ஒரு பக்க போட்டிக்கதை: தாய்மை

by admin
63 views

எழுத்தாளர்: ஹேமா நாராயணன்

தைபிறந்தால் வழி பிறக்கும் என வருடந்தோறும் காத்திருக்கும். கவிதா ஓர் இல்லத்தரசி,  சதீஷோடு திருமணமாகி பத்து ஆண்டுகள் உருண்டன.   மருத்துவ பரிசோதனையிலும் குறையில்லை.
ஜோதிடர் சொல்லிய பரிகாரம் எல்லாம் செய்தாயிற்று , அவர் சொன்ன தத்து எடுத்து  குழந்தை வளர்ப்பதை  என்பதைத் தவிர எல்லாம் செய்தாயிற்று.

ஒருநாள்  கடைத்தெருவில் கவிதா தன் நெருங்கிய  தோழி மீராவை சந்திக்க அவரவர்  திருமணம் குழந்தைகள் பற்றிய பேச்சு வரவும் கவிதா தன் கவலையைக் கூற,“எனக்கு  இரண்டு பெண் குழந்தைகள்,  மூணு வயசு மற்றும் ஆறுமாத கைக்குழந்தை. கணவர் திடீரென இறந்து விட்டார் ” என மீரா கண் கலங்கினாள்.  பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்தனர்.

மீராவுக்கு   அருகில் இருக்கும் பள்ளியில்   வேலை கிடைத்தது. பெரியவளை அதே பள்ளியிலும் சின்னகுழந்தையை ‘Creech ‘லும் சேர்த்தாள்.

ஒருநாள் காப்பகத்தில் இருந்து  குழந்தைக்கு காய்ச்சல் உடனே வரவும் என,  மீரா கிளம்பி குழந்தையை எடுத்துக் கொண்டு மருத்துவமனை சென்று வீடு திரும்பினாள்.

காலையில் எழுந்ததும் கவிதாவை தொடர்பு கொண்டு அனைத்தையும் விவரமாகக் கூறி    காலை 8.20 மணியளவில் குழந்தையையும்  மருந்து  விவரத்தையும் சொல்லி “ஸாரிடி ” என கிளம்பினாள்.

தினமும் இனிதே கழிய, ஒருவாரத்தில் குழந்தை உடல்நலம் தேறி இருவரும்  மிக நெருக்கமாயினர்.  கவிதா குழந்தையோடு  கொஞ்சி சந்தோஷமாக இருப்பதில் சதீஷ்   மகிழ்ந்தான்.

ஒருநாள்  மாலை வேலையிலிருந்து வந்து அவளைப் பார்த்த சதீஷ்  “கவி உனக்கு ஏதும் உடம்பு சரியா இல்லயா, ஏன் டல்லா இருக்கே” என  “ அதெல்லாம் ஒண்ணும் இல்லையே நா எப்போதும் போலதான் இருக்கேன்” என  “அப்படியா ஓகே”   சிரித்தபடி அவன் எழ முயல கையைப் பிடித்து இழுத்து இருத்த  “சொல்லு கவி என்ன?”என்று கேட்டதும்   “குழந்தைக்கு உடம்பு சரியாடுத்து,  மீரா வந்து குழந்தைய மறுபடி கீரீச்ல விடறேன்னு கேப்பால்ல   நா குழந்தைய விட்டுட்டு எப்படி இருப்பேன்னு”  கண் கலங்கினாள்.
“ நானே பாத்துக்கிறேன்னு சொல்லு” என்று சதீஷ் சொல்ல உடனே கவி “ எப்படி இருந்தாலும் ஒருநாள் அவ குழந்தய கீரீச்ல விடணும்னு கேப்பா இல்லங்க” “ஆமா இதில உனக்கு என்ன டவுட்”, என “ உங்களுக்கு என் ஃபிலிங்ஸ்ஸே புரியாது, என்னால அந்த குழந்தய பிரிய முடியாதுங்க, குழந்தையும் நா இல்லேனா ஏங்கிடுவாங்க” என அழுதாள். ”உன் வருத்தம்  புரியுது கவி, ஆனா பொறுமையா யோசி  ”  என்று கூறினான்.

குழந்தைதயை எடுத்துச் செல்லலாம் என  வந்த மீரா  இந்த பேச்சு வார்த்தை அனைத்தையும் எதேச்சையாக கேட்டு மன சஞ்சலத்தோடு குழந்தையை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தாள்.  இரவு தூக்கமே இல்லை . குழந்தையக் கொடுத்து அதனால் அவளுக்கும் குழந்தைக்கும் ஓர் பாசப்பிணைப்பு  ஏற்பட்டதை இவளது தாயுள்ளம் உணரத் தொடங்கியது. ,  பல குழப்பங்கள் வந்து போக ஓர் முடிவோடு தூங்கினாள். 

மறுநாள் பொழுது புலர்ந்ததும்  மனதில் நடந்தவைகள் படமாக ஓட “கடவுளே நான்  எடுக்கும் முடிவில் நீயே என்னுள் இருந்து வழி நடத்து”என வேண்டி விளக்கேற்றி சாமி கும்பிட்டாள்.  கவிக்கு போன் போட்டு ”  நீயும், சதீஷூம் சாயங்காலம் பக்கத்துல இருக்கற பிள்ளையார் கோவிலுக்கு கண்டிப்பா வரணும் பேசணும்.”  என  “ சரிடி  கண்டிப்பா  வரோம்” என வைத்தாள்.

பிள்ளையார் கோவிலில்  வந்து காத்திருந்தனர் கவியும், சதீஷூம். சிறிது நேரத்தில் மீரா  குழந்தைகளோடு வர, குழந்தை கவியைப் பார்த்து தாவினாள் .  பரஸ்பரம்  மீராவும் சதீஷூம் ஒருவரை ஒருவர் விசாரித்து,  அனைவரும் கோவிலுக்குள் சென்றனர்.

தரிசனம் முடிந்து அனைவரும் பிரகாரத்தில் அமர்ந்தனர்.  “என்ன மீரா ஏதோ முக்கியமா பேசணும்னு அவரையும் கூட்டிண்டு வரச் சொன்னே” கவிதான் ஆரம்பித்தாள்.  “சொல்றேன் சொல்றேன், அதுக்கு முன்னாடி  உங்களுக்கு குழந்த பிறக்கறதுக்கு பரிகாரம் என்ன சொன்னார் ஜோசியர் “ என்ற மீரா “புரியலயா பரிகாரமா ஒரு குழந்தைய வளர்த்தா உங்களுக்கு பிறக்கும்னு ஜோசியர் சொன்னார் னு” நிறுத்தியவள் “இன்னும் புரியலயா மக்கு குட்டிப்பொண்ண நீயே வளர்த்துக்கோ உங்க குழந்தையா, உங்க மூத்த குழந்தையா எப்பவும் உங்கூடவே ” என மீரா முடிக்க “என்னடி சொல்ற உனக்கு என்ன ஆச்சு , யாராவது ஏதாவது சொன்னாங்களா என்ன ஆச்சு” என கவிதாவும் சதீஷூம் ஒன்றும் புரியாமல் விதிர்த்து போனார்கள்.

“யாரும் ஒண்ணும் சொல்லல, உங்களோட பாசத்தையும் , குழந்தை உங்கிட்ட இருந்தா நல்ல படிப்பு, அன்பை அள்ளிக் கொடுத்து வளர்ப்பீங்க,  குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்கும். அதோட உனக்கும்  ஏதாவது செய்யணும் ரொம்ப நாளா ஆசப்பட்டேன் கவி. இப்போ அதை நிறைவேற்றின சந்தோஷம் மனம் நெறஞ்சிருக்கு ” என கையைப் பிடித்தாள் மீரா.

கவியும், சதீஷூம் பேச வார்த்தைகளற்று  அதீத மகிழ்ச்சியில் கண்ணில் நீர் நிறைய கைகூப்பி நெஞ்சில் சுமந்த குழந்தையை இனி காலத்திற்கும் வயிற்றில் சுமந்ததாக வளர்ப்போம் என்றபடி குழந்தையை அணைத்தனர்.

முற்றும்.

ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/2024%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

You may also like

Leave a Comment

error: Content is protected !!