எழுதியவர்: உஷாமுத்துராமன்
தேர்வு செய்த படம்: படம் 5
நந்தினி சிறு வயதிலேயே ஒரு விபத்தில் அப்பா அம்மாவை இழந்து விட அனாதை இல்லத்தில் வளர்ந்த பெண். அவளுக்கென்று யாருமே இல்லை நன்றாக படித்ததால் எளிதாக வேலை கிடைக்க இப்போது வேலை கிடைத்தவுடன் அனாதை இல்லத்தில் இருந்து வெளியே வந்து ஒரு ஒர்க்கிங் உமன் ஹாஸ்டலில் தங்கி இருந்தாள். ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல போஸ்டில் இருக்கும் அவள் தினமும் செல்லும் பாதையில் சிவாவும் வர இருவரும் பார்த்து மெலிதாக முதலில் புன்னகைத்துக் கொண்டவர்கள் பிறகு ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
சிவாவின் அப்பா காலமாகி விட அம்மா அவனை மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வைத்தாள். அவனும் வீட்டின் நிலைமை உணர்ந்து நன்றாக படிக்க அவனுக்கும் நல்ல வேலை கிடைத்தது ஒரு தங்கையும் இருப்பதால் அவன் மிகவும் அக்கறையுடன் வேலை பார்த்து தங்கைக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து வந்தான். அம்மாவுக்கும் மகன் பொறுப்பாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் சில காலமாக சிவாவின் போக்கில் ஒரு சிறு மாற்றத்தை கண்ட அம்மா என்னவென்று அவனிடம் மெலிதாக விசாரிக்க அவன் தான் நந்தினியை காதலிப்பதாக சொன்னான்.
முதலில் அதிர்ச்சியடைந்த சிவாவின் அம்மா பிறகு இந்த காலத்தில் இதெல்லாம் சகஜம் என்று நந்தினி எப்போது வேண்டுமானாலும் நீ அழைத்துக் கொண்டு வரலாம் என்று அவனுக்கு கிரீன் சிக்னல் காட்டினாள்.
மறுநாள் காதலர் தினம் நந்தினிக்கு தன் காதலை எப்படியாவது சிவாவிடம் சொல்ல வேண்டும் என்று ஆசை சிவாவுக்கும் அதுதான் ஆசை. ஆனால் இதுநாள் வரை இருவரும் நண்பர்கள் என்று சொல்லி பழகி வந்தார்கள் தவிர ஒரு நாள் கூட அவர்கள் இருவரும் தாங்கள் காதலிப்பதாக சொல்லவில்லை.
காதலர் தினத்தன்றாவது நாம் நம் காதலே சிவாவிடம் சொல்ல வேண்டும் என்று நந்தினி தீர்மானித்தாள். அன்று காதலர் தினம் இருவரும் சந்திக்கும் இடத்தில் நின்று கொண்டிருக்கும் போது திடீரென்று சிவா நந்தினி அணைத்து அவளுடைய உதட்டில் முத்தமிட்டான் இதை சற்றும் எதிர்பார்க்காத நந்தினி இன்ப அதிர்ச்சியானாள்.
இருந்தாலும் பெண்மை தலை தூக்க வெட்கம் நாணம் எல்லாம் ஒன்று சேர அவள் அவனை தள்ளிவிட்டு பின்னால் திரும்பிக் கொண்டாள். ஓடி சென்ற சிவா “ஏன் என்னை உனக்கு பிடிக்கவில்லையா?” என்று மெதுவாக கேட்டான்
“பிடிக்கும் தான் இருந்தாலும்…..”என்று அவள் இழுத்தவுடன் அவன் தான் அம்மாவிடம் தன் காதலை சொன்னதாகவும் உன்னிடம் கூட சொல்லவில்லை ஆனால் நான் அம்மாவிடம் சொல்ல என் அம்மா இதற்கு ஒத்துக் கொண்டு விட்டாள் என்று தன் வீட்டில் நடந்த நிகழ்ச்சியை சொன்னான்.
“அப்படியா நான் இதை எதிர்பார்க்கவே இல்லை உங்கள் வீட்டில் என்ன சொல்வார்களோ என்று மிகவும் பயந்து கொண்டு இருந்தேன். ஏனென்றால் நான் ஒரு அனாதை இல்லத்தில் வளர்ந்த பெண் உங்கள் அம்மாவுக்கு குடும்பத்தில் அம்மா அப்பா உடன் இருக்கும் பெண்தான் உங்களுக்கு மணம் முடிப்பார்கள் என்று நினைத்தேன்” என்று அவள் சொல்ல அவன் “அதெல்லாம் ஒன்றும் இல்லை என் அம்மா மிகவும் பரந்த மனப்பான்மை உடையவர் நீ எப்போது சொல்கிறாய் என்று சொல் நான் உன்னை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு என் அம்மாவுக்கு அறிமுகம் செய்கிறேன்” என்று சொன்னான்.
“ஓகே சிவா நான் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பாக உன் வீட்டிற்கு வருகிறேன்” என்று சொல்ல மிகவும் மகிழ்ச்சியாக சிவா வீட்டடிற்கு செல்ல போகும் நாளை எண்ணிக் கொண்டிருந்தாள் நந்தினி.
“தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்” என்ற வாசகங்களை நாம் மறந்து விட்டோம். கண்டிப்பாக நம் மனதில் உள்ள காதலை என்றோ சொல்லியிருந்தால் நமக்கு இதற்கு முன்பே இது போன்ற சந்தோஷமான ஒரு செய்தி கிடைத்திருக்கும் என்று நினைத்துக் கொண்ட நந்தினி சிவாவின் அம்மாவை பார்த்து பேச இருவருக்கும் பிடித்துப் போக அங்கு டும் டும் என்ற திருமண நிகழ்வு மிக மகிழ்ச்சியுடன் நடந்தது.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.
