ஒரு நாள் போட்டி கதை: நிழல் நீதியின் குழப்பம்

by admin 2
51 views

எழுதியவர்: வானவன் (ஆகாஷ்)

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு  நாள்  தொடர் கொலை காரனோடு!

இரவு, நகரம் அமைதியாய் தூங்கிக் கொண்டிருந்தது. அவனின் மனம் மட்டும் சூறாவளியில் நடுங்கிக்கொண்டு இருந்தது. குளிரான காற்று, தெருக்களில் இயங்கும் மின் விளக்குகளின் மஞ்சள் ஒளியில் காயங்களையும், மன கலக்கங்களையும் மீட்டெடுக்க முயற்சிக்கின்றது. அந்தக் கொடுமையான மனநிலையில் அவனுடன் நான் நடந்தேன். அவனது உள்ளம் சிதைவாக இருப்பது எனக்கு தெரியும்.

மெதுவாக அழைத்து, குரலில் கடுமையும், பரிவும் கூடிய ஒரு சமநிலையில் பேச தொடங்கினேன்.

“நீ இப்போது உனது செயலைச் சரியாகத் தோற்றப்படுத்திக் கொள்ள நினைத்தாலும், நீ ஒன்றை உணர்ந்ததுண்டா? நீ யார்?”

அவன் என்னை நோக்கி பார்த்தான். அவனுடைய கண்ணில் ஏக்கமும், அதே சமயம் கொஞ்சம் குற்ற உணர்வும் இருந்தது. அவன் கீழே தலையைத் தாழ்த்தி வைத்திருந்தான்.

“நான் நீதியை தேடி வந்தவன்,” என்று கூறினான். ஆனால் அவன் குரலில் ஒரு குழப்பம் உண்டாகியிருந்தது.

நான் கொஞ்சம் சத்தமாக சிரித்துக் கொண்டே “நீ நீதியைச் செய்கிறாய் என்று நினைக்கிறாயா? உன் செயலில் நீதியுடன் கூடிய பாதை இருக்கிறதா? அல்லது நீ நினைத்தவாறு நீதி நிமிர்ந்து நிற்கவில்லையா?” என கேட்டேன்.

அவன் ஆழமாக சுவாசித்தான். ஆனால், இன்னும் எந்த பதிலும் அளிக்கவில்லை. குழப்பம் அவனின் ஆழ்ந்த சிந்தனைகளை பறிக்கத் தொடங்கியது. “நான் ஏன் இதைச் செய்கிறேன்?” என்று அவன் ஆழமாக யோசிக்க, அவன் மனம் ஒரு  நரகத்தில் முழுமையாய் சிக்கிக்கொண்டிருந்தது.

“நீ யாருக்கு நீதி செய்கிறாய்? உன் நீதி நிதானமாக எடுக்கப்படுகிறதா? அல்லது அந்த முடிவுகள்
உன் கோபத்தால் நிர்ணயிக்கப்படுகிறதா?” என நான் தொடர்ந்தேன், அவனது உள்ளத்தில் சரியான விடையைத் தேடி…

அவன் இப்போதும் பதிலளிக்கவில்லை. ஆனால், அவன் விரல் பிளேடின் மீது தவறாமல் நெளிந்து கொண்டிருந்தது.

“நான் இந்த உலகை சீர்செய்ய வேண்டும். என்னால் அதைத் தவிர்க்க முடியாது. என்னுடைய செயலில் எப்போதும் நீதி இருக்கிறது”, என்ன கடுமையாக சொன்ன பிறகு, தான் இதை செய்வதற்கான சில காரணங்களையும் சொன்னான்.

“சரி, நீ அதை ஒரு தீர்வு என்று நினைக்கிறாய். ஆனால், நீ எல்லாவற்றையும் சாதிப்பதற்கு உன் உள்ளத்தில் அமைதி இருக்கவேண்டும். நீ ஒரு பிளேடை வைத்து எதற்காக நீதியை நிலைநாட்டுகிறாய்?”

அந்த பிளேடு எனக்கு, காட்சியளிக்கும் ஒரு மங்கலான கனவு போல் தெரிந்தது.

“இவை எல்லாம் எனக்கு ஒரே பதில் தருகின்றன. அவர்கள் சட்டத்தின் கீழ் தப்பிக்கின்றனர். ஆனால் நான் நீதியை வழங்குகிறேன். பிளேடை வைத்து நீதி வழங்குவது என் பாணி” என்றான்.

நான் மெதுவாக அவன் அருகில் வந்து, நீ நீதியை ஆராய யாரிடமிருந்து கற்றுக்கொள்கிறாய்?என கேட்டு அவன் முகத்தை உற்றுப் பார்த்தேன்.

சிறிது நேரம் யோசித்து விட்டு,
“என் உள்ளத்தில் தண்டனை ஓரு பார்வை தான். நீதி எப்போதும் என் தனிப்பட்ட மனவரைக்கு உட்பட்டது. சூழ்நிலையை பொறுத்து நான் தீர்மானிக்கிறேன்” என்றான்.

“நீ நினைத்தால், அதுவே சரியானது என்று நினைக்கிறாயா?” என நான் கேட்டேன். “அது சரியானது என்றால், சட்டத்தின் தவறுகளை.. என நான் முடிப்பதற்குள் அவன் பொறுமையை இழந்து இடைமறித்தான்.

“நான் நீதிக்காக எனது செயலைச் செய்கிறேன். உன்னிடம் தர்க்கம் செய்ய விருப்பமில்லை” என்று கோபமாக பேசினான்.

அவனிடம் எந்த பதிலும் உறுதியாக இல்லை. அதேசமயம் கண்ணில் அவன் கடந்து செல்லும் பாதையைப் பற்றிய ஒரு குழப்பம் நிறைந்தது.

“நீ செய்கிற பணியில் முதலில் நீதி இருக்கிறதா? என மேலும் என் கேள்வியை தொடர்ந்தேன்….

அவன் பிளேடின் மீது தனது நகங்களைச் செதுக்கிக் கொண்டிருந்தான்.

“நான் இதனை பிறகு சிந்துத்து முடிவு செய்து கொள்கிறேன்,” என அவன் பெரிதும் சிந்தித்து பதில் சொன்னான்.

“மாற்றம் என்பது உடனடியாக ஏற்படுவதில்லை. அந்த மாற்றம் உன் மனதில் தொடங்க வேண்டும். நீ தண்டனையை மட்டுமே விரும்புகிறாய். ஆனால் ஒருபோதும் நீதியை நிலைநாட்டவில்லை. உன் சிந்தனைகள்  மழுங்கி இருக்கிறது” என்றேன்.

அவன் கண்ணில் சிறு ஒளி மிளிர்ந்தபோது, நான் அவனுக்குள் ஒரு ரேகையைக் கண்டேன்.

சற்று தெளிந்தவனாய், “அப்படி எனில் உன்னால் மாற்றுப் பாதையை பரிந்துரைக்க முடியுமா?” எனக் கேட்டான்.

“மாற்றுப் பாதையை பரிந்துரைக்க தெரியவில்லை. ஆனால் நீ செல்லும் பாதையை எதிர்மாராய் விமர்சிக்க முடியும்”.

ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு “இந்த சமூகத்திற்கு விமர்சிக்க மட்டும் தானே தெரியும். வேறு என்ன தெரியும்? என்றான்.

இப்போது, எங்கோ வேடிக்கை பார்த்தவனாய் அவன் விரல்களை மெல்ல பிளேடில் இழுத்தான். சில துளிகள் இரத்தம் சொட்டியது.

உன் சொந்த செயலில் உன் உணர்வுகளையும், கோபத்தையும் தீர்த்துக் கொள்கிறாய். நீ செய்வது எல்லாம் தார்மீக ரீதியான அறமாக நீ தவறாக நினைக்கிறாய். அந்த தீர்வு உன் உள்ளத்தில் தவிர்க்கக்கூடிய ஒன்று என நான் சொல்லிக் கொண்டிருக்கும் போது, அவன் அங்கிருந்து தன் செயல்களை நிறுத்தி, சிந்தனைப்பரப்புக்கு ஆழ்ந்து சென்று கொண்டிருந்தான்.

நான் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாதது போல் வேறு எதையோ அவன் சிந்திப்பதைப் புரிந்து கொண்டு, என் பேச்சை நிறுத்தினேன்.

தான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்தவனாய் அவன் தெரிந்தான். என்னிடம் எதுவும் அவன் பேசவில்லை.

அவன் கைகளில் இருந்து பிளேடு நழுவியது. விரலில் சொட்டிய குருதி இப்போது கொஞ்சம் உறைந்திருந்தது. தனது செயல்களை வெறுக்க முயற்சித்தவனாய், புதிய பாதையை தேடியவனாய் வேகமாக நடக்கத் தொடங்கினான்….

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!