ஒரு நாள் போட்டி கதை: முகநூல் நட்பு முள்ளானது

by admin 2
32 views

எழுதியவர்: இரா.நா.வேல்விழி

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒருநாள் மரணித்த கர்ப்பிணியோடு!

எப்படி சொல்வதென்றே தெரியவில்லை இளவரசிக்கு. இரண்டு மூன்று மாதங்களாக உடலில் ஒருவித சோர்வு ஒட்டிக் கொண்டிருந்தது. எந்த வேலையிலும் ஈடுபாடே  இல்லை.அப்பா எவ்வளவோ கேட்டும் அவளுக்கு சொல்லத் தெரியவில்லை.
காய்ச்சல் தலைவலி அப்படி எதுவும் இல்லை .பிறகு என்னவாக இருக்கும். அப்பா மகளின் நிலையை நினைத்து கவலைப்பட ஆரம்பித்து விட்டார்.
         அம்மாவிடம் சொல்லலாம் அவர்கள் ஏதாவது தீர்வு சொல்வார்கள்  என்று அம்மாவிடம் பேத்தியின் நிலைமையைப் கூறினார் . அம்மாவோ அட மடையா
பேருக்கு ஏற்றார்ப்போல் அவள் இளவரசி பா. அதை மறந்து அவளுக்கு உடம்புக்கு என்னமோ ஏதோன்னு பயப்படுறியே.அவ அம்மா இருந்திருந்தா இந்நேரம் கல்யாணத்தையே முடிச்சு இருப்பா .அது மட்டு இல்லபா.  அம்மா ஞாபகம் வந்திருச்சு போல; அதான் அவ சொல்லத் தெரியாம தவிக்கிறா.சீக்கிரம் அவளுக்கு  ஏத்த பையனா பாரு, என்று கூறி சமாதானம் செய்தார்.
       மங்களம் இறந்த பிறகு எல்லாமே நம்ம தானே எப்படி  குழந்தையைக் கவனிக்காமல் விட்டோம் வருந்தினார் தாயுமானவர். இன்று மகளிடம் பேசிவிட வேண்டும் என்று முடிவும் செய்தார். அலைபேசி அழைத்தது .இளவரசி தான் . மாலை தோழியின் பிறந்தநாளுக்கு செல்வதாகவும், அங்கேயே சாப்பிட்டு வருவதாகவும் , வீட்டிற்கு வர தாமதமாகும் . நீங்கள் சாப்பிட்டு விடுங்கள் என்று கூறியும் துண்டித்தாள் .இன்று பேச முடியாமல்  ஏமாற்றமடைந்தவராய் மனதை தேற்றிக் கொண்டார்.
          தோழிகளின் சிரிப்பொலிகளுக்கு  இடையே சிந்தனையில் சிக்கியிருந்த இளவரசியின் மௌனத்தைக் கலைத்தாள் கனி.என்னாச்சு இளவரசி ஒன்னுமே பேச மாட்டேங்கிற . உடம்புக்கு முடியலையா என்றாள். அதற்கு ரதி அவளுக்கு அவளோட ஆளு ஞாபகமாக இருக்கும்  அதான் இப்டி இருக்கா. கவலைப்படாதம்மா உனக்காக தான் அவரையும் இங்க வர சொல்லியிருக்கோம் என்றதும் சிறிது முகம் மலர்ந்தாள் இளவரசி.
          வாட்டசாட்டமாக, உதட்டில் சிறு புன்னகை தவழ , மாநிறமாக பார்த்தவுடன் வசீகரிக்கும் அழகுடையவனாக இருந்தான் செழியன். இரண்டு பேரோட ஜோடி பொருத்தமும் நல்லா இருக்குல்ல பேசிக் கொண்டனர் தோழிகள். இளவரசனுக்கு ஏற்ற இளவரசன் கேலி செய்தாள் ரதி.  
        ஏ! ரதி இருவரையும் சிறிது நேரம் தனியாக விடும்மா.  அவர்கள்  பேசிக்கொண்டு இருக்கட்டும் . வா வெளியே என்று அழைத்து சென்று விட்டாள் கனி. இளவரசியின் அருகில் அமர்ந்த செழியன்,  என்னாச்சு ஏன் ரொம்ப சோர்வாக இருக்க, உடம்புக்கு முடியலையா இல்ல அப்பா ஏதாவது சொன்னாரா.என்று அக்கறையுடன் விசாரித்தான். 
       எப்படி சொல்வேன் , உடம்புக்கு ஒன்றுமில்லை ஆனால் உடம்பு ரொம்ப சோர்வாக இருப்பதையும் படுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுவதையும். மௌனத்தைக் கலைத்தான் செழியன். மௌனம் கலைந்தவளாய், ஆமா செழியா  அப்பாவும் இதைத்தான் கேட்டுட்டே இருக்கார்.
எனக்கு என்ன செய்துன்னே சொல்ல தெரியல. அதவிடு நீ எப்படி இருக்க. உன்ன பாத்தே ரொம்ப நாளாச்சு. என்னப் பத்தியே  யோசிச்சிட்டு இருந்ததுல்ல உன்னையே  மறந்துட்டேன் பாரு.
       இளவரசி நம்ம இப்பவேணா டாக்டர பாத்துட்டு வரலாமா.வா போயிட்டு வரலாம். இல்ல செழியா  வேணா பாத்துக்கலாம்.சரியாயிடும்.
ஆமா நீயும் நான் கவியரங்கம் போயிட்டு வந்தத பத்தி ஒன்னுமே கேக்கவே இல்ல. சாரிடா மாதவன் ரொம்ப பெருமையா சொன்னா .உன்னோட கவிதைக்கு அடிமைன்னு வேற சொன்னா. என் கவிதாயினிய பத்தி கேக்கும் போது எனக்கு பெருமையா இருந்துச்சு.அதான் போன்ல சொல்லாம நேர்ல சொல்றே.
        நன்றி செழியா. நானும் அதைப்பத்தி தான் உங்கிட்ட பேசணும்னு நினைச்சே. அதுக்கப்புறம்  மாதவன் முகநூலில் என்ன தொடர்ந்து கிட்டு இருக்கார் .அதற்குப் பிறகும் நாங்க இரண்டு பேரும் சேர்ந்து மதுரையில் ஒரு நிகழ்ச்சியில கலந்துகிட்டோம். உங்கிட்ட சொன்னாரா.அப்டியா சொல்லலையே எப்போ .அது இரண்டு மாசத்துக்கு முன்னாடி . அப்போ அவர் நடந்துகிட்ட முறையே எனக்கு சுத்தமா பிடிக்கல. மறுநாள் எப்போ ஊருக்கு கிளம்புவோன்னு இருந்துச்சு. முகநூலில் அவருடன் பேசியது தவறோன்னு தோணுது .இப்ப அவர கட் பண்ணிட்டே. அன்னைக்கு இரவு என்ன நடந்ததுன்னே தெரியல . அதை நினைச்சு பாத்தா எனக்கு எதுவும் ஞாபகம் வர மாட்டேங்குது. அந்த நிகழ்வு எனக்கு ஞாபகம் வந்தா  என்னோட உடம்பு இப்ப இருக்கிற நிலைமைக்கு காரணம் தெரிஞ்சுடும்.
       என்ன சொல்ற இளவரசி .அவ என் நண்பன் .அவன் சந்தேகப்படுறியா. இல்ல ஊர்ஜிதப்படுத்த நீ தான் எனக்கு உதவிப் பண்ணனும். நீ நினைக்கிற அளவுக்கு அவ தப்பானவன் இல்ல. உன்ன எந்தளவுக்கு நம்பறேன்னோ அந்தளவுக்கு அவமேலையும் எனக்கு நம்பிக்கை இருக்கு. என்ன நம்பற தானே அப்ப எனக்காக ஒரு உதவி செய் அவங்ககிட்ட மதுரையில் நடந்த கவியரங்கத்தைப் பற்றி பேச்சுக் கொடுத்து  அங்க என்ன நடந்தது, என்ன பத்தி என்ன சொல்றான்னு கேட்க முயற்சி பண்ணு செழியா  ப்ளீஸ்  அப்பதான் நா நினைக்கிறது சரியான்னு தெரியும்.
        சரி இளவரசி உனக்காக நா விசாரிக்கறே. எனக்கு இரண்டு நாள் அவகாசம் கொடு. நா போயி விசாரிச்சா தப்பா நினைப்பான். இது வேற மாறி தான் விசாரிக்கணும். சரி நீ இதையே நினைச்சுகிட்டு இருக்காத .நா இருக்கே உங்கூட…
         என்னம்மா ரோமான்ஸ் முடிஞ்சதா .  சாப்பிட போலாமா என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தாள் கனி. இருவரும் சிரித்துக் கொண்டே இதோ வரோம் என்று கூறி , அனைவருடனும் அமர்ந்து பேசி, சிரித்தவாறே சாப்பிட்டு விட்டு கிளம்பினார். செழியன் ஆறுதலாக இளவரசியின் கையை இறுகப் பற்றினான்.
        மறுநாள் தன் மகளிடம் நலம் விசாரித்து விட்டு , தலையை வருடியபடி  கவலைப்படாதம்மா அப்பா நான் இருக்கிறே  என்றவர் மகளின்  திருமணம் பற்றியும்  பேசினார். எதுனாலும் எனக்கு மூன்று நாட்கள் அவகாசம் வேண்டும் அதன் பின் முடிவு செய்யலாம் என்று கூறி அப்பாவின் மடியில் குழந்தையானாள்  இளவரசி….
       இளவரசி மதுரைக்குச் சென்ற நாள் , தங்கிய இடம் போன்ற விவரங்களைக் கேட்டுக்கொண்டு தானே களத்தில் குதித்தான் செழியன். மதுரைக்கு புறப்பட்டு இருவரும் தங்கிய ஹோட்டலை அடைந்தான். அங்கு தனக்கென ஒரு ரூமும் புக் செய்து கொண்டு  அந்த ஹோட்டல் பற்றியும் , இரண்டு மாதங்களுக்கு முன் யாரெல்லாம் தங்கி சென்றார்கள் என்று விவரங்களை ஒரு பணியாள் மூலம் தெரிந்து கொண்டான். அவன் வேலையை எளிதாக்க அந்த ஆளும் ஒரு கவிப்பிரியன் என்பது இன்னும் வசதியாக போயிற்று. மாதவன் பற்றியும்  அந்த பணியாள் கூறியதும் பழம் நழுவி பாலில் விழுந்தது போல் ஆக மேலும் பேச்சுக் கொடுக்க , மாதவன் என் நண்பன் என்று கூறியதும்; அந்த பணியாள் ,சார்; மாதவன் சார் தான் தங்கியிருந்த இந்த அறையில் தன்னுடைய டைரியை விட்டுட்டு போயிட்டாரு.இத அவருகிட்ட கொடுத்துருங்க சார். அப்படியே அவங்க மனைவியையும் கேட்டதா சொல்லுங்க .கவிதை புத்தகம் வெளியீட்டு விழாக்கு கண்டிப்பா என்னையும்  அழைக்க சொல்லுங்க சார் .என்று மூச்சு விடாமல் பேசிக்கொண்டிருந்தான் பணியாள்.அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தான் செழியன்….
       சார் நா பேசிக்கிட்டே இருக்கே நீங்க ஒன்னுமே சொல்லலையே என்றவனிடம் சுதாரித்துக்கொண்டு ஏம்பா இத நீயே அனுப்பலாமே , என்றவனிடம், இதில் முகவரியும் இல்லை பிளாஸ்டிக்கால் கவர் செய்து இருப்பதால் புரிந்து பார்ப்பதும் நாகரிகம் இல்லை சார் என்றான் .சரி நானே கொடுத்து விடுகிறேன் என்று கூறி  அனுப்பிட்டு தானே பிரித்து படித்தவனுக்கு  பேரதிர்ச்சி.இளவரசி கூறியது அனைத்தும் உண்மை என்று புரிந்தது நம்மால் தான் அவளுக்கு இவ்வளவு பெரும் துன்பம் நடந்திருக்கிறது. இதற்கு நானே காரணமாகி விட்டேனே என்று எவ்வளவு நேரம் அழுதிருப்பானோ தெரியாது….
       இளவரசிக்கு தொடர்பு கொண்டு நாளை உன்னைச் சந்திக்கிறேன் என்று கூறி இடத்தையும் நேரத்தையும் சொல்லிவிட்டு போனை துண்டித்தான்
         முகத்தில் புன்னகை இழந்து அவளை பார்ப்பதற்கே கூனி குறுகி நின்றான் செழியன். இளவரசியின் சந்தேகமும் ஊர்ஜிதமாகி தன்னையே அருவருப்பாக உணர்ந்தாள் .இனி நான் உனக்கு ஏற்றவள் இல்லை என்றும் என் வாழ்க்கை இத்தோடு முடிந்தது என்றும் கூறி கதறி அழுதவளை தேற்ற முடியாமல் தவித்து தலையில் அடித்துக் கொண்டு அழுதவனை ஒரு கை அவன் தோளை பற்றியது. யாரென்று திரும்பி பார்க்கையில் இளவரசியின் அப்பா தாயுமானவர் நின்று கொண்டிருந்தார்…
    இருவரும் பயத்தில் உறைந்து நின்றனர். அப்பா என்று ஓடி வந்து காலைப் பிடித்துக் கதறியவளைத் தூக்கி விட்டு கண்ணீரைத் துடைத்தவாரே  இன்னமும் இந்த அப்பாவ நம்பல இல்லமா என்றார்.
இன்னும் அழுகை பீறிட தேம்பியவளை அணைத்தார் .என்ன மன்னிச்சிடுங்கப்பா. நா எந்த தப்பும் பண்ணல. எனக்கே தெரியாம நடந்த தவறு இது. நா உங்ககிட்ட செழியனைப் பத்தி சொல்லி அறிமுக படுத்தலான்னு இருந்தே  ஆனா அதுக்குள்ள இப்படி நடந்துடுச்சி. அப்பா நீங்க செழியன தப்பா நினைக்காதீங்க அவருக்கும்  இதுக்கும் எந்த   சம்மதமும் இல்லப்பா. அந்த ராஸ்கல ஒருநாள் தான் அறிமுகப்படுத்தி வைச்சாரு. அதுவும் என்னோட கவியரங்கம் தொடர்பா. மற்ற எல்லாமே என்னோட அஜாக்கிரதையில நடந்தது. ஊர் பேர் தெரியாத ஒருத்தன பத்தி முழுசா தெரிஞ்சிக்காம  நம்பி  பழகினது என்னோட தப்பு தானேப்பா….
      சார் என்ன மன்னிச்சுடுங்க என்றவனை ; நீங்க ஒரு தப்பும் பண்ணல தம்பி என் பொண்ணுக்காக  இவ்வளவு சிரமப்பட்டு இருக்கிறத நினைச்சா எனக்கு உங்க மேல மரியாதையாவும் இருக்கு பெருமையாவும் இருக்கு . என்றவரிடம் அப்பா நீங்க எப்டிப்பா இங்க .உங்கிட்ட கல்யாணத்தை பத்தி பேசனப்ப இரண்டு நாள் டைம் கேட்ட பாரு அதுல இருந்தே உன்ன கண்காணிக்க ஆரம்பிச்சே. ஏன்னா எம் பொண்ணு எங்கிட்ட எதையும் மறைச்சதில்ல. அப்பறம் கனிகிட்ட பேசனதுல நீங்க ஒருத்தர் ஒருத்தர் விரும்புறது  தெரிஞ்சது . இவர போய் பாக்கலான்னா இவர் மதுரைக்கு போயி இருக்கிறது தெரிஞ்சது. அப்பறமா தான் அவரு உங்கிட்ட பேசினத கேட்டு உனக்குத் தெரியாம உன்ன தொடர்ந்து நா இங்க வந்தே …
       அப்பா இந்த அசிங்கத்தோட இவரோட நான்  வாழணுமான்னு தோணுது .இருவரும் பதற , இருங்க நா முழுசா பேசிட்றே அப்பறமா  நீங்க உங்க முடிவ சொல்லுங்க . இது எனக்குத் தெரியாம நடந்த ஒரு விஷயம். ஆனா எனக்குள்ள வளர இந்த உயிர் என்ன பாவம் பண்ணிச்சு. எந்த உயிரையும் அழிக்கற உரிமை யாருக்கும்  இல்ல. அதுமட்டுமல்ல     அன்று  நான் மரணித்ததால்  ஜனித்த இந்த உயிரை  செழியன் ஏற்றுக் கொண்டால்  நான்  செழியனை கல்யாணம் பண்ணிக்கிறேன்  இல்லேனா உங்களோடையே இருக்கேம்பா . நான்  இழந்த தாயின் அன்பு என் குழந்தைக்கு கருவிலிருந்தே கிடைக்கணும்பா.
     மரணித்து ஜனித்த இந்த கர்ப்பிணிய ஏத்துப்பீங்களா செழியா. தாயின் அன்பை உன்னிடம் உணர்ந்தவன் நான் .தாயாய் ஜனித்த  உன்னை இழப்பேனா இளவரசி . உன்னை இழந்ததால் இன்று இரு உயிருக்கு தாயாகி இருக்கிறாய் .என்றவனை மார்போடு அணைத்துக் கொண்டார் தாயுமானவர்

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!