எழுதியவர்: ரா.கு.கோபாலகிருஷ்னன்
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் டைனசரோடு!!
வணக்கம். இந்தியாவில் ஒரு மாநிலத்தில் சமீபத்தில் 20 வயதிற்குள் பாலியல் தொழில் செய்ததாக ஒரு ஒரு பெண்ணையும். 20 வயதிற்குள் திருடியதாக ஒரு ஆணையும் கைது செய்தனர். இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், இருவரும் அண்ணன், தங்கை என்பதுதான். மனித உரிமை ஆணையத்தில் ஓய்வுபெற்ற பெண் நீதிபதி ஒருவர் கேட்டுக் கொண்டதின் பேரில் அவர்கள் இருவரையும் ஏழுநாட்கள் அவரிடம் ஒப்படைத்தனர். முதலில் அந்தப் பெண்ணிடம் பேச ஆரம்பித்தார் நீதிபதி. நாங்கள் கிராமத்தில் இருந்தோம், நான்கு வயதாக இருக்கும் போது என்னுடைய அப்பா ஒரு விபத்தில் இறந்துவிட்டார். கூலி வேலை செய்து எங்களை வளர்த்து வந்தார் எங்க அம்மா. எங்கள் ஊரில் சரியாக வேலை இல்லாத காரணத்தினாலும், அங்கு இருந்தால் எங்களை சரியாக படிக்க வைக்க முடியாது என்ற காரணத்தினாலும், தெரிந்தவர் ஒருவர் மூலமாக நகரத்திற்கு குடியேறினோம். வீட்டு வேலை என்று எந்த வேலை கிடைத்தாலும் செய்து எங்களைக் காப்பாற்றினார் எங்கள் அம்மா. ஒரு வீட்டில் வேலை செய்யும் போது எங்க அம்மா செய்யும் வேலையை பிடித்துப்போக, காலை முதல் இரவு வரை இங்கேயே வேலை செய் மற்ற இடங்களில் எல்லாம் சேர்த்து மாதம் எவ்வளவு கிடைக்கிறதோ அதை நான் தருகிறேன் என்றனர். எங்க அம்மாவும் சரி என்றார். அந்த வீட்டில் முதலாளி அம்மா மற்றும் அவருடைய கணவர் மட்டும்தான். அவருடைய கணவருக்கு ஒரு விபத்தில் இரண்டு கால்களும் போய்விட்டது ஆகையால் அவருக்கு சொந்தமான கம்பெனியை முதலாளி அம்மா தான் பார்த்துக் கொள்கிறார். வீட்டில் ஐயாவுக்கு தேவையானதை பார்த்துக்கொண்டு, வீட்டையும் பார்த்துக் கொள்வதுதான் வேலை. வேலைக்கு சேர்ந்த மறு வருடமே எங்களை அரசு பள்ளியில் இருந்து தனியார் பள்ளியில் சேர்த்து, எங்களை படிக்க வைத்தார். நாங்கள் எந்த எந்த வித கஷ்டங்கள் இல்லாமலும் சந்தோஷமாக இருந்தோம். நான் 12 வயதாக இருக்கும்போதே பெரிய பெண்ணானேன். எங்க அம்மா வேலை செய்யும் வீடு எங்க வீட்டிலிருந்து ஆறு வீடு தள்ளி தான். நான் அடிக்கடி எங்க அம்மா வேலை செய்யும் வீட்டிற்குச் சென்று டிவி கேம் ஆடுவது வழக்கம். அன்றும் அப்படித்தான் கேம் விளையாடிக் கொண்டிருந்தேன், எங்க அம்மா வந்து நான் கடைக்கு போய் வருகிறேன் ஐயாவை பார்த்துக்கொள், ஏதாவது கேட்டால் கொடு என்று சொல்லிவிட்டுச் சென்றார். கொஞ்ச நேரத்தில் தன்னுடைய ஊன்று கோலுடன் நடந்து வந்து என் அருகில் உட்கார்ந்தார். நான் உடனே என்னய்யா என்றேன், நீ என்ன கேம் விளையாடுகிறாய் என்று பார்க்க வந்தேன் என்றார். நான் விருவிருப்பாக கேம் விளையாடிக் கொண்டிருந்தேன். என்னை அவர் தொடக்கூடாத இடத்தில் எல்லாம் தொட்டுத் தடவி அழுத்தினார். நான் உடனே எதுவும் சொல்லாமல் டிவியை அணைத்து விட்டு என் வீட்டிற்கு வந்து விட்டேன். அன்று இரவு எங்க அம்மா என்னிடம் ஏன் நான் வருவதற்குள் வந்து விட்டாய் என்றார். நான் தயங்கியபடி அங்கு நடந்த எல்லாம் சொன்னேன். எங்கம்மா யோசித்தபடி இனிமேல் அந்த வீட்டுக்கு வர கூடாது என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். இது நடந்து இரண்டு மாதம் கழித்து என் அம்மா என்னிடம் புது துணியை கொடுத்து இதைப் போட்டுக் கொண்டு அந்த வீட்டுக்கு வா என்றார். நான் வர மாட்டேன் என்றேன். என்னை வற்புறுத்தி அழைத்துச் சென்றார். அங்கு ஐயாவுக்கு பிறந்தநாள் வீட்டில் விசேஷமாக இருந்தது. நான் எங்க அம்மாவுக்கு உதவியாக வேலை செய்து கொண்டிருந்தேன். விசேஷம் எல்லாம் முடிந்து அனைவரும் சென்றுவிட்டனர். எங்க அம்மா என்னிடம் ஜீஸை கொடுத்து குடிக்கச் சொன்னார். கொடுத்தேன் மயங்கினேன். காலையில்தான் கண்விழித்தேன். பின்னர் தான் தெரிந்தது நாங்கள் வாழும் இந்த சந்தோஷங்கள் நிறைந்த இந்த நாகரிகமான வாழ்க்கை எங்க அம்மாவின் உழைப்புக்கு அல்ல உடம்புக்கு என்று, அம்மா இந்த சந்தோஷத்தை தக்க வைத்துக் கொள்ள, என்னையும் சேர்த்துக் கொண்டார். சில வருடங்களில் எங்க அம்மாவுக்கு உடம்பு முடியாமல் போனது, அதுமட்டுமில்லாமல் அந்த அய்யாவும் மாரடைப்பால் இறந்துபோனார். என்னுடைய தோழி மூலம் வேலை தேடி நானும் என்னுடைய அண்ணனும் இஙகு வந்தோம் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினோம். எங்கள் இருவருக்குமே வேலை கிடைக்கவில்லை. என் அம்மாவின் வைத்திய செலவுக்கு, என் தோழி ஒருவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி கொடுத்தார்.பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாததால், என் உடம்பை கேட்டார். என்னுடைய தாய் துவக்கி வைத்தது இன்னும் முடியவில்லை என்று சொல்லி அழுதார். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அவள் அண்ணனும் அழுதான். நீதிபதி அவனிடம் ஆரம்பித்தார். சிறு வயது முதலே எங்கம்மா நான் எதை கேட்டாலும் வாங்கி கொடுப்பார். ஒருமுறை நாங்களும் பக்கத்து வீட்டில் உள்ளவர்களும் கோவிலுக்கு போனோம் ,சாமி பார்த்துவிட்டு வரும்போது, பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தனர். நானும் பக்கத்து வீட்டு பையனும் பிரசாதம் வாங்க சென்றோம். நான் சென்று வரிசையில் நின்றேன். அவன் முன்னே சென்று ஒரு சிலரை தள்ளிவிட்டு பிரசாதம் வாங்கி விட்டான். நான் முன்னேறி சென்று கொண்டிருக்கும்போது பிரசாதம் காலியாகிவிட்டது. பிரசாதம் எனக்கு கிடைக்கவில்லை. உனக்கு ஒரு பிரசாதம் வாங்க கூட திறமை இல்லை, நீ எதற்கும் லாயக்கில்லை, அவனை பார்த்து தெரிந்து கொள் என்று அனைவர் முன்னிலையிலும் எங்கம்மா சத்தம் போட்டார். நான் பத்தாவது படிக்கும்போது, நானும் எங்கம்மாவும் ஒரு திருமணத்திற்கு சென்று இருந்தோம், நான் உட்கார்ந்த பக்கத்தில் ஒரு பெரியவர் உட்கார்ந்து இருந்தார், அவர் எழுந்து போனவுடன், பின்னர் அந்தச் சேரில் பார்த்தேன், ஒரு பர்ஸ் இருந்தது. அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தேன், நிறைய பணம் இருந்தது. உடனே என் அம்மாவிடம் சொன்னேன். நீ எடுத்ததை வேறு யாராவது பார்த்தார்களா என்றார். இல்லை என்றேன். பின்னர் அந்தப் பணத்தை வாங்கி தன்னுடைய பையில் வைத்துக் கொண்டு இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்றார். வீட்டிற்குச் சென்றதும் இது போல் யாருக்கும் தெரியாமல் எடுப்பது தவறில்லை, மாட்டிக் கொள்வது போல் எடுப்பது தான் தவறு. தேவைக்கு மேல் உள்ளவர்களிடம் எந்த வகையிலாவது எடுப்பது தவறே இல்லை என்றார். இந்த ஊருக்கு வந்ததில் இருந்து எத்தனையோ இடத்தில் வேலை கேட்டும் யாரும் வேலை கொடுக்கவில்லை. என் தாய் சொன்ன வழியிலேயே தேவைக்கு மேல் உள்ளவர்களிடம் எடுக்க ஆரம்பித்து விட்டேன் என்றான். அண்ணன் தங்கை இருவருமே கட்டிப்பிடித்து அழுதனர். மறுநாள் நீதிபதி அவருடைய தாயை அழைத்து நடந்ததையெல்லாம் சொன்னார். தன்னுடைய மகளையும். மகனையும் கட்டிப்பிடித்து நானே உங்கள் வாழ்க்கையை அழித்து விட்டேனே என்று கதறி அழுதார். உடனே நீதிபதி இப்பொழுது அழுது என்ன பண்றது என்றார்.
( கருத்து )
இந்த மண்ணில் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், முதல் கடவுள், முதல் ஆசிரியர், முதல் நண்பன், முதலில் ஹீரோ அனைத்தும் பெற்றோர்கள் தான். அவர்களுக்கு நல்வழி கற்பிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, எப்படியாவது நல்லவர்களாக வருவார்கள். எந்த சூழ்நிலையும் தீயவையை கற்பித்து விடாதீர்கள் அது அவர்களை மட்டுமல்ல இந்த சமூகத்தையே அழித்துவிடும். என்பதை மறந்து விடாதீர்கள். “எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே” அவர் நல்லவராவதும் கெட்டவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலேயே என்று அன்றே ஒரு கவிஞர் பாடிவிட்டார். தயவுசெய்துகுழந்தைகள் மனதில் அன்பை விதைக்க வில்லை என்றாலும் நஞ்சை விதைத்து விடாதீர்கள்்
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.