ஒரு பக்க போட்டிக்கதை: தாய்மையே வரமாக

by admin
60 views

எழுத்தாளர்: மு.லதா

என்ன எங்க வீட்டு ராணி ஏதோ ஆழ்ந்த யோசனைல இருக்கீங்க? என்றான் முரளி.   ம்……என்று பெருமூச்செறிந்தாள் சந்திரா.என்னடா சொல்லலாம்னா சொல்லு.ஒண்ணுமில்லப்பா  என்றவளின் கண்கள் அறையில் உள்ள குழந்தைகள் படம் போட்ட வால்போஸ்டரில் போய் நிலைத்தது.கண்கள் குளம் கட்டியது.என்னடா சந்திரா மறுபடியும் ஆரம்பிச்சுட்டியா? பி பாஸிட்டிவ் ஐ சே என்று கத்தினான் முரளி.இல்லப்பா தோணல, ஆச்சு 7 வருஷம் ஓடிப்போச்சு.சரி ஓகே, நான் ஒண்ணு சொல்றேன் கேப்பியா? என்றான் பரிவுடன் அவள் தலையைக் கோதியபடியே. என்ன சொல்லப்போற? என்றாள் சந்திரா.நாளைக்கு ஒரு ஹாப் டே ஆபிஸ்க்கு லீவப் போட்டுட்டு நாம ஒரு இடத்துகக்குப் போறோம்.அப்படியே கோவில் போய்ட்டு வெளில சாப்பிட்டு வரலாம் சரியா?இப்ப தூங்க வா.ரெண்டுபேரும் காலம்பற ஆஃபீஸ் போக வேண்டாமா வாடா என்றவனின் நெஞ்சில் முகம்புதைத்து அழுதபடியே உறங்கினாள். இந்த சந்திரா முரளிதரனுக்குத் திருமணம் முடிந்து 7 வருடங்கள் ஆயிற்று,  இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை.                                             

மறுநாள் முரளி எப்போ வருவ? நான்  என் ஆஃபீஸ் க்கு வெளில காத்துக்கிட்டிருக்கேன் என்றாள் அலைபேசியில் சந்திரா.இதோடா 5நிமிஷத்ல அங்க இருப்பேன் என்றான் முரளி .      எங்கப்பா போறோம்? சிட்டியத்தாண்டி வந்துட்ட….இதோ வந்தாச்சு என்றபடி காரை குழந்தைகள் காப்பகத்தில் நிறுத்தினான் முரளி.கோபத்துடன் முரளி என்று கத்தினாள் சந்திரா….உனக்கு எத்தன முறை சொல்றது, எனக்கு தத்தெடுக்கப் பிடிக்காதுன்னு. நாளைக்கே கோபத்தில அந்தக் குழந்தயக் காயப்படுத்தற மாதிரி ஏதாச்சும் சொல்லிட்டா…..அவ்வளவுதான் என்று பிடிவாதமாகக் காரை விட்டு இறங்க மறுத்தாள் சந்திரா.வந்த கோபத்தை அடக்கிக்கொண்டான் முரளிதரன். சரி இனிமே ஏங்காம சந்தோஷமா இருப்பியா?  சத்தியம் பண்ணு, இல்ல இறங்கி வா என்றான். சரி இனிமே சத்தியமா ஏங்க மாட்டேன்,  சந்தோஷமா இருக்கேன்,  நீ முதல்ல கார எடு என்றாள் சந்திரா.      இரவு அவன் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டே முரளி நான் ஒண்ணு சொல்வேன் கோபப்படாம கேப்பியா?என்றாள் சந்திராஎன்ன சொல்லு. இல்ல இந்த மலடிய மறந்துட்டு…….மறந்துட்டு செத்துறுன்னு சொல்றியா,அதென்னடி மலடின்னு புதுப்பெயர….வேண்டாம் சந்திரா….விடிஞ்சா நம்ம கல்யாணநாள்னு பாக்கிறேன் என்றான் பல்லைக்கடித்த படி.அன்றையப்பொழுது ஊடலுடன் கழிந்தது.மறுநாள் சந்ராம்மா நம்ம இந்த வீக் என்ட்ல குலதெய்வம் கோவிலுக்குப் போய்ட்டு வரலாமா?அதுவும் ட்ரெ’யின்ல ஹைய்யா ரெயில்லயா …ஓ போலாமே ….. ஆனா  முன்பதிவு செய்யலையே என்றாள் ஏக்கத்துடன். டொட்டடெய்ங் என்றபடி ஏசிக்கோச்சில் முன்பதிவு செய்த டிக்கெட்டை எடுத்துக் காண்பித்தான் முரளி.ஏய் இது எப்போ பண்ணின என்றாள் குதூகலத்துடன்.இரண்டு நாட்கள் கழித்து உறசாகமாகக் கிளம்பினார்கள்.                                                                  

முரளி முரளி என்றாள் சந்திரா.என்னடா கண்ணம்மா, ரெண்டுநாள் போனதே தெரியலேல்ல.எனக்கு என்னமோ இந்த ட்ரிப்ல அம்பாள் என்னவோ சொன்ன மாதிரியே இருந்துச்சு.ரெயிலின் அசைவுகள் தாலாட்டுப் பாடவே ஏதேதோ பேசியபடி உறங்கிப்போனார்கள் இருவரும்.       

திடீரென்று வண்டி பயங்கரக் குலுக்கலுடன் நின்றது.ஒரே அலறல் சத்தம். இருவரும்கைகளைக் கோர்த்தபடி வெளியில் இறங்கினர்.ஐயோ என்ற அலறல் சத்தம், இருட்டு, புகை…அங்கு கண்ட காட்சிகள் ரத்தத்தை உறைய வைப்பதாக இருந்தது. இன்ஜினுடன் இணைந்த இரண்டு கோச்சுகளில் தீ விபத்து ஏற்பட்டதன் விளைவே…அத்தணை சத்தத்திலும் ஒரு குழந்தையின் அழுகுரல் இவள் காதில் ஒலித்தது.அந்த இடத்தை நோக்கி ஓடினாள் சந்திரா.அங்கே கண்டகாட்சி….ஓர் ஆணின் பாதி எறிந்துபோன உயிறற்ற உடல்…..அருகே உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த ஒரு பெண்.. அவளருகே ஒரு 3 மாதக்குழந்தை.. அந்தப் பெண்ணுக்கு தீக்காயம் ஏதுமில்லை..ஆனால் பின்மண்டை முழுவதும் இரத்தக்களறியாக இருந்தது.சந்திரா ஓடிப்போய் குழந்தையைத் தூக்கிக்கொண்டு கத்தினாள்……ஐயோ யாராச்சும் இந்தப் பொண்ணக் காம்பாத்த வாங்களேன் என்று அழுதாள்.அந்தப் பெண் சந்ராவை அருகே வரும்படி சைகை காண்பித்தாள்..அவளருகே குனிந்த சந்ராவிடம்..அக்…..கா நாங்க ரெண்டு பேரும் அநாதை ஆசிரமத்தில் வளந்தவங்க எங்க குழந்தயும் அங்கதான் வளறணும்னு விதியோ என்னவோ….ஒரு நல்ல ஆஸ்ரமத்துல என்ற படியே அப்பெண்ணின் உயிர் பிரிந்தது.பேச்சின்றி உறைந்து போய் குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்டாள். இல்லம்மா இனிமே இது எங்க குழந்தை,  உங்களுக்கு இறுதிச்சடங்கும் நாங்களே பண்றோம்மா, முரளி உனக்கும் ஓக்கேதானே என்று அருகில் நின்றவனின் மீது சாய்ந்து கொண்டு வாய்விட்டு அழ ஆரம்பித்தாள்.குழந்தை அவள் அணைப்பில் இதமாக உறங்கிப் போயிருந்தது..ஆம் சந்திரா தாயாகிவிட்டாள்.முரளி இருவரையும் ஒருசேரத் தழுவிக்கொண்டான்.

முற்றும்.

ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/2024%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

You may also like

Leave a Comment

error: Content is protected !!