ஒரு நாள் போட்டி கதை: கொலைகார காதலன்

by admin 2
36 views

எழுதியவர்: சபி அரவிந்த்

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் தொடர் கொலைகாரனோடு!

அன்று மகி காரில் சென்று கொண்டிருந்தாள். அன்று தன் தந்தையிடம் சண்டை போட்டுவிட்டு இரவு வேலையில் சரியாக 10:30 மணி இருக்கும் அவள் காரை எடுத்துக்கொண்டு மெயின் ரோட்டில் வேகமாக பறந்து கொண்டு இருந்தாள்.

             அப்போது ஒருவர் நடுரோட்டில் கைகாட்டி லிப்ட் கேட்டார். இருட்டில் சரியாக முகம் தெரியாததால்,அவள் வேகமாக செல்ல முற்பட்டார். ஆனால் அவர் விடுவதாக தெரியவில்லை காரின் மிக அருகில் வந்து நின்று விட்டார். என்ன செய்வது என்று அறியாமல் வண்டியை நிறுத்தினால் மகி.

        அவள் ஏற்கனவே கோபத்தில் இருந்ததால் கீழே இறங்கி வந்து என்ன நினைச்சுட்டு இருக்கீங்க! எதுக்கு இப்படி வந்து முன்னாடி நின்னுட்டு கஷ்டப்படுத்துறீங்க! என்று கோபமாக சண்டையிட்டால், ஆனால் அவர் எதையும் காது கொடுத்து கேட்காமல் வேகமாக சென்று காரில் அமர்ந்தார். 

        என்ன நான் பாட்டுக்கு கத்திகிட்டு இருக்கேன், சும்மா நீங்க பாட்டுக்கு வந்து வண்டியில ஏறுறீங்க! என்று மீண்டும் அதட்டினால், சாரி மேடம் இந்த பக்கமா எந்த வண்டியும் வரல, போற வழியில் ஒரு முக்கியமான வேலை  ப்ளீஸ்…. என்றான்,

           அவன் பொறுமையாக கேட்டுக் கொண்டதால் மகியும் அமைதியாக காரில் ஏறி அமர்ந்தால், சிறிது தூரம் வந்ததும் அவன் மேடம் கொஞ்சம் காரை நிறுத்துங்கள் ப்ளீஸ்…. என்றான்.

          சாரி என்ன மன்னிச்சிடுங்க என்று காரின் சாவியை கழட்டிக்கொண்டு ஒரு ஐந்து நிமிடம் இருங்க மேடம் வந்துவிடுகிறேன், என்றவன்…சாரி நான் சாவி எடுக்கலைன்னா நீங்க என்ன விட்டுட்டு போயிடுவீங்க என்று வேகமாக சென்றான். 

        அவளுக்கு கோபம் உச்சிக்கே எறியது, இவன் யாருன்னே தெரியல இப்படியெல்லாம் பண்றான் என்று ரொம்ப டென்ஷனாக நின்றாள். அவன் சொன்னது போலவே அவன் ஒரு ஐந்து நிமிடத்தில் மீண்டும் வந்து விட்டார். சாவியை மகியிடம் கொடுத்து போலாம் மேடம் என்றான். 

          இதே போல மீண்டும் சிறிது தூரம் சென்றதும் பத்தாவது தெருவில் இறங்கி அதேபோலவே சாவி எடுத்துக்கொண்டு ஐந்து நிமிடம் என்றான். ஐந்து நிமிடத்திற்கு பிறகு அவனை வந்து காரில் ஏறிக்கொண்டு என்னை அந்த தெருவின் முனையில் வந்து விட்டு செல்லுமாறு கூறினார்.

           என்ன செய்வது என்று தெரியவில்லை இவனிடம் இந்த இருட்டு நேரத்தில் கோபப்பட்டால் ஏதாவது செய்து விடுவான் என்று அஞ்சி கோபப்படாமல் அமைதியாக சென்றாள்.  

         அவன் சொன்னது போலவே தெருவின் கார்னரில் இருந்த டீக்கடையில் இறங்கி ரொம்ப ரொம்ப நன்றி மேடம் இத நான் என்னைக்குமே மறக்க மாட்டேன் என்று கூறிவிட்டு இறங்கி சென்றார். 

              மகி அதற்கு மேல் எங்கும் செல்லாமல் அந்த தெருமுனையில் இருந்த தன்னுடைய தோழி பிரித்திகா வீட்டிற்கு சென்றாள். 

            விடியற்காலையில் எழுந்து மகி தன் தோழியின் வீட்டில் ஹாலுக்கு சென்றாள், அங்கே தோழியின் தந்தை அமர்ந்து “நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்”. 

        வாமா மகி! எப்ப வந்த, எப்படி இருக்க, அப்பா அம்மா எல்லாம் எப்படி இருக்காங்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா என்று விசாரித்தார். 

         அடிக்கடி மகி தன் தோழியின் வீட்டிற்கு வந்து செல்லும் பழக்கம் இருந்ததால் அவர் விசாரித்துக் கொண்டிருந்தார். 

          “குட் மார்னிங்” அங்கிள்! நான் நைட்டு தான் வந்தேன், நீங்க எப்படி இருக்கீங்க, ஆன்ட்டி எப்படி இருக்காங்க, என்று அவளும் பதிலுக்கு விசாரித்தாள். அவரும் பதிலுக்கு ஆல் ஆர் குட்… என்று கூறினார்.

        வாமா! மகி  வந்து உட்காரு காபி சாப்பிடலாம், என்று அழைத்தார். மேலும், அவர் லஷ்மி மகிக்கு ஒரு காபி எடுத்துட்டு வாமா! என்று தன் மனைவியிடம் கூறினார்.

               அங்கு அமர்ந்த போது அங்கிருந்த நியூஸ் பேப்பரை எடுத்து அவளும்  படிக்க ஆரம்பித்தால், நியூஸ் பேப்பரை படித்த மகிக்கு   அதிர்ச்சி தாங்கவில்லை, 

             அதே வேளையில் மகி யின் தந்தை அவளுக்கு கால் செய்தார், அவள் கோபத்தில் அப்பாவிடம் சண்டை போட்டு வந்ததை மறந்து! இருந்த மன நிலையில் போனை எடுத்து சொல்லுங்கப்பா, என்று கூறினால், அம்மா மகி நீ எங்கம்மா இருக்க நைட்டு அங்கங்க கொலை நடந்துச்சுன்னு சொல்றாங்க நீ வேற “கோவமா” போயிட்ட எனக்கு ரொம்ப பயமா இருக்குமா! தயவுசெய்து வீட்டுக்கு வாமா என்று அழைத்தார்.

          தந்தையின் பதட்டத்தை அறிந்த மகிக்கு மிகவும் பயம் வந்தது, நானும் இப்பதான் பா நியூஸ் பேப்பர்ல பார்த்தேன். இதோ உடனே வந்துவிடுகிறேன், நீங்க பயப்படாதீங்க நான் நல்லா தான்! இருக்கேன் அப்பா! என்று கூறிவிட்டு போனை வைத்தாள்.

           அப்போ மகி இருந்த மனநிலையில் இரவு நடந்த அனைத்தையும் ஒவ்வொன்றாக மனதிற்குள் அசை போட்டுக் கொண்டாள், இரவு கொலை நடந்ததாக நியூஸ் பேப்பரில் வந்த இடமும், காரில் கூட வந்த நபர் இறங்கி இறங்கி ஏறிய இடமும்  ஒன்றாக இருந்ததால் மகிக்கு மனநிலை வேறு எங்கெங்கோ சென்றது ஒருவேளை அவன்தான் கொலைகாரனோ? என்று அவள் பதறினான். 

 அப்படி அவன் கொலைகாரனாக இருந்தால் பார்க்க மிகவும் டீசண்டாக இருந்தானே! அவன் எப்படி கொலை செய்வான்! என்று அவள் மனநிலை பலவாறு யோசிக்க ஆரம்பித்தது, அவன் கொலைகாரனாக இருந்தால், இரவு வெளியில் தனியாக வந்த நம்மை எப்படி! ஒன்றும் செய்யாமல் விட்டான்? நம்மிடம் தாறுமாறாக எதுவும் நடந்து கொள்ளவில்லையே? என்று என்ன யோசிப்பது என்று தெரியாமல் பலவாறு மன குழப்பத்தோடு! அங்கு அமர்ந்து நியூஸ் பேப்பரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

          இவள் என்ன நடந்தது என்று தெரியாமல் மன குழப்பத்தில் அமர்ந்திருந்த அதே வேளையில் பிரித்திகாவின் தாய் லக்ஷ்மி, மகி காபி எடுத்துக்கோமா! மகி காபி எடுத்துக்கோமா! என்று இரண்டு மூன்று முறை அழைத்தாள், ஆனால் அவள் ஏதோ ஒரு மன நிலையில் எதுவும் கேட்காதது போல் அமர்ந்து நியூஸ் பேப்பரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

        லட்சுமியும் அவளைத் தொட்டு என்னம்மா ஆச்சு? என்று தட்டிக் கொடுத்த பிறகு அவள் சுயநினைவுக்கு வந்தவளாய் சொல்லுங்கம்மா! என்று கேட்டாள் என்னமா! என்ன ஆச்சு! நான் எத்தனை முறை கூப்பிடுறது காபி எடுத்துக்கோமா, என்று லட்சுமியும் கூறினான்.

       அவள் அப்போதுதான் சுய நினைவுக்கு வந்தவளாய் நீங்க சொன்னது எனக்கு காதில் விழவில்லை, என்று கூறி காபியை கையில் எடுத்துக் கொண்டு கையில் காபியை வைத்துக் கொண்டே பலவாறு அவள் இன்னும் குழப்பத்தோடு அமர்ந்திருந்தால், காபியையும் குடிக்க வில்லை. 

           பின்பு ஏதோ நினைத்தவளால் காபி கப்பை கீழே வைத்துவிட்டு அங்கிள், ஆன்ட்டி, சாரி அப்பா  கால் வந்தது ஏதோ அவசரமாய் கூப்பிடுறாங்க, நான் வீட்டுக்கு போயிட்டு, ஈவினிங் வரேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து எழுந்து செல்ல முற்பட்டாள்.

      இரு மா டிபன் சாப்பிட்டு போகலாம் என்றார் மோகன், இல்லை அங்கிள், நான் இன்னொரு நாள் கண்டிப்பா சாப்பிடுறேன் என்று அங்கிருந்து கிளம்ப முற்பட்டால், மேலே சென்று தன் தோழியின் அறைக்கு  அவளை எழுப்பி நான் போயிட்டு நாளைக்கு வரேண்டி எனக்கு அவசரமா ஒரு வேலை இருக்கு என்று கூறிவிட்டு, அங்கிருந்து செல்ல வெளியே வந்தால், வெளியே வந்தாலும் அவள் இரவு நடந்தவற்றையே யோசித்து! யோசித்து! என்ன நடந்திருக்கும் என்று குழப்பமான மனநிலையிலேயே வந்தாள்.

          பின் அங்கிருந்து வெளியே வந்து தன் காரை எடுத்துக் கொண்டு இரவு அவனை இறக்கிய அதே டீக்கடையில் நின்றாள், டீக்கடையிலிருந்து தோழியின் வீடு மிகவும் அருகில் இருந்ததால், அங்கு நின்று அவளுடன்  இரவில் வந்தவன் எங்காவது இருக்கிறானா?  என்று சுற்றும் முற்றும் பார்த்தாள், அங்கே அவனை காணவில்லை, பின்பு சிறிது நேரம் கழித்து அவள் காரை எடுக்க முற்பட்டபோது அதே மனிதன் தன் காருக்கு முன்னால் வந்து நின்று என்னிடம் கதவை திறக்குமாறு வற்புறுத்தினான், அவளும் வேறு வழியின்றி அவன் கொலைகாரன் என்ற குழப்பத்தோடு காரின் லாக்கை திறந்தால் அவன் உள்ளே வந்து அமர்ந்தான்.

          அவளுக்கு முன்பு மாதிரி இல்லை அவனைப் பார்த்ததும் பயம் மிகவும் அதிகமாக இருந்தது. அவன் மெதுவாக அவளிடம் பேச ஆரம்பித்தான் மேடம் காரை கொஞ்சம் எடுங்க பொறுமையா போகலாம்! என்றான் மீண்டும்  முதலிருந்தா? என்று மனதிற்குள்ளே நினைத்தாள், மேலும் அவள் பயத்துடன் அவன்  முகத்தை பார்த்தாள். அவன் பார்க்க மிகவும் அழகாய் எலுமிச்சை  பழ நிறத்தில்  நல்ல உயரம்,  திடகாத்திரமான உடல் அமைப்பு,  மொத்தத்தில் பார்க்கவே வசீகரிக்கும் அழகுடன் இருந்தான். இரவில் இருட்டில் அவள் இருந்த கோபத்திற்கு அவனை சரிவர  பார்க்கவில்லை ஆனால் இந்த வெளிச்சத்தில் அவனை பார்க்கும்போது மிகவும் அழகாக அவளுக்கு தோன்றியது. 

         மெதுவாக அவனிடம் பேச ஆரம்பித்தார் சார் உங்ககிட்ட  என்று ஆரம்பித்தாள்.. ஆனால் அவன் மேடம் நீங்க என்ன பேச வரீங்கன்னு எனக்கு தெளிவா புரியுது. 

        நான் ராகுல் எம்பிபிஎஸ் பைனல் இயர் ஸ்டூடண்ட் எங்க அப்பா ரயில்வேயில் வேலை செய்யறாரு, அம்மா ஹவுஸ் வைஃப், எனக்கு ஒரு தங்கச்சி அவ பேசன்டெக்னாலஜி பஸ்ட் இயர் படிச்சிகிட்டு இருக்கா. 

     மிடில் கிளாஸ் ஃபேமிலி தான் கஷ்டப்பட்டு தான் எங்க அப்பா எங்க ரெண்டு பேரையும் படிக்க வச்சாரு.. “காசுக்கு பஞ்ச இருந்தாலும் சந்தோஷத்துக்கு எப்பவுமே எங்க வீட்ல பஞ்சம் வந்ததே இல்லை” எப்பவுமே ஜாலியா சந்தோஷமா இருப்போம். 

       ஆனா கடந்த ஒரு வாரமா எங்க வீட்ல யாருமே “சிரிக்க கூட” இல்லை அப்படி ஒரு விஷயம் நடந்துச்சு மேடம். என் தங்கச்சி போன வாரம் காலேஜ் முடிச்சுட்டு இரு சக்கர வாகனத்தில் இந்த ரோட்டு வழியா வந்தாள். அப்ப மூணு பொறுக்கி பசங்க குடிச்சிட்டு அவகிட்ட தகராறு பண்ணி அவளை பாலியல் பலாத்காரம் பண்ணி அந்த முள்ளு சந்துல போட்டுட்டு போயிட்டாங்க,அவளை காணாம நாங்க எங்கெங்கோ தேடி அதுக்கப்புறம் கண்டுபிடிச்சோம்.   

             இப்போது ஹாஸ்பிடல்ல இருந்து டிச்ஜார்ச் பண்ணி வீட்ல தான் வச்சிருக்கோம், நான் செல்ஃபா அவளுக்கு ட்ரீட்மென்ட் பாத்துட்டு இருக்கேன் மேம்… 

             என் தங்கச்சியை அப்படி பண்ணவங்கள நான் ரெண்டு நாளா அலைந்து திரிந்து இங்கு இருந்த “சிசிடிவி கேமராவில்” எல்லாம் பர்சனலா தேடி அவங்க மூணு பேரையும் கண்டுபிடிச்சிட்டேன். அதுக்கப்புறம் மெடிக்கல் ஃபீல்டுல இருக்கிற செய்யகூடாத  விஷயத்தையும் கண்டுபிடித்து அவங்க மூணு பேரையும் கொல்லணும்னு நினைச்சு  பிளான் போட்டன் அப்போதான் உங்க கிட்ட லிஃப்ட் கேட்டு வந்தேன். அப்புறம் என்ன நடந்ததுனு  நீங்க நியூஸ் பேப்பர்ல படிச்சிருப்பீங்க, அதுல “யார் கொண்டாங்கன்னு” கண்டிப்பா கண்டுபிடிக்க முடியாது! கொலையா? தற்கொலையா? என்று தேடிக் கொண்டிருக்கிறோம். என்று தான் போலீஸ் சொல்லி இருக்காங்க ஒருவேளை நீங்க போய் சொன்னா தான் அது தெரியும். அதுக்கு தான் உங்களை தேடி வந்தேன், என்று பாவமாக  மூஞ்சை வைத்துக் கொண்டு பேசினான். 

        நான் செஞ்சது தப்புனு நீங்க நினைக்கிறாங்களா? மேடம் நீங்களும் ஒரு பொண்ணு தான் என் தங்கச்சிக்கு நடந்ததை உங்ககிட்ட சொன்னா புரிஞ்சிப்பீங்க என்று தான் உங்ககிட்ட சொல்றேன் என்று கூறினான். 

        அவளும் தப்பே இல்லைங்க சார்… இந்த மாதிரி பொறுக்கி… பொறுக்கி….. நாய்களை இப்படித்தான் பண்ணனும் என்று ரொம்ப கொடூரமாகவும்!  ஆவேசமாகவும்! கூறினாள். 

           அவன் அழகில் வியந்த அவள் தற்போது அவன் குணத்திலும் வியந்து தங்கச்சிக்காக இவ்வளவு செய்தவன் கண்டிப்பா மனைவியை நல்லா பார்த்துப்பான் என்று அவனை திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது. 

        ஆம்…அன்று இரவு தன் தந்தையிடம் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்! என்று தான் கோபப்பட்டு சண்டை இட்டு அங்கிருந்து வந்தால் ஆனால் தற்பொழுது “தொடர் கொலைகாரனுடன் வாழ்ந்த ஒரு நாளில்” வாழ்க்கை முழுதும் அவனுடன் வாழும் அளவிற்கு அவளுக்கு ஆசை வந்துவிட்டது… 

          மெதுவாக ராகுல் உங்க தங்கச்சியை நாம் பார்க்கலாமா? என்று கேட்டாள் அவனும் தன் தங்கச்சி நிலையை இவள் நேரில் கண்டால் தன்னை எங்கும் மாட்டி விடமாட்டாள், என்று எண்ணி சரி என்று அழைத்து சென்று காண்பித்தான். 

        தங்கச்சியின் நிலையை நேரில் கண்ட அவளுக்கு மனம் மிகவும் வருத்தத்தில் ஆழ்ந்து! அவர்கள் மூவரையும் நீங்கள் கொன்றது தவறே இல்லை. அதிலும் அவர்களை கொள்வதற்கு உங்களுக்கு “நான் துணையாக இருந்தேன்!” என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக! இருக்கிறது என்று அவனிடம் கூறினார். 

            அங்கிருந்து சென்றவள் தன் தந்தையிடம் அப்பா! நான் தற்பொழுது திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறேன். அதிலும் நான் ஒருவரை பார்த்தேன் அவர் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, என்று கூறினாள்.

     மேலும் இரு வீட்டாரும் பேசி அவர்கள்  திருமணம் செய்து கொண்டனர்.

    “தொடர் கொலைகாரனுடன் ஒருநாள் இருந்த அவளுக்கு  வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து அவனுடன் வாழ ஆசை வந்தது”. 

          சூழ்நிலை சில நேரம் நல்லவர்களையும் இப்படித்தான் கொலைகாரர்களாக மாற்றுகிறது. “சமுதாயத்தில் நடக்கின்ற பல இடர்கள் தான் இதற்கு காரணம்”.

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!