ஒரு பக்க போட்டிக்கதை: கோழி மிதித்த குஞ்சு

by admin
63 views

எழுத்தாளர்: சர் கணேஷ்

அம்மா நான் சினிமாவுக்கு போறேன், அப்பா கிட்ட காசு வாங்கிகொடு என்றான் மணி.

அந்த சமையலறை சிஃக்லிருக்கிற பாத்திரத்தை வெளக்கி வைத்தால் வாங்கி  தருகிறேன் என்றாள் அம்மா ரமா.

முடியாது, நான் என்ன பெண் பிள்ளையா பாத்திரம்  துலக்க என்றான் மணி.

சரி, அப்ப சினிமாவுக்கு காசு தரமுடியாது பேசாம பள்ளி பாடம் படி என்றால் ரமா. மணி எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்து பார்த்தான்.

ஆனால், ரமா மசியவில்லை. நூறு ரூபாய் நோட்டு அவன் கண்முன்னே அலமாரியில் வைத்தால். இதை இப்போது நீ எடுத்துச் சென்றால் அது திருட்டு ஆனால் பாத்திரங்களை  விலக்கி விட்டு எடுத்தால்  அது உன் உரிமை.

எனவே  பாத்திரத்தை விலக்கி விட்டு எடுத்துக்கொள் என்றால் கண்களைக் கசக்கிக் கொண்டே  பாத்திரம் துலக்கச் சென்றான் மணி. இந்த சண்டையைப் பார்த்துக்  கொண்டு இருந்த மணியின் தங்கை சிந்து தன் தாய் ரமாவிடம் சென்று கேட்டாள்.

ஏம்மா அண்ணனை விலக்க  சொல்ற நான்  வேண்டுமானால் விலக்கித் தருகிறேன்  என்றால் வாடி அம்மா, அண்ணனை காப்பாத்த வந்த அன்புக்கரசி. எதிர்காலம்  அச்சம் மிகுந்தது. அப்போது எல்லோரிடமும் செல்வம் அதிகமாயிருக்கும் நேரம்  குறைவாகவே இருக்கும்.

தன் கையை ஊண்டியே கரணம் அடிக்கும் கட்டாயத்தில் இருப்போம். அப்போது  பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம் எவ்வளவு அவசியமோ அதுபோல ஆண்கள்  அடுப்பங்கரை வேலைகளை அறிந்திருப்பது அவசியம் என்றால் ரமா.

அடுப்பங்கரையில் இதைக் கேட்டுக் கொண்டிருந்த மணியின் மனது சொல்லியது. எதிர்காலத்தை  எதிர்கொள்ள குஞ்சை மிதிக்கும் கோழிக்குத் தெரியும் கோழி மிதித்தால் குஞ்சு சாகாதென்று.

முற்றும்.

ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/2024%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

You may also like

Leave a Comment

error: Content is protected !!