ஒரு பக்க போட்டிக்கதை: தாயுள்ளம்

by admin
57 views

எழுத்தாளர்: இந்துமதி

பார்வதி மாமிக்கு கையும் ஓடலை காலும் ஓடலை.”சரோஜா சமையல் எல்லாம் ஆச்சா? 

சேமியா பாயாசம் மட்டும் microwave ல வச்சுடுங்கோ, என் பேத்திக்கு சூடா இருந்தா தான் பிடிக்கும்.”

“வித்யா,ஏர்போர்ட்டுக்கு நேரமாச்சு.”

“வந்துட்டேன் மா.” Arrivals ல கீர்த்தி கை அசைத்தாள்

காரில் ஏறி வீடு வந்தனர்.

கீர்த்தி , “சரோஜா மாமி,உஙக  signature சேமியா பாயாசம்  போர்ட்டிக்கோ வரை 

மணக்கிறதே “ என்றாள்

சிறிய குசலம் விசாரிப்புக்கு பின்,கீர்த்தி  முகம் கழுவ சென்றாள்

டாக்டர் கீர்த்தி,Phd (Humanities)செய்துவிட்டு இங்கு IIM Lucknow ல

வேலைக்கு வந்த்திருக்கிறாள்

அவள் குளிக்க சென்ற போது பார்வதி மாமி கடந்த்த காலத்தை அசை போட்டாள்

“வித்யா எங்க போனாலும் ,எல்லாரும்,உனக்கு குழந்தை இல்லயான்னு கேக்கறா

IVF  , பண்ணிக்கலாமே?நமக்கு பணம் இல்லயா என்ன? ”

அவள் சொன்னாள்”,இல்லை ம்மா ,நானும் அவரும் முடிவு பண்ணிட்டோம்

Adopt பண்ணிக்க போறோம்”.

பார்வதி மாமி “அந்த குழந்தை என்ன ஜாதி என்ன Gene தெரியாம”

வித்யா சொன்னாள்” எல்லாம் நம்ம வளர்ப்புல தான் மா

Born free பார்த்து இருக்கியே,அதுல வர lion cub,வளர்தவ கிட்டயே ஓடி வந்த்துடுமே

அது போல தான் வளர்ப்பும்.”

இப்போது பார்வதி பாட்டி அதை மனதார உணர்ந்தாள்

டைனிங் டேபிள் ல சாப்பிடும் போது பாட்டி கீர்த்தி கிட்ட கேட்கிறாள்

“நீ ஏன் US job offer வேண்டான்னுட்டு இங்கே வந்து IIM க்கு வேலைக்கு

Opt பண்ணின..”

கீர்த்தி சொன்னாள்,”அம்மா உனக்கு supportive a இருக்கற மாதிரி,நானும்

அம்மாகிட்ட இருக்கணும்னு தோணித்து “என்று .

பாட்டி சிலிர்த்து போனாள்.கீர்த்தி கை கழுவ சென்ற்போது,வித்யாவின் கையை

இறுக பற்றினாள்,அது ஆயிரம் ஆயிரம் உணர்ச்சி பூர்வ தகவல் சொன்னது.

முற்றும்.

ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/2024%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

You may also like

Leave a Comment

error: Content is protected !!