ஒரு பக்க போட்டிக்கதை: தாயுள்ளம்

by admin
56 views

எழுத்தாளர்: மாலதி. திரு

“கோகிலா வீட்டையும், கேட்டையும் பூட்டிட்டு வெளியில் வா…!” காரை வெளில  எடுத்துட்டுப் போறோம் என்றார் லோகு.

 சரியென்று தலையாட்டி விட்டு  ஹேண்ட் பேக்கை மாட்டிகிட்டு செல்போனில் பேசிக்கிட்டே

கேட்டுக்கு வெளியில் நிற்கும் காரில் ஏறுனாங்க கோகிலா.

 மருத்துவமனை எதிரில் கார் நின்றதும்… கண்ணசைவில் குழந்தைகளுக்கும்  லோகுக்கு டாட்டா சொல்லிட்டு அவசரமாக லிப்டில் ஏறி மூன்றாவது தளத்திற்குச் சென்ற கோகிலாவைக் கண்டதும் நர்ஸ் மீனா ஓடி வந்து வணக்கம் டாக்டர்  நான் போன்ல சொன்ன பேஷன்ட் இந்தக் குழந்தை தான் டாக்டர்…..!

மூச்சு விடமுடியாம ரொம்ப கஷ்ட படுது என்றதும், ஸ்டெதஸ்கோப்பை எடுத்து  நெஞ்சில் வைத்து  பார்த்துவிட்டு ,மீனா உடனே இஜிஜியும், எக்கோவும் எடுக்கனும், அவுங்க பேரன்ஸ வரச் சொல்லுங்க…! இல்ல டாக்டர் இந்தக் குழந்தைக்கு பேரன்ஸ் யாரும் இல்லையாம் டாக்டர்…! குழந்தை பிறந்ததும் குப்பத் தொட்டில போட்டுட்டுப் போயிட்டாங்களாம் டாக்டர்.நம்ம அன்பு இல்லத்தை நடத்தும் தென்றல் மேடம் தான் ஊர் மக்கள் போன் செய்ததும் உடனே போய் குழந்தைய பாத்துத் தூக்கிட்டு வந்து ஃபுல் செக்கப் பண்றதுக்காகச் சேத்துட்டுப் போயிருக்காங்க டாக்டர். உங்கள பாத்து சொல்லிட்டு போலாம்னு ரொம்ப நேரம் வெயிட் பண்ணுணாங்க… இப்ப தான் டாக்டர் அன்பு இல்லத்தில் இருந்து ஏதோ அவசரம் னு போன் வந்ததும் போனாங்க டாக்டர்.

தென்றல் மேடம், “கல்யாணமே பண்ணிக்காமா  எத்தன குழந்தைகளுக்கு அம்மாவ இருக்குறாங்க…..” மீனா..! சில பேர் எல்லாம் பேருக்கு  அனாதை இல்லம்  முதியோர் காப்பகம் நடத்தறேன்னு சொல்லிட்டு அதிலிருந்து கூட பணம் சம்பாதிக்கிறாங்க.ஆனா இந்தத் தென்றல் மேடத்தை எத்தன குழந்தைங்க அம்மா அம்மான்னு  கூப்பிடுது.

 அத கேக்கவே ஆசையா இருக்கு ன்னு சொல்லிக்கிட்டு இருக்கும் போது தென்றல் வந்தாங்க டாக்டர் குழந்தைக்கு என்ன ஆச்சு மூச்சு விட கஷ்டப்படுதுன்னு நர்ஸ் மீனா சொன்னாங்க…! பிறந்த குழந்தைய உடனே இப்படி தூக்கி போட்டதால சின்ன பிரச்சனைதான் டாக்டர்.

 இங்கு பேட்டர் ல ஒரு வாரத்துக்கு வச்சாச் சரியாகிடும். இந்தக் குழந்தையை வேணாம் னா நாங்களே வளத்துக்கிட்டுமா  மேடம் என்று கோகிலாவும்,

லோகுவும் கேட்டபோது  அன்பு இல்லத்தில் எத்தனையோ குழந்தைகள் இருந்தாலும் இந்தக் குழந்தைய தொட்டுத் தூக்கும் போது  அம்மாவா பீல் பண்ணுனேன் டாக்டர். மேலும் உங்களுக்கு ஏற்கனவே ரெண்டு குழந்தை இருக்கு. இப்ப இந்தக் குழந்தைய தத்தெடுத்துகிட்டுப் போன குழந்தைகளுக்குள் பாகுபாடு உண்டாகும்.  அதனால இது எங்க அன்பு இல்லத்திலேயே இருக்கட்டும் டாக்டர். உங்கள் அன்புக்கும், இரக்கத்திற்கும் மிக்க நன்றி டாக்டர். என்று சொல்லிட்டு குழந்தைய தூக்கிக்கொண்டு அன்பு அனாதை இல்லம் சென்றார்கள்  தென்றல் மேடம்.

டாக்டர் கோகிலாவும் லோகுவும், குழந்தைகளும் மீனாவும்  ஏன் மருத்துவமனை வாசலில் இருந்த பலரும் பத்து மாசம் சுமந்து பெத்தா தான் அம்மா வா.. தென்றல் தான் அம்மாவுக்கு எல்லாம் அம்மா. என்று சொல்லித் தென்றல் மேடத்தைக் கை கூப்பி வணங்கினார்கள்.

முற்றும்.

ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/2024%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

You may also like

Leave a Comment

error: Content is protected !!