இரண்டாம் பாகம் கூட எடுத்தார். மக்கள் அவர் சொன்னவற்றை நம்பினார்கள் . டைனோசர் அமைதியான மிருகம் . எனக்கு மக்கிதத்தி நண்பன் . நான் அவனுக்கு பல முறை பெரிய பெரிய வாழை தார்களை கொடுத்து உள்ளேன். அவன் எனக்கு பலா பழம் கொடுப்பான் . நானும் சரி அவனும் சரி அசைவம் சாப்பிடுவது இல்லை.. செடி ,கொடி,பழம் தான் சாப்பிடுவோம் .
பேய் ,பிசாசு இல்லா விட்டாலும் நம் விட்டலாசாரியார் ஜகன் மோகினி என்று படம் எடுத்து பணம் அள்ளினார். ஒரு இயக்குனர் தனக்கு உண்மை என்று தெரிந்து இருந்த போதும் அதற்கு பதிலாக பணத்திற்காக மூட நம்பிக்கையை பரப்புவது பெரும் குற்றம் .என்ன தண்டனை வேண்டுமானால் கொடுக்கலாம் . அறிவியல் நிபுணர்கள் சொல்லி இருந்த போதும் அதை கணக்கில் எடுத்து கொள்ளமால் பொய்யாக படம் எடுப்பது என்ன அர்த்தம் …? என்ன தைரியம் …?? என்ன நீதி …? அவனின் இனம் “ இயற்கை தேர்வு “ டார்வின் சொன்னபடி முடியாததால் அழிந்து போனது. பாவம் அவன் . என் நண்பன் தான் கடைசி டைனோசர் . அப்பாவி . வெகுளி . அமைதி நிறைந்தவன் .
இதை எல்லாம் மறந்து விட்டு மறுத்து விட்டு படம் பண்ணுவது அயோக்கிய தனம் . பொய்யை அழகாக காட்டினால் மக்கள் நம்பி விடுவார்கள் என்ற திமிர். மக்களின் பயம் , அச்சம் , திகில் உணர்வுகளை துண்டி விட்டு டைனோசரை தவறாக காட்டுவது குற்றம் .
என் அனுபவம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன் .ஒரு சமயம் நான் காட்டு சகதியில் மாட்டி கொண்டேன். நான் எவ்வளவு முயன்றும் என்னால் வெளியே வர முடிய வில்லை . அப்போது அங்கு மக்கிதத்தி வந்தான் . என்னை காப்பாற்ற எல்லா முயற்சிகளும் எடுத்தான் . கடைசியில் தன் உயிரையும் பொருட் படுத்தமால் தன் உடலை சகதியில் விட்டு என் தும்பிக்கை மீது தன் முன்னம் கால்களால் என்னை வெளியே எடுத்தான் . ஒரு விலங்கு மற்றொரு விலங்கை காப்பாற்றுகிறது . இந்த அப்பாவி மிருகத்தை பற்றி பொய் பரப்புவது என்ன நியாயம் …?
நாங்கள் இறந்தால் நாங்கள் விண் உலகில் விலங்கு உலகம் என்று ஒன்று உள்ளது. அதில் தான் நாங்கள் இருப்போம் . எங்களுக்கு பேசவும் இந்த இடத்தில முடியும் . என் நண்பன் மக்கிதத்தி தன் இனம் பற்றி பொய் சொல்வதை கண்டு மிகவும் கவலை பட்டான்.
பாவம் …!
அவன் இனமே அழிந்து விட்டது. மனிதர்கள் மீது அவனுக்கு வெறுப்பு வந்தது . நிச்சயமாக ஸ்டீபன்
ஸ்பீல்பெர்க் கையில் கிடைத்தால் அவன் அவனை கொன்று விடுவான். என்ன துணிச்சல் ……….. இயக்குனருக்கு …?
பணத்திற்காக பொய் சொல்வது விபச்சாரம் தான் .அதை தான் இயக்குனர் செய்து உள்ளார். யானைகள் மனிதனை சாப்பிடும் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா …? அதே மாதிரி தான் என் நண்பனின் வாழ்கையும் .
டைனோசர் என்றால் தொன்மா . இது தான் தமிழ் பெயர் . அதன் ஆங்கில பேருக்கு “ பெரும்கொடும்பல்லி “ என்று அர்த்தம் .இது ஊர்வன வகையை சேர்ந்தது . சுமார் 23௦ மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவை .
19 ம் நூற்றாண்டில் இது …தொன்மா 5௦௦ வகைகளாக ஆராயிச்சியளர்கள் அறிவித்தனர் .2௦௦6 இல் 15௦௦
வகைகள் என்று சொன்னார்கள் .யாருக்கும் இதுவும் புரியவில்லை . தொன்மா ஊர்வன பிரிவு . பாம்பும் ஊர்வன பிரிவு தான் .
பாம்புக்கு கால்கள் இல்லை. தொன்மாவிற்கு கால்கள் இருக்கும் .ஆனால் அது நடக்க முடியாது . தந்து பெரும் வயற்றை வைத்து தான் ஊரும். ஊர்வன தொன்மா எப்படி மனிதர்களை ஓடி துரத்தும் …? இது கூட தெரியாமல் படம் எடுத்து பணத்தை கொள்ளை அடித்து விட்டார்கள் . ஒருமுறை புலி ஒன்று மிக பசியில் இருந்தது .அது தொன்மா-வை பார்த்து அதை இரையாக்க தாவியது . அது தவறி சகதியில் சிக்கியது .எவ்வளவு போராடியும் அதனால் வெளியே வரமுடியவில்லை . என் நண்பன் மக்கதத்தி தான் தனது முன் கால்களை கொடுத்து புலிக்கு கொடுத்து உதவியது . புலி மேலே வந்தது . அது தொன்மாவை ஒன்றும் செய்ய வில்லை .அது உணவு தேடி வேறு இடம் சென்றது . நான் இதை நேரிலே பார்த்தவன் .பிறகு தொன்மா மனிதர்களை சாப்பிடும் என்பது பெரும் புளுகு .23௦ மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மனிதன் கூட இல்லை. ஏன் குரங்கு கூட இல்லை.பரிணாம வளர்ச்சியில் சில தொன்மாக்கள் இறக்கை பெற்று பறவைகள் ஆகிவிட்டன என அறிவியல் நிபுணர்கள் சொன்னார்கள்.
சினிமா என்பது பொழுதுபோக்கு சாதானம் . . அது மக்களுக்கு கடமை பட்டு உள்ளது . மூட நம்பிக்கைகளை பரப்ப கூடாது .மக்களின் உணர்ச்களை தூண்டி விட்டு பணம் பண்ணுவது என்ன நீதி …?
சரி.
விஷயத்திற்கு வருகிறேன். மனிதர்கள் இறந்தால் சொர்க்கம் அல்லது நகரம் போவர்கள் என்று சொல்லபடுகிறது. அது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அவரவர் புண்ணியயத்திற்கு ஏற்ப அவர்கள் நடத்த படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் விலங்குகள் இறந்தால் அவர்கள் விண்ணுலகில் விலங்கு உலகம் என்று ஒன்று உள்ளது. புழு ,பூச்சி , ஊர்வன ,பறப்பவை என்று எல்லா ஜீவராசிகளும் அங்கு தான் போக வேண்டும். பாப புண்ணிய கணக்கு எல்லாம் இங்கு கிடையாது . சிலர் மீண்டும் பிறப்பார்கள் .அது யார் செய்வது என்று கூட எங்களுக்கு தெரியாது .
ஆனால் மனிதர்கள் எல்லோரையும் ஆள விரும்புகிரான் .மனிதன் ஒரு சமூக விலங்கு அல்ல . சமூக உறுப்பினர். அவனுக்கு எங்களையும் இயற்கையும் பாதுகாக்க வேண்டியவன் . தந்ததிற்காக எனது சந்ததியினரின் உயிரை பறித்து வருகிறார்கள் . அவனுக்கு தாவர உணவு போதாது . மாமிசம் சாப்பிட
வேண்டும் . கோழி , ஆடு , மாடு .மான்,பன்றி என்று எதையும் விட்டு விடுவது இல்லை . பிராணியை விட
அவனுக்கு பிரியாணி தான் அவனுக்கு இஷ்டம்..
நான் மிருகத்தை வைத்து படம் எடுப்பதை எதிர்க்க வில்லை . அந்த எண்ணம் கூட இல்லை. ஆனால் இயற்கையில் உள்ள மிருகங்களுக்கு நாம் தான் பதுகவாலனாக இருக்க வேண்டும் . இவரை தெரியாமல் தமிழ் நாட்டில் யாரும் இல்லை. ஆம். சாண்டோ சின்னப்பா தேவர். அவருக்கு மிருகங்கள் என்றால் கொள்ளை பிரியம் . அவர் மிருகங்களை கதப்பாத்திரமாக மாற்றி விடுவார். அவர் எடுத்த படங்களில் நல்ல நேரம் குறிப்பிட தக்கது . நான்கு யானைகள் நடித்து அசத்தி இருந்தது . அவர் மிருகங்களை
புத்திசாலியாகவே எப்போதும் காட்டுவார். அவரது ஆட்டுகார அலமேலு மற்றும் ஒரு படம் . படத்தின்
நாயகனே அந்த ஆடு தான் .மிகுந்த புத்திசாலியாக நாயகிக்கு பாதுகாப்பு கொடுத்து தூள் கிளப்பும். சாண்டோ சின்னப்பா தேவருக்கு மிருகங்கள் என்றால் கொள்ளை பிரியம். அவரது அன்னை ஒரு ஆலயம் படத்தில் தாய் இழந்த குட்டி யானை பண்ணும் சேஷ்டைகள் அற்புதமாக இருக்கும். கடைசி வரை அந்த யானை நல்லவனாகவே இருக்கும் .சாண்டோ சின்னப்ப தேவர் மட்டும் அல்ல பல படங்கள் தமிழில் விலங்குகள் வைத்து எடுத்து உள்ளார்கள் . ஏன்…? பாம்பையே மையமாக வைத்து வெள்ளி கிழமை
விரதம் வந்து சக்கை போடு போட்டது . நாய் ஒன்று நன்றி படத்தில் அருமையாக நடித்து இருந்தது . நம்
இயக்குனர்கள் மிருகங்களை வைத்து இப்படி நல்ல படங்கள் எடுக்கும் போது ….அதுவும் கிராபிக்ஸ் இல்லமால் …அது மிக சிறந்த சாதனை . ஜுராசிக் பார்க் முழுக்க முழுக்க கிராபிக்ஸ் படம் . அதுவும்
புளுகி எடுக்க பட்ட படம் .
என்று தனியும் இந்த அந்நிய மோகம்…?
நான் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இடம் கேட்பது ஒன்னே ஒன்னு தான் . உங்களுக்கு டைனோசர் பிடித்து இருந்தால் நீங்கள் இறந்த பிறகு சொர்க்கம் (?) வந்து எங்கள் விலங்கு உலகம் வாருங்கள் .அங்கே பல பல தொன்மா இருக்கின்றன .ஆம். உங்களுக்காக காத்து கொண்டு இருக்கின்றன.
நீங்கள் ஒரே ஒரு நாள் டைனோசர் உடன் வாழ்ந்து
பாருங்கள் ….!
தொன்மா என்று பூச்சாண்டி காட்டாதீர்கள்…
பயமா ….?
ச்சே…! ச்சே…!!
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.