எழுதியவர்: நா.பத்மாவதி
கேள்வி 5: நான் கடவுளை மட்டுமே சரணமாகப் பற்றுவது எப்போது?
ஒரு பரிதவிக்கும் சாமான்ய மனிதன் ஆதித்யா. மனதில் ஏராளமான கேள்விகளுடன், அவன் ஒரு புனித மலையை அடைந்தான். குகையில் அமைதியாக ஒருவர் கண்கள் மூடி அமைதியாக அமர்ந்திருந்தவர் முகம் கருணை நிறைந்திருந்தது.
கண்கள் திறக்கும் வரை காத்திருந்து “ஐயா… நீங்கள் யார்?” என்றான் மிகவும் தவிப்புடன் ஆதித்யா.
“நீ யார் என்று அறிய வந்தாயா? இல்லையெனில் நீ யாராக வந்தாய் என்பதை கேட்க வருகிறாயா?” என்றார் அந்த முனிவர் போல இருந்தவர்.
“என் மனதில் சில கேள்விகள் இறைவனிடம் கேட்க வேண்டுமன எழுகின்றன. அவற்றை தெளிவுபடுத்த தங்களால் முடியுமா? பதில்களைப் பெற்றால்தான் நான் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வெளிச்சம் கிடைக்கும்.” என்றான் ஆதித்யா.
“கேள்… ஆனால் ஏன் இநத கேள்விகளை என்னிடம் கேட்கிறாய் என்ற காரணம் கூறு.” என்றார் அந்த முனிவர்.
“நான் கடவுளை மட்டுமே சரணமாகப் பற்றுவது எப்போது?” என்றான் ஆதித்யா
“உன்னால் தனிச்சையாக எந்த செயலும் சாதிக்க முடியாது. உனக்கு உதவ இறை சக்தியால் மட்டுமே முடியும் என்று நீ உணரும் தருணமே நீ இறைவனைச் சரணடைவாய். உனது நிழல்கள் உனக்கே பயமாக இருக்கும்போது, ஒளிக்கு நீ கைகூப்புவாய். ஆனால் அந்த ஒளி, இறைவனே என்று உணரும் போது நீ உண்மையான சரணாகதியை அடைவாய்.” என்றார் அவர்.
“அப்படியென்றால் என் வாழ்க்கை தோல்விகள் நிறைந்தது தானே?” என வருத்தப்பட்டான் ஆதித்யா.
“வெற்றி, தோல்வி என எதுவும் இல்லை. சிலருக்கு திறக்கப்படாத கதவுகள் மட்டுமே இருக்கும். சிலருடைய கதவுகளைத் தள்ள வேண்டும், சிலருடைய கதவுகள் அச்சமாகத் தோன்றும். ஆனால் உன் உள்ளே இருக்கும் கதவுகள் திறந்தால், வெளியில் எதுவும் சுவாரசியமாகத் தெரியாது. நீயே கதவு, நீயே வழி, நீயே இறைவன்.”
“நன்றி ஐயா… என் மனதின் உணர்வோடு தொடங்கிய கேள்விகள், உணர்ச்சிகளின் அமைதியுடன் தீர்வை கண்டன.
உங்களின் பதில்களை
கடவுளின் பதிலாக ஏற்கிறேன். நீங்கள் கூறியது வெறும் வார்த்தைகள் அல்ல, என்னைப் போல பல உள்ளங்களின் பிரதிபலிப்பு.தெளிய வைத்ததற்கு நன்றி ஐயனே”
என்றபடி அவர் காலில் விழுந்து எழும் போது அவரைக் காணாது திகைத்தான் ஆதித்யா. அவர்தான் இறையோ? அவரோடு அவன் நடத்திய உரையாடல்களை எண்ணி அவன் உடலும், உள்ளமும் குதூகலித்தது.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.