எழுத்தாளர்: இந்துமதி
நான் விஜி என் அழைக்கப்படும் விஜியலஷ்மி. சின்ன வயசில் இருந்தே இந்த நாய், பூனை பார்த்து பயம். அதுவும் வீட்டில் நாய் கடிச்சா தொப்புளைச் சுற்றி ஊசி, பூனை முடி நமக்கு ஆஸ்த்மா வர காரணம் என்றெல்லாம் வேறே சொல்லி இன்னும் அதிக பயமுறுத்தி வைச்சு இருந்தாங்க.
ஆனால் என் ஆபீஸ் தோழி ஸ்ரீ லதா வீட்டுக்கு ஒரு நாள் போனேன். அங்கே இரண்டு அழகு பூனைக் குட்டிகள் அவள் பேத்தியோடு விளையாடிக் கொண்டு இருந்தன. நான் ஏய், என்னப்பா குழந்தைக்கு அலர்ஜி ஆகாதா, இப்படி பூனையோடு விளையாட விட்டா? என்று .
ஸ்ரீ சொன்னா , அட போடி என் பெண்ணுக்குத் திருமணம் ஆகி பத்து வருடம் குழந்தை இல்லை. பார்க்காத வைத்தியம் இல்லை. அவளுக்கு கொஞ்சம் டிப்ரஷன் ஆரம்பிச்சது. என்ன செய்யன்னு யோசிச்சு அப்போ அவ ஒரு மாறுதலுக்கு இந்த பூனைக்குட்டி களை வாங்கி வந்து அதுக்கு ஏதோ ஊசியெல்லாம் போட்டு எடுத்து வந்தா.
அதுங்க பெயர் டீனா, பீனா. குழந்தைகளுக்கு வாங்கறா மாதிரி ஸ்னாக்ஸ், விளையாட்டு பொருட்கள் எல்லாம் இதுக்கும் உண்டு. இதுகளும் அவளோடும் மாப்பிள்ளையோடும் ரொம்ப பாசமா விளையாட இரண்டே மாதத்தில் தாய்மையடைந்தாள்.
இந்தக் பூனைக் குட்டிகள் தான் தனக்கென ஒரு குழந்தை வரக்காரணம் என பெண் மாப்பிள்ளை இருவரும் மனதார நம்பினார்கள். அதனால் குழந்தை பிறந்தப்போ கூட பூனை வீட்டில் தான் வைத்திருந்தோம்.
பேத்தி பெயர் சனா. அவளும் பிறந்ததிலிருந்து பூனையைக் கண்டு பயமின்றி விளையாட ஆரம்பித்தாள். இவங்க யாரும் யாரை விட்டும் இருக்க மாட்டாங்க. எங்காவது வெளியூர் போனா பூனைகளும் கண்டிப்பாக காரில் வரும். பெட் அனிமல் அனுமதிக்கிற ஹோட்டலில் மட்டும் ரூம் போடுவார்கள். எங்க குடும்பத்தில் டீனா, பீனா இல்லாமல் எதுவும் நடக்காது.
என் வீட்டில் குவா குவா கேட்க, நாம் என்ன வளர்க்கலாம் பூனையா, நாயா என்று நானும் மனம் மாறி யோசிக்கத் தொடங்கினேன்.
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!ள
மேல் விபரங்களுக்கு: