எழுதியவர்: சு.சுமிதா
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் டைனசரோடு!!
சரிதா எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். சரிதாவின் அப்பா மனோகர் டெல்லியில் உள்ள ஒரு வங்கியில் வேலை கிடைத்ததால் அவர்கள் தங்கள் ஊரான வேலூரில் உள்ள அழகு சேனை கிராமத்தில் இருந்து டெல்லிக்கு 5 வருடங்களுக்கு முன்பே சென்று விட்டனர். ஐந்து வருடங்களாக தனது தாத்தா பாட்டியை பார்க்காத சரிதாவிற்கு அவர்களை பார்க்க வேண்டும் என்று எண்ணம் அதிகமாக இருந்தது. இவர்களாலும் அங்கு செல்ல முடியவில்லை அப்பாவிற்கு பல வேலைகள் இருந்ததால் அங்கு போகும் வாய்ப்பும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. சரிதா படிக்கும் பள்ளியில் அன்று டைனோசரை பற்றிய காணொளி போட வேண்டும் என்று அரசாங்கம் அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட்டிருந்தது. அதுபோல, காணொளியை அன்று பள்ளியில் காண்பித்தனர். அந்த காணொளியில் டைனோசரை பற்றிய தகவல்களை தன்னுடைய நண்பர்களுடன் மகிழ்ச்சியோடு தெரிந்து கொண்டாள் சரிதா. அன்று வீடு திரும்பிய போது உன்னுடைய பாட்டி இன்னும் இரண்டு நாட்களில் இங்கு வந்து விடுவார் என்று கூறினார் சரிதவின் அம்மா கௌரி. இதை கேட்ட சரிதாவிற்கு இனம் புரியாத ஆனந்தம் ஏற்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து சரிதாவின் பாட்டியும் டெல்லியில் உள்ள அவர்களின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அதைப் பார்த்த சரிதாவுக்கு பேரானந்தம் ஏற்பட்டது. பாட்டியை பார்த்தவுடன் கட்டி தழுவி பாட்டி, உங்கள எவ்வளவு மிஸ் பண்ண தெரியுமா ? பாட்டி நீங்க இங்கேயே இருங்க என்று கூறினாள் சரிதா.அதற்கு பாட்டி சரி,என்னுடனே நீயும் ஊருக்கு வந்து விடுகிறாயா ?என்று கேட்டார் பாட்டி.ஊரில் நமது வயலில் பயிர்கள் நட்டுள்ளோம், நமது வீட்டில் கருப்பு நிற பூனையும் வெள்ளை நிற பூனையும் துள்ளி விளையாடும் , புதிதாக நமது வயலை பார்த்துக் கொள்வதற்காக இரண்டு நாய்க்குட்டிகளை எடுத்து வந்துள்ளோம், அடுத்த வருடம் நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்காக நமது வீட்டில் காளையொன்று தயாராகி வருகிறது அதை எல்லாம் நீ பார்க்க வேண்டாமா? என்றார் பாட்டி. சரிதாவிற்கு இதையெல்லாம் கேட்டபோது உடனடியாக இவற்றையெல்லாம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கரை புரண்டு ஓடியது. அவற்றை எல்லாம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க ஆரம்பித்து விட்டாள் சரிதா.ஆனால், சரிதாவிற்கு தற்போது விடுமுறை இல்லாத காரணத்தால் எப்படி பாட்டி வீட்டிற்கு செல்வது என்று நினைக்கும் பொழுது சரிதாவின் முகம் சுருங்கி போகி விட்டது. சரிதாவின் முகம் சுருங்கியதை பார்த்த பாட்டி அவளை சரிசெய்வதற்காக உன்னோட பிறந்தநாளுக்கு நான் எந்த பரிசும் கொடுக்கவில்லை அல்லவா, இப்போ நான் உனக்கு ஒரு பரிசு தரப்போகிறேன் என்றார் பாட்டி. அதை கேட்ட சரிதா மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள். பாட்டி, இந்த கடிகாரம் என்னோட அப்பா எனக்கு தந்தது . இதை நான் உனக்குத் தர போறேன் நீ இதை பத்திரமா வைத்துக்கொள் சரியா… என்றார் பாட்டி. கடிகாரத்தை வாங்கி பார்த்த சரிதா அதன் பழமையை பார்த்து ஏமாற்றம் அடைந்தாள். இதை வேண்டாம் என்று சொன்னால் பாட்டி வருத்தப்படுவாங்களோ ,என்று எண்ணி, சிரித்துக்கொண்டே ரொம்ப தேங்க்ஸ் பாட்டி என்று வாங்கிக் கொண்டாள். அன்று இரவு தூங்கி விழித்து காலையில் எழுந்த போது பாட்டி கொடுத்த அந்த கடிகாரத்தை பார்த்தாள் அதில் நேரம் தவறாக ஓடியதை திருத்தி வைக்க முயன்றால் சரிதா.அப்போது அதிலிருந்து திருகாணியை திருப்பவே முடியவில்லை. வேகமாக திருப்பினாள். அப்போது அதிலிருந்த முள் எதிர் திசையில் சுழன்றது.சரிதா, அவ்விடத்தை விட்டு மாயமாகி போனாள். வீட்டில் எல்லோரும் சரிதா ,எங்கே ?என்று தேடிக் கொண்டிருந்தனர். மயங்கிய சரிதா கண் விழித்துப் பார்த்தபோது,அடர்ந்த காட்டில் இருந்தாள்.என்னவென்று புரியவில்லை வீட்டில் இருந்த நாம் எப்படி இங்கு வந்தோம் ? என்று சிந்தித்துக் கொண்டே சரி வீட்டிற்கு போகலாம் என்று வழியை தேடினாள். அப்போது ஏதோ ஒரு பயங்கர சத்தம் கேட்டது பயந்து போன சரிதா சுற்றும் முற்றும் பார்க்கும்போது தன் பின்னால் ஒரு டைனோசர் நின்றதை பார்த்தவுடன் பயந்து ஓட தொடங்கினாள் …அதில் அந்த கடிகாரத்தை அந்த இடத்திலேயே தவறி விழுந்ததை கவனிக்காத சரிதா கொஞ்சம் தூரம் ஓடிய பிறகு மூச்சு வாங்கியது . ஓடியதில் தாகம் எடுத்தது. தண்ணீர் எங்காவது கிடைக்குமா என்று தேடினாள். அருகில் சலசலவென்று சத்தம் கேட்டது சென்று பார்த்தால் சிறு அருவி கொட்டியது. அங்கு சென்று தண்ணீரை குடித்து கொண்டிருந்தாள் . அப்போது பல டைனோசர் அங்கு தண்ணீர் குடிப்பதற்காக வந்தன. அதைப் பார்த்து அருகில் இருந்த புதரில் ஒளிந்து கொண்டாள் . டைனோசர்கள் மிக அழகாகவும், பெரிய உருவத்துடனும் இருந்தன. தண்ணீரை குடித்துவிட்டு அங்கிருந்து சென்றன. இதை பார்த்த சரிதாவுக்கு முன்னாடி நாள் பள்ளியில் போட்ட காணொளி நினைவுக்கு வந்தது. அதில், டைனோசர்கள் ஒரு தாவர உண்ணி என்றும்,அது 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவை என்றும், அது 110 முதல் 130 அடி வரை அதன் உயரம் இருக்கும் என்றும், அதன் மூளைக்கு ரத்தம் செல்ல 50 அடி வரை கடக்க வேண்டும் என்றும், டைனோசர் என்பதன் பொருள் சிலர் “டெரிபில் லிசா்ட் “என்றும் சொல்கிறார்கள் ,அதில் சிலர் “ஃபியூர்புலி கிரேட்”என்றும் சொல்கிறார்கள் என்றும் ,இதில் “ஃபியர்புலி கிரேட்”என்பது தான் சரியான பொருள் என்றும், சில டைனோசர்களுக்கு செதில்களும் சில டைனோசர்கள் இறகுகளும் இருக்கும் என்ற பல விஷயங்களை தெரிந்து கொண்டதை நினைவு கூர்ந்தாள். அப்பொழுது தான் சரிதா சிந்தித்தாள் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாடி தான் டைனோசர் வாழும் என்று சொன்னார்கள்.இப்பொழுது எப்படி என்னால் பார்க்க முடியும்?என்று சிந்தித்துப் பார்த்தாள். அப்போது தான் அவளுக்கு ஒன்று புரிந்தது. நாம் காலம் கடந்து வந்திருக்கிறோம் என்று. நாம் எப்படி காலம் கடந்து வந்தோம் என்று சிந்திக்கும் பொழுது கடைசியாக என்ன செய்து கொண்டிருந்தோம் என்பதை நினைவு கூர்ந்தாள் சரிதா. அப்போதான் அவளுக்கு புரிந்தது பாட்டி கொடுத்த அந்த கடிகாரத்தை திருப்பும் போது தானே இப்படி நடந்தது என்று. கையில் இருக்கும் கடிகாரத்தை திரும்பியும் திருப்பினால் நாம் நம்ம யுகத்திற்கே போய் விடலாம் என்று எண்ணினாள். சரி கடிகாரத்தை திருப்பலாம் என்று கையை பார்த்தபோது கடிகாரம் கையில் இல்லை. ஐயோ,எங்கே போட்டோம் என்று தெரியவில்லையே எப்படி நமது வீட்டுக்கு போவது என்று சிந்தனையில் ஆழ்ந்தாள் சரிதா. சிந்தனையில் ஆழ்ந்திருந்த போது அவளை சுற்றி வளைத்தன டைனோசர்கள். அவளை அவைகள் தாக்க முற்பட்டன. என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணை மூடி கொண்டிருந்த சரிதாவை “மைக்ரோரேப்டர்” என்ற இறகு வைத்த டைனோசர் அவளைக் காப்பாற்றியது. வியந்து பார்த்தாள் சரிதா. அந்த இடத்தை விட்டு டைனோசர்கள் சென்றதும் அவள் தன்னை காப்பாற்றிய டைனோசரிடம் சென்றாள். தனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டாள். அந்த டைனோசரும் தலையை அசைத்தபடி அவளை கூட்டி சென்றது. போகும் வழியில் அவள் ஒரு மரத்தைப் பார்த்து அதிலிருந்த பழங்களை பறிக்க முயன்றாள் அதை பார்த்த அந்த டைனோசர் அந்தக் கிளையை அவளுக்கு அருகில் வருமாறு அழுத்தி பிடித்தது. மகிழ்ச்சியோடு அந்த கனிகளை பறித்து உண்டாள் சரிதா. சிறிது தூரம் சென்ற பிறகு டைனோசருக்கு களைப்பா இருந்ததால் ஒரு இடத்தில் அமர்ந்தது அந்த டைனோசருடன் சரிதாவும் சென்று அமர்ந்திருந்தாள். காலையிலிருந்து ஓடிக் கொண்டிருந்ததால் அவளுக்கும் களைப்பு ஏற்பட்டது . களைப்பில் தன்னை மறந்து உறங்கினாள். அப்போ அந்த டைனோசர் சரிதாவை கொசு கடித்து அவள் சொரிந்த படி உறங்குவதை பார்த்து கொசுவை விரட்டி தன் இறகால் அவளை அனைத்த படி இருந்தது. சிறிது நேரம் கழித்து அவள் அருகில் ஒரு பாம்பு மெலிந்து வந்தது. அதைப் பார்த்த டைனோசர் அதையும் தூரமாக தள்ளிவிட்டது. தன்னை கவனமாக பார்த்துக் கொண்டதை சரிதா கவனித்தாள். வழி தேடி அலையும் பொழுது டைனோசரின் காலில் முள் தைத்தது. டைனோசரால் வலி தாங்க முடியாமல் கத்தியது , அதைப் பார்த்த சரிதா ஏன் டைனோசர் கத்துகிறது? என்பதை கவனித்தாள். அப்போது காலில் முள் தைத்திருந்ததை பார்த்தாள்.சரிதா உடனே அந்த முள்ளை, அதற்கு வலிக்காமல் எடுத்தாள். இதனால் டைனோசருக்கும் அவள் மேல் சிறு அன்பு ஏற்பட தொடங்கியது. சரிதா, டைனோசர் இருவருக்கும் இடையில் நட்பு மலர தொடங்கியது.டைனோசரும் சரிதாவும் விளையாடி கொண்டே காட்டை சுற்றினார்கள்.அவள் ஓடி வந்த கால் பாதங்களை பார்த்த டைனோசர் அந்த பாதையை நோக்கி அவளை அழைத்துச் சென்றது. அவளும் அந்த டைனோசர் பின் தொடர்ந்தாள். அவள் வந்த இடத்தை பார்த்தபோது, அவள் தொலைத்த கடிகாரத்தை தேடினாள். கடிகாரம் கிடைத்தது. அவளுக்குள் அப்பாடி நாம் வீட்டுக்குப் போகப் போகிறோம் என்ற எண்ணமும் டைனோசரை விட்டு பிரியப் போகிறோம் என்ற வருத்தமும் இருந்தது. டைனோசருக்கும் மனதில் சரிதாவை பிரிய போகிறோமோ என்ற வருத்தம் ஏற்பட்டது.சரிதா, மனதை தைரியப்படுத்திக் கொண்டு டைனோசர் ரொம்ப நன்றி! நீ என்னை ரொம்ப நல்லா பாத்துக்கிட்ட நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன் என்றாள் சரிதா. டைனோசர் கண்களில் நீர் பெருகியது. கட்டி தழுவிக் கொண்டனர் இருவரும்.கண்களைத் துடைத்தவாறே, சரி டைனோசர் பார்த்து பத்திரமாக இரு என்று சொல்லியபடி அந்த கடிகாரத்தை சுழற்றினாள் சரிதா. மீண்டும் அவள் நிகழ்காலத்திற்கே வந்துவிட்டாள். அவர்கள் அம்மா அப்பா எங்கே சென்றாய்? என்று கேட்டனர். அதற்கு அம்மா, அம்மா என்றாள். நாம் சொல்வதை நம்புவார்களா?என்று எண்ணி அம்மா நான் இங்கே பக்கத்தில் போயிருந்தம்மா என்றாள் சரிதா .சொல்லியபடியேஅவள் அறைக்கு சென்றாள். அன்று பள்ளிக்கு கிளம்பி சென்று பள்ளியில் மாடு எப்படி தன் இறையை வயிற்றில் இருந்து கொண்டு வந்து அசைப்போடுமோ அதேபோல, அவள் டைனோசரடன் இருந்த நினைவுகளை அசைப் போட்டுக் கொண்டிருந்தாள். அந்த நாளை அவளால் எப்பொழுதுமே மறக்க முடியாத அளவுக்கு ஒரு சிறந்த நாளாக அவளுக்கு தெரிந்தது. வீட்டிற்கு சென்று மீண்டும் அந்த கடிகாரத்தை சுழற்ற முற்பட்டால் ஆனால் அந்த கடிகாரம் ஒரு சாதாரண கடிகாரமாக நேரத்தை சரியாக காண்பித்தது. இது பார்த்தவுக்கு ஏமாற்றம் அடைந்தாள் சரிதா. இருந்தாலும் டைனோசருடன் ஒரு நாள் இருந்த அந்த நினைவுகள் அவள் மனதில் அசைப்போட்டு கொண்டே இருந்தன….
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.