எழுத்தாளர்: விஜயா சுப்ரமணியம்
வீட்டில் பூஜை நடந்து கொண்டு இருக்கிறது, மருமகள் கீதா தான் பூஜைக்கான வேலைகள் எல்லாம் செய்தாள், சங்கர சாஸ்த்ரிகளுக்கு மூன்று மகன்கள், இருவருக்கு மணமாகி விட்டது, மூத்த மகன் இறந்து ,விட்டான், இரண்டாவது மகனுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது, பூஜை முடிய போகிறது, எல்லோரும் குளித்து விட்டு ஆரத்திக்கு வர வேண்டும்,,எல்லோரும் வந்து விட்டார்கள், சபரியை காணவில்லை, சபரி,பூஜைக்கு வரவில்லே என்று தெரிந்தவுடன் சாஸ்த்ரிகள் கண்கள் கோபத்தால் சிவந்தது,
அப்பொழுது தான் ஐந்து வயது சபரி உள்ளே நுழைந்தான், கையில் ஒரு சக்கரம், பார்த்த சாஸ்த்ரிகள், கோபத்தில் கையில் இருந்து மணியை தூக்கி எறிந்தார் ,நெற்றி பொட்டில் பட்டு ரத்தம் வர ஆரம்பித்தது, கண்ணீரும்,ரத்தமும் கலந்து தந்தையை பார்த்தான் சபரி, தான் செய்த தப்பு அந்த குழந்தைக்கு புரியலை,
,கீதா ஓடி வந்து அவனை கட்டி தழுவி கொண்டாள், செய்த தப்பு என்ன என்று தெரியாமல் மலங்க மலங்க விழிக்கும் சபரியை பார்த்து அவள் மனம் வலித்தது, ரத்தத்தை தொடைத்து காயத்திற்கு மருந்து போட்டாள், சரியாக பேச வராத அவனை எப்படி தன், ,வேதத்திற்கு வாரிசாக்க முடியும்? மூத்த மகன் இல்லை, இரண்டாவது மகன் வேதம் படிப்பதில் விருப்பம் ,காட்டவில்லை
பெரிய வேத ,விற்ப்பன்னரான ,சாஸ்த்ரிகள் சபரி பிறக்கும், ,முன் அவனைப்பற்றி ,பெரிய,,கனவு கண்டிருந்தார்,,முதலில் மனைவி இறந்தாள், இரண்டு வயது ஆனவுடன் அவருக்கு தெரிந்தது அவனால் சரியாக பேசக் கூட முடியாது, திக்கு ,வாய்,அன்றில் இருந்து, ,,அவனை வெறுக்க ஆரம்பித்தார், தந்தை வெறுக்கும் பொழுது இரண்டாவது மகனும் அவன் மனைவியும் அவனை வேலைக்காரனாக வேலை வாங்க ,ஆரம்பித்தார்கள், ஒரே ஆறுதல் கீதா அம்மா தான்,ஆம் சபரி அவளை ,அம்மா என்று தான் கூப்பிட்டான், யார் திட்டினாலும் கீதாவின் மடியில் விழுந்து அழுவான், எல்லோரும் அவனை வேலை வாங்கும் பொழுதும், கேலி செய்யும் பொழுதும் அவள் இதயத்தில் இரத்தம் வடியும், தாய்மை என்றால் என்னவென்று சபரியை மார்போடு அணைத்து அவன் கண்ணீரை தன் புடவை முந்தானையால் தொடைக்கும் பொழுது “தான் புரியும் , இரவு அவளை கட்டிக் கொண்டு
உறங்குபவனின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கண்ணீர் விடுவாள்,
அண்ணனுக்கு அயர்ன் பண்ணின டிரஸ் வாங்கி கொடுக்க சபரி தான் ஓடணும், லேட்டாகி விட்டால் முதுகில் ஒரு அடி, அவர “மனைவிக்கு பூ வாங்கிண்டு வந்து கொடுக்கணும், தந்தை அவனை வெத்திலை சீவல் வாங்கிண்டு வர அனுப்புவார், வேகமாக வரவில்லை என்றால் கையில் இருக்கும் விசிறியால் அடி, தான் செய்த தப்பு என்ன என்று தெரியாமல் மலங்க மலங்க நிற்பான் சபரி,
கீதா சமைகககும் பொழுது அவள்,,கூடவே புடவை பிடித்துண்டு நிற்பான், பாத்திரம, தேய்க்கும் பொழுதும் தானும குட்டி கையில் பாத்திரத்தை தேய்ப்பான், கீதா வேண்டாம் என்று சொன்னாலும் கேட்க மாட்டான், கையை நன்றாக அலம்பி விட்டு ஒரு முத்தம் கொடுத்து கட்டி கொள்வாள்,,யாராவது ஏதாவது சொன்னால் கீதாவுக்கு தாங்காது, ,நீ என்ன அவளுடைய அம்மாவா? “என்று கேட்பார்கள்,
“ஆமாம் நான் தான் ,அம்மா””என்று சபரியை கட்டி கொள்வாள், தினமும் வேத க்ளாஸ் நடக்கும், தந்தை அவனை பார்த்தாலே கோபம் கொள்வார, அவனை பார்த்தாலே இறந்த மனைவியின் நினைவு வரும், இன்னும் கோபம் அதிகமாகி கத்துவார்
எவ்வளவு திட்டினாலும் ஒரு ஓரமாக அமர்ந்து அமைதியாக கேட்டுக் கொண்டு இருப்பான்,,வேத பாடம் முடிந்ததும் ஒரு மூலையில் அமர்ந்து அன்று சொன்ன பாடத்தை எப்படியோ சொல்வான்,,
,,,ஒரு நாள், சங்கர் சாஸ்த்ரீகள் தன் நண்பர் சாம்பு ஜோதிடரிடம் இரண்டு ஜாதகத்தை பொருத்தம் பார்க்க கொடுத்தார்,மறுநாள் ,காலையில் ஜாதகத்தை வாங்க சபரியை அனுப்பினார், வாங்கி வரும் வழியில் சபரி தடுக்கி விழுந்து ஜாதகம் மண்ணில் விழுந்து மண்ணாகி விட்டது, அந்த மண்ணு டனே வீட்டுக்கு எடுத்துண்டு போய் தந்தையிடம் கொடுத்தான், மண்பட்டு சில இடங்களில் கிழிந்து இருக்கும் ஜாதகத்தை பார்த்து கோபம் கொண்டு பளாரென்று கன்னதில் அறைந்தார், இனிமே என் கண்முன்னாலே முழிக்காதே? உனக்கு இந்த வீட்டில் இடம் இல்லை. ” என்று படியில் இருந்து பிடித்து தள்ளினார,
தலையில் அடிபட்டு கிடந்த அவனை பார்த்து அப்படியே அவறினாள்,கீதா ஆஸ்பிடலுக்கு தூக்கிண்டு போய் கட்டு போட்டாள், மயஙகி கிடக்கும் அவனை பார்த்து பெறா, விட்டாலும் அவள் வயிறு ,துடித்தது,,இனி இந்த ,வீட்டில் இந்த வீட்டில் குழந்தை இருக்க்ககூடாது,,
வீட்டுக்கு போகிறாள், சங்கர சாஸ்திரிகளிடம் தான் சபரியை ஒரு ஆசிரமத்தில் சேர்த்து சிகிச்சை கொடுக்க போகிறேன் “என்று சொல்கிறாள், அங்கே சேர்த்து விட்டு வந்துடு, நீ என்ன அவனை பெற்ற தாயா? “இங்கே யாரு கவனிப்பா? இங்கும் சாஸ்த்ரிகளின் சுயநலம், யாரு வீட்டு வேலையை கவனிப்பா?
இகழச்சியாக ஒரு புன்னகை செய்தாள்” “அப்பா சபரி என் பிள்ளபா?”
பெற்றால் தான் பிள்ளையா? பெறாத பிள்ளை அப்பா அவன்”
அவள், சபரியுடன் கிளம்பி விட்டாள் அவனுக்கு புது வாழக்கை கொடுக்கணும் என்று,,தன் வாழக்கையே தியாகம் செய்ய துணிந்து விட்டாள் தான் பெறாத பிள்ளைக்காக
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: