ஒரு நாள் போட்டி கதை: ஆசையால் அழிவு

by admin 2
49 views

எழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன்

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் தொடர்கொலைகாரனோடு !

“வாங்க..! சரவணன் வாங்க.‌! ரொம்ப நாளைக்கு அப்புறம் குடும்பத்தோடு  வந்திருக்கீங்க.” என்று வரவேற்றார் நண்பர்.

”  என் கூட வேலை பார்க்கிறவருடைய பையனுக்கு கல்யாணம். நெய்வேலியில் இருந்து வேனில் வந்தோம். போகிற வழியில் நான் உன்னை பார்க்க இங்கே இறங்கிட்டேன். மாதவா..!நீ எப்படி இருக்கிற? பிசினஸ் எப்படி போகுது?”

“நல்லா போகுது. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் இலாபம் வருது.”

“ஜி. எஸ்.டி. சரியா செலுத்தற இல்லை “

“அப்பா.. நான் உன் நண்பன். அரசாங்கத்துக்கு சரியா கட்டிடுவேன். இரண்டு கார் இருக்கு. டிரைவர் ரொம்ப நல்ல பையன். நம்ம வீட்டு மாடியில் தங்கி இருக்கிறான். அவனுக்கு ஒரு அக்கா மட்டும் தான். எல்லா வேலையையும் பொறுப்பா செய்வான்.”

“நீ எப்பவும் நல்லதையே நினைக்கிறவன்.‌ இன்னும் பொது நலத் தொண்டு செய்மறையா?”

“ஏதோ நம்மால் முடிந்த உதவி. இந்த டிரைவர் மணியும் அப்படி வந்தவன் தான். ரொம்ப கஷ்ட குடும்பம். நம்ம கடை பக்கத்தில டீ கடையில வேலை செஞ்சுகிட்டு இருந்தான். தினமும் டீ கொண்டு வருவான். அப்ப ஒரு நாள் கடையில் இருக்கும் போது எனக்கு நெஞ்சு வலி. இந்த பையன் சட்டுனு என்னை தூக்கி உட்கார வச்சுகிட்டு சரியான நேரத்தில் மருத்துவ மனையில் சேர்த்தான். அதில் இருந்து அவனை டிரைவரா வச்சுட்டு இருக்கேன்.”

“எப்படியோ மற்றவர்களுக்கு உதவும் நீ நல்லா இருக்கணும்.”மனதார கூறினேன்.

“குளிச்சுட்டு ரெடியாகி டிரைவரைக் அழைச்சிட்டு கல்யாணத்துக்கு போயிட்டு வா” என்றவர் டிரைவர் மணியை அழைத்து இவர் என்னுடைய நண்பன்.‌ அவர்கள் இங்கு இருக்கும் வரை அவர்களோட இரு.”என்றார்.

“கல்யாணம் பழனியில். நாங்க உன்னை பார்த்துட்டு இரயிலில் போலாம் என்று இருக்கிறோம்.”

“பரவாயில்லை. பழனியில் நடக்கிற கல்யாணத்துக்கு காரில் போய் விட்டு வா. நிதானமாக பேசலாம்.”

” சொன்னா நீ  கேட்கவாப் போற.” என்று உள்ளே சென்று நண்பனின் மனைவியிடம் பேசி விட்டு கிளம்பினார். இருவர் குடும்பமும் சேர்ந்து வீடே களைகட்டியது.

சரவணன் குடும்பம்  திருமணம் செல்ல தயாராகி மதியம் புறப்பட்டனர்.

முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு. மாலை ஆறு மணிக்கு திருமண மண்டபத்திற்கு வந்தாயிற்று.

தங்குவதற்கு நண்பர்கள் அனைவருக்கும் ஹோட்டலில் ரூம் ஏற்பாடு செய்து இருந்தனர்.

டிரைவர் மணி கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்தான்.

மறுநாள் காலை முகூர்த்தம். முடிந்து அனைவரும் பழனி மலை முருகனை தரிசனம் செய்ய புறப்பட்டனர்.

“இதை போல் பாம்பேயில கல்யாணம் வச்சா வசதியா கல்யாணத்தை அட்டென்ட் பண்ணிட்டு ஊரை சுற்றிப் பார்த்துட்டு வரலாம்” என்று கருத்து தெரிவித்தார் ஒருவர். 

“ஏன் நீங்க பாம்பே போனதில்லையா?. நீங்க எப்ப போக நினைச்சாலும் நான் வரேன் உங்களோட. எனக்கு பாம்பே அத்துப்படி” என்று கூறினான் டிரைவர்.

கொண்டாட்டங்கள் முடிந்து மாலை 5 மணிக்கு சரவணன் புறப்பட்டு விட்டார். வேனில் வந்தவர்கள் கொஞ்சம் கடைத் தெருவிற்கு போய் விட்டு வருவதாக கூறினர்.

ஒரு ஏழு மணி இருக்கும். கார் சட்டென்று நின்றது. பதட்டத்துடன் “என்ன மணி என்ன ஆச்சு?”

“காரில் ஏதோ கோளாறு. நீங்க உள்ளே உட்கார்ந்து இருங்க‌. நான் பார்க்கிறேன் ” என்றான்.

“என்னங்க. ஒரே இருட்டா இருக்கு. இரண்டு பக்கமும் காடு.”என்று பயத்துடன் கூறினார் மனைவி. 

“நாமும் இறங்கலாம்” என்று கதவைத் திறந்தால் கதவை திறக்க முடியவில்லை. பின்னாடி டிக்கியில் இருந்த பெட்டியை எடுத்துக் கொண்டு 

இருக்கும் போதே சைரன் ஒலிக்க போலீஸ் ஜீப் அவன் அருகில் வந்தது.

டிரைவர் சுதாரித்துக் கொண்டு காட்டுக்குள் ஓட முற்பட்டான். 

அவனைத் துரத்திக்கொண்டு ஓடினர்.

அவர்கள் மைக்கில் ஏதோ சொல்லிக் கொண்டே ஓடினர்.

 கண்ணாடி மூடி இருந்ததால் எதுவும் கேட்கவில்லை.

பயத்தில் உறைந்து விட்டோம் .

“ஒரு நாள் முழுவதும்  திருடனோட இருந்திருக்கோம். அதுவும் கொலைகாரன். துப்பாக்கியோடு இருந்து இருக்கிறான். எப்படி போலீஸை சுடறான். நினைச்சாலே குலை நடுங்குது.” என்று சரவணன் பயத்துடன் கூறினார்.

சிறிது நேரத்தில் மூச்சு விட முடியாமல் சரவணனும் மனைவியும் மயங்கி விட்டார்கள்.

கண் விழித்து பார்த்த போது அரசு மருத்துவ நிலையத்தில்.

“என்ன ஆச்சு? ” என்று அருகில் இருந்த நண்பனிடம் கேட்டான்.‌

” கலெக்க்ஷன் பணத்தை தினமும் வங்கியில் அவன் தான் கட்டுவான். இன்று மதியம் மூன்று மணிக்கு வங்கி மேலாளர் ‘ஒரு வாரமா பணம் கட்டலையே ‘ என்று அக்கரையுடன் கேட்டதும் அவனுக்கு போன் செய்தேன். அவன் போன் எடுக்கவில்லை. உனக்கு போன் செய்தால் அவன் உன்னை ஏதாவது செஞ்சுக்கிட்டு தப்பிக்க வழி இருக்கு.

 போலீஸில் கம்ளையின்ட் கொடுத்தேன் . அவன் போட்டோ கேட்டனர். 

போட்டோவைப் பார்த்து விட்டு ‘இவன் நாங்க தேடற கொலைகாரன். அவன் பெயர் முரளி.’ என்று கூறியதும் அதிர்ச்சியாக இருந்தது. உன்னுடன் அனுப்பி உள்ள விபரத்தை சொன்னதும் உன் நெம்பரை டிரேஸ் செய்யும் போது அது அசையாமல் இருந்தது. எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் லோக்கல் போலீஸ்காரர்களிடம் லொகேஷன் ஷேர் செய்தோம். அவர்களும் விரைந்து அங்கு வந்தனர்.

டிரைவர் மணி தொடர் கொலைகாரன். வேலைக்கு சேர்ந்து இரண்டு வருடங்கள் நல்லவனாக நடந்து கொள்வான். சமயம் பார்த்து பணம், நகைகளைத் திருடிக் கொண்டு தேவையானால் அவர்களை கொலை செய்து விட்டு தப்பித்து விடுவானாம்.”

ஒரு வாரமாக வங்கியில் செலுத்தாத பணம் அவனிடம் இருந்தது. அத்துடன் சரவணன் நகை பெட்டியை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான்.

மயங்குவதற்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி 

சினிமா மாதிரி கண் முன்னே கடந்தது. போலீஸ் காரர்கள் துரத்த அவன் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே ஓடினான். அவனிடம் இருந்த துப்பாக்கியில் தோட்டாக்கள் தீர்ந்து விட்டது. 

சப் இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ் சுட உத்தரவு இட்டார். 

அவனது காலை குறி பார்த்து சுட்டதும் கீழே விழுந்தான். உடனே அவனை கைது செய்தனர்.

அந்த வழக்கு  நீதி மன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. 

அவன் மேல் பல வழக்குகள். ஒவ்வொன்றும் வெவ்வேறு மாநிலங்களில். 

“இவன் தொடர் கொலைகாரன். நல்லவன் போல் நடந்து மற்றவர்களை நம்ப வைப்பதில் கில்லாடி. ” என்று அவனைப் பற்றி கூறினார்.

மாதவனை அழைத்து விசாரித்தனர். “அவனுடைய ஆதார், லைசன்ஸ் எல்லாவற்றையும் வாங்கி சரி பார்த்து விட்டு தான் வேலைக்குச் சேர்த்தேன். எல்லாம் டூப்ளிகேட் போல.  ஆதார் சைட்டில் செக் செய்யவில்லை.ஒரு வருஷமா அவனைப் பற்றி எந்த சந்தேகமும் வரலை. அவ்வளவு நல்லவனா நடந்து கிட்டான்.” என்று கூறினார்.

சரவணனை அழைத்து விசாரித்தனர். ” ஒரு நாள் முழுவதும் திரில்லர் கொலைகாரனோடு இருந்து இருக்கிறீர்கள். உங்களுக்கு சந்தேகம் எதுவும் வரவில்லையா?”என்று கேட்டனர்.

“சந்தேகம் வர மாதிரி அவன் நடக்கலை. ஏற்கனவே அவன் தீர்மானத்துடன் வந்திருக்கிறான். இரண்டு முறை பெட்டியை கொண்டு வைக்கவா என்று கேட்டுக் கிட்டே இருந்தான். இப்ப நினைச்சா பயமா இருக்கு.”

திருடனிடம் விசாரித்தனர். 

“ஒரு மாநிலத்தில் என் கைவரிசையை காட்டினால் திரும்ப அங்கு போக மாட்டேன். இரண்டு நாட்களுக்கு முன்பே ரூபாயுடன் ஓட திட்டமிட்டு விட்டேன். ஆனால் அவர் நண்பர் கல்யாணத்துக்கு போவதால் கட்டாயம் நகையும் கிடைக்கும் என்று காத்திருந்தது தப்பாகி விட்டது.

ஒவ்வொரு இடத்திலும் பணம் எடுத்துக் கொண்டு அவர்களை கொலை செய்து விடுவேன்.”

“இந்த வீட்டில் மாதவன் சார் ரொம்ப நல்லவர். பலருக்கு உதவி செய்கிறார். அதனால் அவரை விட்டு விட்டேன். அவர் நண்பர் மாட்டினார். என் திட்டப் படி நகையை எடுத்துக் கொண்டு கார் கதவுகளை மூடி விட்டு ஏசி கேஸை திறந்து விட்டு அவர்களை கொல்வது. பின்னர் அவர்களை வெளியே இழுத்துப் போட்டு விட்டு காரில் தப்பிப்பது. என் போதாத காலம் பிடிபட்டு விட்டேன் “என்று தவறை ஒத்துக் கொண்டான்.

நீதிபதி அவனுக்கு ஆயுள் தண்டனை அளித்து முடித்தார்.

பணத்தை மாதவனிடம்  ஒப்படைத்தனர். நகைகளை சரவணனிடம் கொடுத்தனர். 

“இது அனைத்தும் கவரிங் நகைகள்”என்றார். அதை காதில் வாங்கிய திருடனுக்கு அவர்கள் மேல் கோபம் வந்தது. வந்து என்ன செய்ய? பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டான். 

எப்படியோ கதை முடிந்தது.

சரவணன் எல்லோரிடமும் ‘தொடர் கொலைகாரன் உடன் ஒரு நாள்’ கதையை சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!