ஒரு நாள் போட்டி கதை: இங்கு  எல்லாமே  சாதிதான்

by admin 2
75 views

எழுதியவர்: ஹரிஹர சுப்ரமணியன் 

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் டைனசரோடு!

வழக்கம் போல  அன்று அந்த   உருக்கு   ஆலை பரபரப்பாக  இயங்கி கொண்டு இருந்தது .  ஆலை  பிரபல  குழுமத்தை  சார்ந்ததாக  இருந்தாலும்   அதன் தலைமை  மேலாளர்    ராமன்   அப்பகுதியின் பிரபல சாதியை  சார்ந்தவர் ,

அந்த  குழுமம்  பல்வேறு   தொழில்  சாலை களை  பல் வேரு  இடங்களில்  நிறுவி   நல்ல முறையில்  இயங்கி வரும் ஒரு முன்னோடியான   குழுமம் .

தலைமை  மேலாளர்  ராமன்  சிறு வயது முதல்  அங்கு பணி புரிந்து   குழுவின் தலைமை நிர்வாகி மற்றும் அவர்தம்  குடும்பத்தினருக்குமிக வேண்டிய  ஒரு அதிகாரியாக  நீண்ட நாட்கள் பணி புரிந்து  வருபவர்  அன்னாரது  சாதியை  சார்ந்தவர்களுக்கு  மட்டும் முன்னுரிமை  எல்லா விஷயங்களிலும்,  அளிப்பவர் .

சமீப காலமாக  இந்த  விஷயம்   தலைமை நிர்வாகிக்கு  தெரிந்து   வேறு வழியின்றி  சரி சரி என  பார்த்து  அப்புறம் பார்க்கலாம் என்று   இருக்க ஆரம்பித்து  விட்டார் , தினசரி   எல்லா  அலுவலக  மற்றும் ஆலை  சம்பந்தப்பட்ட  முக்கிய பிரச்சனை  கள்  அவரது அறைக்கு  வரும் .

அன்றும்   பர பர பான வேளையில்  அலுவலக  மேலாளர்  மெல்ல கதவை திறந்து  ”  நமஸ்காரம்  சார் , ஒரு பிரச்சனை , தங்களது கவனத்திற்கு கொண்டு வராமலே  தீர்க்க முயன்றேன், ஆனால் எல்லை மீறும் போல  உணர்கிறேன் , :” என்று  பீடிகை போடுவதை கண்டு ” சொல்லுங்கள்  சார், , சொன்னால்தானே  தெரியும்  :”என்று கூறியதும் ” வேறு ஒன்றும் இல்லை  சார் , நம்ம  விற்பனை மேலாளர்  ரமேஷ்   சற்று  எல்லை மீறி போகிறார் , நீங்கள்தான்  சற்று அவரை  தட்டி வைக்க வேண்டும்  “

” சரி , என்ன விஷயம்  , சொல்லுங்க , விசாரிப்போம்  “

”  சார் , ஆபீஸ்க்கு  வரும்  தினசரி  தபால்களை   நான்  தான்  முதலில் பார்த்து  சம்பந்த பட்ட  செக்ஷன்களுக்கு  அனுப்புவேன் , ஆனால் இவர் தினமும்  அவரது  தபால் களை முதலில் பார்த்து  எடுத்து   பிறகு தான் எனக்கு அனுப்புகிறார்  .இந்த  ஆபீஸ்க்கு  நான் தான் முதல் அதிகாரி , எனக்கு  தெரியாமல்  ஏதாவது  நடந்து  விடுமோ என  அச்ச படுகிறேன் ” என்று  சொன்னதும்  ”  அப்படியா , நீங்கள் போங்க , நான்  பிறகு விசாரிகிறேன்  என்று சொல்லி அவரை அனுப்பி வைத்து பின்பு ரமேஷிடம்,  போனில் என்ன நடக்கிறது என்று  விசாரித்தார் .

ரமேஷும் அவரிடம்  ”   சார் , நான் முதலில்   தபால்  வந்ததும்   எங்க டிபார்ட்மென்ட் சம்பந்த பட்ட  கடிதங்களில்    வரவேண்டிய செக்  அல்லது டிராப்ட் கு  முக்கியத்துவம் அளித்து எடுத்து அன்றைக்கே  வங்கிக்கு அனுப்பினால்தான்  நமக்கு அடுத்த  விற்பனைக்கு தோதுவாக இருக்கும் , நம்ம  மேனேஜர்  முதலில் பார்த்து  எனது  பார்வைக்கு பல தடவை மறுநாள் தான்  வருகிறது .    அதனால் தான் நான்   இப்படி செய்தேன் , ஆனால்  மேற்படி  தபால்களை  அன்றைக்கே செக் / ட்ராப்ட்களை  எடுத்து கொண்டு  அவரது பார்வைக்கு அனுப்பிவிடு கிறேன் . நீங்க  சொன்ன  இனிமேல் மாற்றி கொள்கிறேன் சார் ” என பதில் கூறியதும்  ”  சரி சரி  , நான் பார்த்து கொள்கிறேன்  ”   என்று கூறி  போன் இணைப்பை  துண்டித்தார்,

  என்ன செய்வது என யோசித்தார்  ,  மனதிற்குள்  அவரே பேசி கொண்டார்

” என்னதான்  இருந்தாலும்  அலுவலக மேலாளர் நம்ம  சாதி, விற்பனை மேலாளர்  வேற சாதி கார பய புள்ள , நம்ம எடுக்கும் முடிவு நம்ம சாதி காரனுக்கு  சாதகமா  இருந்தால்தான் நமக்கு நல்லது .  சரி ,,,, உடனே  இதுக்கு   முடிவு கட்ட கூடாது , , நாளைக்கு பாத்து கொள்ளலாம்  என  முடிவெடுத்து  அன்றைய பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்தார் .

மறுநாள்  காலை   எல்லா  இலாகா  முக்கிய அதிகாரிகளுக்கு   மின் அஞ்சல்  தலைமை  நிர்வாகியின்   கணிப்பொறி மூலம்  இவ்வாறு சென்றது ”   சமீப காலமாக   நமது அலுவலக  தபால்கள்  சில  அதிகாரிகளால்  அலுவலக மேலாளர்  பார்ப்பதற்கு முன்னால்  அவர்களால்  பிரிக்க பட்டு நடவடிக்கை எடுக்க படுவதாக  நிர்வாகத்திற்கு   புகார்  வந்துள்ளது .இது நல்ல செய்கை அல்ல , மிகவும் கண்டிக்க தக்க ஒன்று . 

அவசரம்  என கருதி சிலர்     வேகமாக செயல்படுவதாக  எண்ணி  முன் கூட்டியே    நடவடிக்கை  எடுப்பது  இனிமேல் கூடாது , எந்த  சூழ்நிலையிலும்,   அலுவலக மேலாளர்  குறியீடு இன்றி  மேற்கொண்டு எந்த நடவ டிக்கையும்  எந்த  அதிகாரியும்  எடுக்க கூடாது  “

இந்த மின் அஞ்சல்  தான் அன்றைய  சூடான  விவாதமாக எல்லா  அதிகாரிகளும்  மெல்லிய குரலில் பேசப்படும் பொருளாக  இருந்தது . பெரிய சல சலப்பை   இந்த  செயல் உண்டு பண்ணி  பலர்   இது பற்றி தலைமை மேலாளரை   விமர்சிக்க  துவங்கி விட்டனர் .

முக்கிய  துறை அதிகாரியான   விற்பனை   மேலாளர்  ரமேஷ் அடுத்த நாள்  அமைதியாக  அவரது பணியினை பார்க்க  துவங்கும் பொது  அவரது உதவியாளர்  மெல்ல  வந்து  ” சார்  , நம்ம மும்பை  பார்ட்டி  இப்போதுதான் பேசினார் , பெரிய ஆர்டர்   நமக்கு தந்து  அதனுடன் பாதி அட்வான்ஸ்  தொகையினையும்  அனுப்பி யுள்ளாராம் , சரக்கு அவர்க்கு மிக  அவசர மாம் , உடனே  அனுப்ப சொன்னார்  ”      என கூறியதும்   பதிலுக்கு அவரிடம்  ” சரி , இன்றைக்கு  தபால்  இன்னும் நம்ம கைக்கு வரலை .  நம்ம அலுவலக மேலாளர்    பார்த்து  நமக்கு அனுப்படும் ,      நீங்க  லாரி காரர்களிடம் முதலில் சொல்லி வைத்து விடுங்க , சாயங்காலம்,  அனுப்பி விடுவோம் “” என்று கூறி   அடுத்த வேலைகளில் கவனத்தை  செலுத்த   அரம்பித்து விட்டார் .

சில மணி  நேரம் கழித்து  அலுவலக  பணியாளரிடம்  ” தம்பி  என்ன இன்னைக்கி  இன்னம்   சார் ரூமில்  இருந்து  தபால் ஒன்றும்  வரல ,, சார்  உள்ளே  இருக்காங்களா , இல்லை  வெளிய  எங்காவது போய் இருக்காங்களா ”  என  யதார்த்தமாக கேட்டார் ,  

அதற்கு அவர் ”  சார்  , இன்னிக்கு  நம்ம   அய்யா வீட்டுக்கு காலையிலேயே  போனார் , இப்ப வந்திடுவார் ”  என்று சொல்லி  வெளியே வந்து   அவரது சக  ஊழியர்களிடம் ” இந்த  ஆளுக்கு  வேற  வேலை இல்லை , நம்ம  சார்   பார்த்த  பிறகுதான் எல்லா தபால்களும் சம்பந்த பட்ட     அதிகாரிகளுக்கு  அனுப்ப  வேண்டும்  என்று  நம்ம பெரிய  அய்யா  சொல்லி விட்டார் , அதனால்  யாரும்   உள்ளே  போய்  ரமேஷ்  சார்  சொன்னார்  என  போய்  எடுத்து  குடுக்காதீங்க  என உத்திரவு போட்டு கொண்டு இருந்ததை   ரமேஷின்  உதவியாளர்  பார்த்து கொண்டு அதிர்ந்து போனார்

இந்த  விஷயத்தை  உடனே   ரமேஷின்  அறைக்கு   அவர் சென்று   அவரது காதில் மெல்ல போட்டு வைத்தார் .

ரமேஷும்   அதனை   மெல்ல   தெரிந்து  கொண்டு  என்ன ஆனாலும் சரி ..  இன்றைக்கு எப்படியாவது  இந்த லோட் தன்னை   அனுப்பியே ஆ க  வேண்டும் , எல்லா விடில்   நம்ம பேர்  கேட்டு விடும் ஏற்று  எண்ணி உடன் அலுவலக மேலாளரை  போன் மூலம்   தொடர்பு கொண்டு ”   சார் , நமஸ்காரம் .   உங்க அனுமதியோடு   உங்க டேபிளில்  இன்றைக்கு வந்த  முக்கிய  மான  ஆர்டர் ஒன்னு   உள்ளது , அதனை எடுத்து  நான்  இன்றைக்கு  அந்த லோட் தன்னை  அனுப்பி விட வேண்டி யூள்ளது . நீங்க  எப்போ  ஆஃபிஸ்  வருவீர்கள்” , சற்று தாமத மானால் அந்த தபாலை எடுத்து கொள்ளட்டுமா  ”    என்று  கேட்டதற்கு  அவரும்

பதிலுக்கு   ” பரவா  இல்லை  ரமேஷ் , நீங்க  நம்ம ஆபீஸ் உதவியாளரை கேளுங்க ,,    அவர் எடுத்து தருவார்  , மீறி அவர் கேட்டால் நான்  சொன்னதாக  கூறி  விடுங்க ” என்று  சொல்லி விட்டார்

ரமேஷும்  உடன் உதவியாளரை  கூப்பிட்டு ”    தம்பி , நான் சாரிடம் பேசி விட்டேன் ,     இந்த  தபாலை மட்டும் எடுத்து  தாங்க ” என்று  கூறி அவர்   திரும்ப  வருவதற்காக  காத்திருந்தார்

சரி சார் என   ரமேஷ் இடம் கூறிவிட்டு  அந்த  உதவியாளர் வெளியே  வந்து  தீரும் ப  மேலாளரிடம்   மெல்லிய குரலில்  “”  சார் ,  ரமேஷ் சார்  அந்த மும்பை தபாலை  அவசரமாக  கேட்கிறார் , எடுத்து தரவா “

உடன் மேலாளர்   ”    தம்பி , பக்கத்தில் யாரும் இல்லையே ?  ” என  வினவி  ”  நீ அதனை அவரிடம்   எடுத்து கொடுத்து விட்டு   வந்து  திரும்ப  என்னை  வெளியே  வந்து  கூப்பிடு ”  என்று கூறி அழைப்பை  துண்டித்தார்.

சில நிமிடங்கள் கழித்து   அலுவலக  உதவியாளர்   ” சார் , நீங்க சொன்ன படி  அந்த  தபாலை   ரமேஷ்  சாரிடம்  தந்து விட்டேன்  ”  என்று கூறவும்  அதற்கு  அவர்   :

  ”  தம்பி , நீ தபாலை  தரும்போது  யாரும்  உங்களை பார்க்க  வில்லையே ” என  கேட்க ”  சரி , நாளை   ஆஃபீசிக்கு விடுமுறை எடுத்துக்கோ , யாரவது நாளைக்கு போன் செய்தால்   எடுக்காதே ”     என்று கூறி  தொடர்பை  துண்டித்தார் .

அன்றைக்கு   ரமேஷ்   கூடுதல் நேரம்  எடுத்து அந்த  வியாபாரத்தை முடித்து  வீடு திரும்பினார் .

மறு நாள் காலை  வழக்கம் போல  ஆபீஸ்க்கு  சென்ற போது    அவரது உதவியாளர் ஓடி வந்து  வெளியே நின்ற வாறு  ”  சார் ,  நேத்தைக்கு நாம எவ்வளவு கஷ்டப்பட்டு  வேலை பாத்தோம் .   இன்னைக்கு  உங்களுக்கு நம்ம  தலைமை  அலுவலகத்தில்  இருந்து மெமோ கொடுத்து  விட்டார்கள் .   .இதோ  அந்த  மெமோ  ,    ” என்றவாறு கூறியதும் ரமேஷின் உடல் ஒரு கணம் ஆடியது .

மெமோ வை பிரித்து பார்த்து  அதிர்ந்து போனார் .

அதில்   அலுவலக  ஆணைகளை மதிக்காது தன்னியச்சையாக  செயல்பட்டு  அந்த குழுமத்திற்கு அவ பெயர்  ஏற்படுத்தி கொடுத்த காரணத்தினால்  அவர் மீது  ஒழுங்கு நடவடிக்கை ஏன்  எடுக்க கூடாது   என்று   எழுதி இருந்தாய் கண்டு  அப்படியே  ஆடி போனார் .

 இது திட்டமிட்டு அலுவலக மேலாளர்   வேண்டும் என்றே    தலைமை மேலாளரை கைக்குள் போட்டு  விளையாடி விட்டார் , இனி ஒரு கணம் கூட இங்கு இருக்க கூடாது   என்று முடிவெடுத்து   உடன்  அவரது  விளக்கங்களை   எழுத்து பூர்வமாக எழுதி   தனது சொந்த  பணி யின் காரணமாய்  உடன்  வேலையை  ராஜினாமா  செய்வததாக  எழுதி

தனது  உதவியாளரை கூப்பிட்டு  ” நீங்களே எனக்காக  நம்ம  தலைமை மேலாளரிடம்  கொடுத்து விட்டு  வாருங்கள் … எனது பணியினை  நான் ராஜினாமா செய்து  விட்டேன் , என் உடன் இது வரை  ஒத்துழைப்பு தந்து பணி செய்தமைக்கு நன்றி  ” என்று கூறவும்  அவரது  உதவியாளர்  உடன் அழுதே  விட்டார் .

அவரும்   ரமேஷ் சொன்ன படி   அந்த கடிதத்தை கொடுத்து விட்டு  திரும்ப  வந்த போது  ரமேஷ்  அவர் சீட்டில் இல்லை .

வீட்டுக்கு வந்ததும்  அவர் மனைவியிடம்   பக்குவமாக  நடந்ததை கூறி விட்டு , ஓய்வாக தொலை காட்சி செய்தியினை  பார்க்கையில்  பிரதம மந்திரி  நாட்டு மக்களுக்கு  நாம்,  எல்லோரும்  ஜாதி , மத வேறுபாடு இன்றி ஒற்றுமையாக  இருக்க  அறிவுரை சொல்லியதை  கேட்டு  முதலில்  ஜாதி  வேறுபாட்டை ஒழிக்க முயற்சி செய்ய்ங்க  ” என கோப பட்டு   தொலை காட்சி  இணைப்பை துண்டித்தார் ,.

பக்கத்து வீடு குழந்தை  பள்ளி வீட்டு பாடத்தை சத்தம் போட்டு

” ஜாதிகள்  இல்லையடி பாப்பா :”  என்று  உரத்த குரலில் பாடியதை கேட்டு கட கடவென சிரித்தார் .

இன்னும்  எத்தனை நாளைக்குத்தான்  சாதி யின் பெயரால் பொய் சொல்லி இந்த அரசியல் வாதிகளும் , அரசுமற்றும்,  தனியார்  அதிகாரிகளும்   ஏமாற்றுவார்களோ ??

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பாமர ஜனங்கள் இந்த    அதிகார வர்க்கத்தை  நம்பி  ஏமாறுவார்களோ  ??

ஆயிரம்  காந்தி  வந்தாலும் இந்த  நாட்டை  திருத்தவே முடியாதா ??

தினம் தினம்  இந்த பாழாய் போன   சாதி  என்ற  டயனோசர்   ஏன்தான்  நம்மை   இப்படி  ஆட்டுவிக்கிறதோ  என்று  மனம்  புழுங்கி   நொந்து போனான்  ரமேஷ் .

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!