எழுதியவர்: ஹரிஹர சுப்ரமணியன்
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் தொடர் கொலை காரனோடு!!
அவசர வேலை காரணமாக ஹரி அன்று மதுரை செல்ல அரசு பஸ்சில் ஏறி விட்டான் , நல்ல கூட்டம் , ஒரு இருக்கையில் ஓரளவு குண்டாக பெண் ஒருவர் ” தம்பி , இங்கன வந்து உக்காருங்க ” என்று அன்புடன் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது .
சரிதான் என்று உட்கார்ந்து சற்று கண்ணை மூடினான் , பேருந்தும் நல்ல வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் போது பக்கத்தில் உட்கார்ந்த பெண்மணி எவருடனோ அலை பேசியில் உரத்த குரலில் ” நீ சும்மாவா இருந்த , அவ அந்த பேச்சு பேசினா, சப்புன்னு கன்னத்திலே ஒரு வைப்பு வச்சா பேசாம இருப்பா ” என்று அறிவுரை சொன்னதும் திடுக்கிட்டு ஒரு மாதிரியாக அந்த அம்மாவை பார்த்தான் .
அவர் இதை பற்றியும் கவலை படாமல் அடுத்த நபருக்கு டயல் செய்து ” ஏலே , மணி , அவன் பேசுனா நீ எங்கனே பராக்கு பாத்துகிட்டு இருந்த , உனக்கு பேச தெரியாதா ?? ” என்று அடுத்த அறிவுரையை தொடர்ந்து ஹரியை சற்றும் கூட தூங்க விடாமல் தொண தொண வென்று அறிவுரை சொல்லியே வந்தாள்.
அடுத்த நிறுத்தத்தில் பின் சீட்டில் ஒரு பயணி இறங்கியது கண்டு மெல்ல அந்த சீட்டை நோக்கி மாறி விட்டான்.
அந்த சீட்டில் அடுத்த இம்சை ஒரு அரசியல் வாதி போல இருந்த ஒருவர் ” அண்ணாச்சி , இப்படியாவது இந்த தடவை எனக்கு ஒரு வாய்ப்பு தாங்க , உங்களை எப்படி கவனிக்க முடியுமோ அப்படி கவனிச்சு விடுறேன் ” என்ற உரத்த குரலில் கெஞ்சியவாறு வந்தது சற்று எரிச்சலை அளித்தது .
” சார் , கொஞ்சம் மெல்ல பேசுங்க , அடுத்தவங்களுக்கு இடைஞ்சலாக இருக்கு ” என்று பவ்யமாக சொன்னான் அதற்கு அந்த அரசியல் புள்ளி ” தம்பி , நீங்க வேணா ஒரு தனி கார் புடிச்சு போங்க . நானும் டிக்கெட் வாங்கத்தான் வாரேன் ” என்று மீசையை தடவிய வாறு சொன்னது ஒரு வித பயத்தை அளித்தது .
இரு பயணிகளும் கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல் சத்தமாக பேசி வந்தது சக பயணிகள் எல்லோருக்கும் ஒருவித எரிச்சலைத்தான் அளித்தது . அனால் ஒருவரும் ஏதும் சொல்லாது வியப்பை அளித்தது ,
ஊசியாக ஒரு என்டேர்டைன்மெண்ட் என்று ஒரு சிலர் நினைத்த இருக்கலாம் என்று எண்ணியவற்று ஹரியின் பையில் இருந்த ஒரு சிறு துண்டை எடுத்து காதுகளை மறைத்து கொண்டான் .
சில சின்ன வயசு பயணிகள் எதனையும் பற்றி கவலை படாது காதில் வயரை மாட்டி போன் மூலம் பாட்டு கேட்டு வந்தது ஹரிக்கு ஆஹா , இந்த இம்சை களிடம் இருந்து தப்பிக்க இப்படி வழி இருக்கா?? என எண்ணி ஒரு வழியாக மதுரை வந்து சேர்ந்தான் . நல்ல பொழுது போக்கு என எண்ணி யவாறு அந்த பெண்மணியின் அறிவுரை களை யூம் , அரசியல் வாதியின் கெஞ்சலையும் எண்ணி எண்ணி சிரித்தவற்று வீடு வந்து சேர்ந்தான் .
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.