எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
ஆம். அவள் பெயர் ரஞ்சனி.
ராகத்தின் பெயர்.
நாங்கள் கல்லூரியில் ஒரே வகுப்பு படித்து வந்தோம். நான் அவளை பார்த்த முதல் தடவையே காதலிக்க ஆரம்பித்து விட்டன். அவள் அழகு தனி சிறப்பு அப்போது 16 வயதினிலே படம் வந்த காலம். ரஞ்சனியை எல்லோரும் மயில் என்றே சொல்வார்கள். எனக்கு 3 வருடமும் 3 நொடியில் போனது போல் ஒரு உணர்வு.
இரண்டாம் வருடம் படிக்கும் போது அவரிடம் என் காதலை தெரியப்படுத்தினேன். அவர் அதற்கு ‘ இப்போது இது அவசியமா…? ” என்று சொல்லி கிளம்பி விட்டார்.
ஆனால் எனக்கு நன்கு தெரியும் அவர் மனதில் நான் இருக்கிறேன் என்று. ஆனால் அவர் தயங்குவது ஏன் என்று புரியவில்லை.
3ம் ஆண்டு படிக்கும் போது ஒரு அதிர்ச்சி. பேரிடி. என் உயிர் ரஞ்சனிக்கு கல்யாணம் நடந்து முடிந்தது. அவர் எனக்கும் பத்திரிகை அனுப்பி வைத்தார்.
என் மனம் உடைந்தது. வாழ்க்கை சூனியமாகி போய் விட்டது. நான் தட்டு தடுமாறினேன். என்னால் ரஞ்சனியை மறக்க முடியவே முடியவில்லை.
ஆம். அவள்….. ஒரு…
அதிசய ராகம்..!
ஆனந்த ராகம்..!!
அழகிய ராகம்…!!!
அபூர்வ ராகம்…!! !!
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.