எழுதியவர்: சிந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் தொடர்கொலைகாரனோடு!!
காலை 4.30 மணியளவில் அயர்ந்துக் கிடந்த திவ்யாவின் கைபேசியில் அழைப்புத் தொடங்கியது. நேரத்தைப் பார்த்து உறக்கத்தில் இருந்த அவள் மெல்ல எழுந்து, “யார் இந்த நேரத்தில்…?” என்ற சந்தேகத்துடன் போன் எடுத்தாள். மறுபக்கம் இருந்து ஒருவன் பிசகிய குரலில் , “உங்கள் உதவி தேவை…. நான் பேசலாமா… என் பெயர் கார்த்திக்…” என்றான். மீண்டும் அவனே பேச தொடர்ந்தான்.
” எனக்காக ஒரு ஐந்து நிமிடம் தாருங்கள்…. எனக்கு யாரிடம் பேச வேண்டும் என்றும் தெரியவில்லை…. நான் எனக்கு தெரிந்தது போல எண்களை என் அலைபேசியில் அழுத்தினேன்…. என் அழைப்பை ஏற்றது நீங்கள் மட்டும் தான்….!! தயவுசெய்து அழைப்பை தூண்டிக்காதீர்கள்…!!!” என்று குரல் தழுதாலுத்தவாறு கூறினான்…
அவனது குரலில் அதிர்ச்சியும் வலியையும் உணர முடிந்தது. திவ்யா ஒரு செவிலியர் என்பதால் இறக்க குணம் கொண்டவள்…. தன் வேளையில் எந்த முக சுழிப்பும் இன்றி முழுமனதோடு வேலை செய்பவள்…
“உதவி” என்று நேரடியாக வந்த வார்த்தையால் நீதானித்தவள் “யார் நீங்கள்….? என்ன பிரச்சனை…?” என்று திவ்யா கேட்டாள்.
“அது…. அது…நான்… நான் ஒரு கொலைகாரன்…” என்று அவன் கூறிய வார்த்தை ஈட்டி போல் திவ்யா மனதில் பாய்ந்தது.
திவ்யா அதிர்ச்சியடைந்தாள்…. தான் பேசுவது “சரியா…?? தவறா…??” என்ற யோசித்தால்.இருந்தும் அவளது இதயம் அவன் குரலின் வலியைப் புரிந்துகொள்ள முயற்சித்தது. “எதற்காக எனக்கு அழைத்தீர்கள்?” என்று அவள் கேட்டாள்…
அவன் அமைதியாக, “நான் என் வாழ்க்கையை முடிக்க நினைக்கிறேன். ஆனால் யாரிடமாவது மனம் விட்டு பேச வேண்டும் என்பதற்காக தற்செயலாக உங்கள் நம்பரை அழைத்தேன்…” என்றான்.
கார்த்திக் தனது வாழ்க்கையைச் சொல்லத் தொடங்கினான்.
“நான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். என் அப்பா அடிக்கடி குடித்துக் விட்டு என்னையும் என் அம்மாவையும் கொடுமைப்படுத்தினார். அப்பா மறைவுக்கு பிறகு, என் அம்மா என்னைத் தனி ஆளாக போராடிக் காப்பாற்றினார்கள். ஆனால் அந்த வாழ்க்கை எனக்கு நீடிக்கவில்லை. நான் என் 10 வயதுக்குள் அம்மாவையும் இழந்தேன். தனி ஆளாய் உணர்ந்தேன். வெறுப்பு, கோவம், பகை உணர்வு மட்டுமே என்னிடம் மேலோங்கியது. உறவினர் அனைவரும் என்னை வெறுத்து ஒதுக்கினர். சிறு வயதில் என் உறவினர் செய்த கொடுமை என்னை வதைத்தது. அம்மாவின் பிரிவு என்னுள் தாங்க முடியாத வலியை கொடுத்தது.”
இப்போது திவ்யாவின் மனம் ஏனோ பாரமானது. பெருத்த அமைதிக்கு பின் ” ம்……” என்றது அவள் குரல்… அவளது குரலில் இருந்த மென்மை கார்த்திக்குக்கு மேலும் பேச வேண்டும் போலத் தோன்றியது.
“நான் தனிமையில் வளர்ந்தேன். என் வாழ்க்கையில் நல்லவர்களாக யாரும் இருந்ததில்லை. எனக்கு நண்பர்களாக இருந்தவர்களும் என் முரட்டு குணம் கண்டு ஒதுங்கி நின்றனர். இத்தனை ஆண்டுகள், என் கஷ்டங்களை புரிந்துகொள்ள யாரும் இருந்தது இல்லை. சுற்றி உள்ளவர்களின் நிராகரிப்பு என்னை தவறான வழியில் இட்டுச்சென்றது.” என்றதும் மௌனமானன்…
சில நிமிட அமைதிக்கு பின் “நான் நான்கு பேரை கொன்றிருக்கிறேன். என்னால் அவர்களின் முகத்தை மறக்க முடியவில்லை. ஆனால்…”
திவ்யா மௌனமாக அவன் கதையை கேட்க, அவன் மீண்டும் தொடர்ந்தான்.
“ஆனால் அவர்கள் அனைவரும் என் அம்மாவை இழந்த நேரத்தில் என்னை விரட்டியவர்கள். அவர்கள் என் உடலில் ஏற்படுத்திய காயம் இன்னும் மறையவில்லை. பல ஆண்டுகளுக்கு பிறகு என் அப்பா, அம்மா இறப்புக்கு காரணம் என் உறவினர் தான் என்ற அறிந்தவுடன் அவர்களை கருணை இல்லாமல் கொன்றுவிட்டேன். அந்த நேரத்தில் என் மனம் அவர்களை மன்னிக்க மறுத்துவிட்டது. பணப்பேய்கள்…. “
” என்னைய கொடுமை செய்த தூரத்து உறவினர் பாட்டி மற்றும் மாமாவை முதலில் கொன்றேன்.என் பக்கத்து வீட்டில் இருந்து கொண்டே பாசம் காட்டி என் அப்பாவிற்கு சாப்பாட்டில் விஷம் கலந்து விட்டனர். அந்த விஷயம் கேட்ட பின் அவர்களை கொள்ளாமல் விட்டால் தான் என் தவறு…” என்று அலைபேசியை ஒருக்கையில் வைத்து கொண்டு, இன்னொரு கையால் சுவரை குத்தினான்…
“அடுத்து என் அத்தை… அவர்களை நினைத்தால் என் ரத்தமெல்லாம் கொதிக்கிறது.என் அம்மாவை பற்றி தவறான வந்தந்திகளை பரப்பி, என் அம்மாவை தற்கொலை செய்ய வைத்துள்ளனர். என் அம்மாவை உயிரோடு வார்த்தைகளால் வதைத்திருக்கிறாள். கடைசி நாளில் நான் பார்த்த என் அன்னை முகம்,இன்னும் எனக்குள் அழியாத கண்ணீர்விடும் ஓவியம்….!!” என்று கண்ணீரை வழியவிட்டான்.
” கடைசியாக அவர்கள் மகன் என்னை கத்தியால் வயிற்றில் குத்தினான். எதிர்பாராத நேரத்தில் நடந்ததால் நானும் ஒரு இருட்டு அறையில் மேஜையின் அடியில் ஒளிந்திருந்தவனை நோக்கி கத்தியை வீசினேன். அவன் அலறிய பின்பே தெரிந்தது அவன் சிறுவன் என்று.
“அம்மாஆஆஆஆ… அம்மாஆஆஆஆ” என்று அலறினான். யாரும் வரவில்லை. நானும் சென்று அவனை கையில் எந்தினேன். “என்னை தொடாதே…..!!” என்று கத்திவிட்டான்.
அவன் கடைசி முயற்சியாக “அப்பாஆஆஆஆ …. அப்பாஆஆஆஆ….. என்னை காப்பாத்துங்க…” என்று அழுதுக்கொண்டே இருந்தான். என்னை பார்த்துக்கொண்டே அவன் இறுதி மூச்சும் நின்றது. “பாவிகளை சம்ஹாரம் செய்யதான் சென்றேன். ஆனால்…..” என்று கண்களில் கண்ணீரோடு நின்றான். வார்த்தை வர மறுத்தது… உடல் இறுகியது..மனம் கல்லானது..
“நீங்கள் யாரென்று தெரியாது… முகம் தெரியாத தேவதையான உங்களை நான் இறுதியாக அம்மா என்று அழைக்க விரும்புகிறேன்…” என்று கூறி “அம்மாஆஆஆஆ அம்மாஆஆஆஆ….. என்னை மன்னிசுடும்மா … நான் ஒரு பாவி…. எனக்கு உயிர் போற மாதிரி வலிக்குதும்ம்மாஆஆஆ…..என்னை மன்னிச்சுடும்மா…. எனக்கு வாழ ஆசை இல்லை…. நானும் உன்னோடு வரேன் அம்ம்மாஆஆஆஆ….” என்று கத்தி அழுதான்….
திவ்யா கண்களில் இருந்தும் கண்ணீர் வந்தது….ஆழமாக சிந்தித்தாள். சிறுவயதே ஆனாலும் அவனிடம் இருந்து வந்த ” அம்மா ” என்ற வார்த்தை திவ்யா உயிர் வரை அசைத்தது… “எவ்வளவு பெரிய ஆடவம் யாரென்று தெரியாத என்னிடம் அவன் தவறுகளை சொல்லி மன்னிப்பு வேண்டுகிறான்.”
கார்த்திகின் இறுகிய மனநிலையை உணர்ந்தவள், “கார்த்திக், நீங்கள் தண்டனையை அனுபவிக்க வேண்டும்….!! ” என்றதும் அந்தப்பக்கம் மௌனம் மட்டுமே…
“மாற்றம் மட்டுமே மாறாத ஒன்று ” நினைவில் வைத்து கொள்ளுங்கள்… புதியவரான உங்களிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை… ஆனால் ஒரு தாயாக இதை சொல்கிறேன்..
“வாழ்க்கை பாதை மாற போவதை உணருங்கள். பிறரை சார்த்து மட்டுமே வாழக்கூடிய நிலையில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். முடியாதவர்களுக்கு சிறு உதவி செய்து பாருங்கள்… அது எவ்வளவு பெரிய மன மாற்றத்தையும், நம்பிக்கையையும் கொண்டுவரும் தெரியுமா…!! தவறை திருத்திக்கொள்ள நினைக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். சரியான பாதையை தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள்.வாழ நினைத்தால் வழிகள் ஆயிரம் உண்டு….!!”
அவன் முதலில் கேள்வியுடன் இருந்தான். ஆனால் திவ்யாவின் எளிமையான வார்த்தைகள் அவனை உணர்வுகளால் கட்டிப்போட வைத்தது . அவளிடம் வழிமுறைகளை கேட்டு, போலீஸில் சரணடைந்தான்.
கார்த்திக் சிறையில் இருந்தாலும், திவ்யாவின் வார்த்தைகள் அவனது மனதை மாற்றின. சிறைவாசம் அவனுக்கு குருக்குலமாக மாறியது. அவன் தகுதிக்கு ஏற்றவாறு தொழில் கற்றுக்கொண்டு சிறையிலேயே அதை செவ்வனே செய்ய ஆராம்பித்தான்.
ஆண்டுகள் கழித்து, திவ்யா அவனைச் சந்திக்க, கார்த்திக் ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பது தெளிவானது. கார்த்திக்கின் தெளிவான, நம்பிக்கையான வார்த்தைகள் அவள் மனதிலும் சந்தோசத்தை கொடுத்தது… தாய் போன்று சரியான நேரத்தில் வழி காட்டிய திவ்யா காலில் விழுந்து வணங்கினான். அவள் அவன் வாழ்வில் தாயாகிப் போனாள்…
சிறு உரையாடல், அன்பான கேள்வி, மனிதத்தன்மையுடன் கூறிய வார்த்தைகள் கூட சிலரின் வாழ்க்கையை மாற்றக் கூடியவை.
“மனம் அது செம்மையானால் , வினையெல்லாம் செம்மை பெரும்…”
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.