எழுத்தாளர்: ரஞ்சன் ரனுஜா
அன்று அடை மழை பெய்து கொண்டிருந்த போது குளிர் நடுக்கத்தில் அந்தப் பாயில் சுருண்டு படுத்திருந்தாள், அந்த மூதாட்டி. அவளுக்கு வயது எழுபது இருக்கும். ஒளி இழந்த கண்கள் , நரைத்த தலை, குளிரால் கிடு கிடு என நடுங்கும் கூன் விழுந்து வளைந்த உடல் , தோள் சுருங்கிப் போன முகம். குளிர் தாங்காது தன் பக்கத்திலிருந்த அந்தப் போர்வையை எடுத்து போத்திக் கொண்டு இருந்தாள். மூன்று நாளாக குளிர் காய்ச்சல்,கவனிப்பார் யாருமின்றி தன் மரணத்தை எதிர்பார்த்து கொண்டிருந்தாள்.
அவளுக்கு ஒரே ஒரு மகன் ஜெயமோகன். மிகப்பெரிய கம்பெனி ஒன்றில் உயர் பதவியில் முகாமையாளராக கடமையாற்றுகின்றார். அவருக்கு ஒரு மகன் தீபம்.
தரம் பன்னிரண்டில் கல்வி கற்கின்றான். தனது தாயின் மீது மிகுந்த அன்பு உள்ளவன். அன்று அன்னையர் தினம். தன் தாய்க்காக ஒரு கவிதையினை
ஈரைந்து திங்கள் என்னை கருவில் சுமந்து!!
உன் உதிரத்தில் தாய் பாலினை உணவாக தந்து!!
பூமியில் நானும் ஒருவனாக வாழ!!
உன் வாழ்நாளையே எனக்காக அர்பணித்த என் தாயே!!
என்ன செய்து தீர்ப்பேன் உன் கடன்!!
என்றவாறு தீபன் எழுதிக் கொண்டிருக்க, அதனை அவதானித்த ஜெயமோகன்
”தீபா என்னடா அம்மாவுக்கு கவிதை எழுதுறியா நானும் இப்படித்தான் டா எங்க அம்மாவுக்கும் கவிதை எழுதி கொடுப்பேன். ம்மம் அதெல்லாம் ஒரு காலம் டா” என்றார்.
“ஆமாப்பா அம்மாவுக்குத்தான் எழுதுறேன் இன்னைக்கு அன்னையர் தினம் “என்றான் தீபன்.
“எழுது எழுது டா உன் தாய் பக்திக்கு அளவே இல்லை” என்று ஜெயமோகன் கூற
“அப்பா சிரிக்காதீங்க நம்ம பாட்டி நம்ம வீட்லதான் இருக்காங்க. நீங்க எப்பப்பா போயிட்டு பாட்டி கிட்ட பேசி இருக்கீங்க, நீங்க இப்ப எல்லாம் பேசுறதே இல்லனு பாட்டி என்கிட்ட சொல்லி ரொம்ப வருத்தப்பட்டாங்கப்பா”
என்று தீபன் கூறியதை கேட்ட ஜெயமோகன் எதுவுமே பேசாமல் தனது வேலை தளத்திற்கு செல்ல புறப்பட்டான். புறப்பட்டு செல்லும் வழியில் அவன் தாய் அவனை எவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு வளர்த்தாள், எவ்வாறெல்லாம் படிக்க வைத்தாள்.
என்பதையெல்லாம் அவன் நினைத்துக் கொண்டே செல்லும் போது,ஒரு நாள் ஜெயமோகன் சிறுவனாக இருக்கும்பொழுது இரவு வீட்டில் அவன் தனது தாய் தந்தையுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது சாப்பாடு தீர்ந்தினை அறியாத சிறுவனான அவன் தன் தாயிடம் மறுபடியும் உணவு கேட்டான்.
அவனின் அன்னையோ தான் உண்பதற்காக வைத்திருந்த உணவினை தனது மகனுக்கு கொடுத்துவிட்டு அவள் வெறும் வயிற்றில் தண்ணீரை மட்டும் அறுந்தி விட்டு படுத்து உறங்கினாள்.
என்றொல்லாம் தனது சிறுவயது ஞாபகங்கள் பற்பல அவனின் மனதுக்குள் துளிர் விட ஆரம்பித்தன .அன்று மாலை அவன் திரும்பி வீட்டிற்கு வரும்போது தனது தாய்க்காக ஒரு புடவையினை வாங்கிக் கொண்டே வந்தான்.
வீட்டிற்குள் வந்தவன்,தனது தாயின் அறைக்குச் சென்று “அம்மா அம்மா” என அழைத்தான்.பாவம் அவனுக்கு தெரியாது தனது தாயிடம் கடைசியாக பேசக் கூட அவனுக்கு கொடுத்து வைக்கவில்லை என்று.
குளிரால் நடுங்கி வெடவெடத்துபோன அவளின் உடல் மரக்கட்டை போல உணர்வற்று கிடந்தது.தாயின் அருகில் சென்ற அவன், ”அம்மா அம்மா” என அலறினான்.என்னதான் அவன் அலறி கூப்பிட்டாலும் அவனின் தாயின் மூடிய கண்கள் மறுபடியும் எப்படி திறக்கும், உடலை விட்டு போன உயிர் மீண்டும் தன் உடலை சேருமா என்ன? தான் செய்த தவறினை நினைத்து, நினைத்து செய்வதறியாது அவன் தன் தாயின் காலடியில் மண்டியிட்டு கண்களில் கண்ணீர் மல்க கதறி அழத்தொடங்கினான்.
“அம்மா என்ன பாருமா,என்கிட்ட பேசுமா எனக்குனு யாரு இருக்காமா உன்னை விட்ட யாருமே இல்லையேமா” என தன் பிள்ளை அழுவதை உணராது உயிரற்ற உடலாய் கிடந்த அவளை கட்டியணைத்துக் கொண்டான் அவளின் மகன்.
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: