எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
மதுரை. திருநகர். அங்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர். மிகவும் துணிச்சல் உள்ளவர் ஆனால் அவருக்கு சாதிய வெறி இருந்தது. அவருக்கு ஒரு மகள் ஸ்ரீ மதி.
கல்லூரி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்தார். அவர் படிக்கும் போதே ஒருவரை காதலித்து வந்தார். அவர் பெயர் கபிலன். கபிலன் வேறு சாதி. அதனால் ஸ்ரீ மதி மிகவும் பயந்து போய் இருந்தார்.
சீக்கிரம் கல்யாணம் செய்து விட வேண்டும் என்று நினைத்தார். தனது நண்பர் புனிதா விடம் தன் பிரச்சினை பற்றி சொன்னார். அவர் உங்கள் திருமணத்திற்கு ஆதரவு தர மாட்டார்.
நீ என் தம்பி வீடு சென்னையில் இருக்கிறது. நீ கபிலனை பதிவு திருமணம் செய்து விட்டு சென்னை சென்று விடு. ஆம். சாதி மாறி கல்யாணம் செய்தால் கபிலனையும், உன்னையும் கொன்று விடுவார். ஆம். ஆணவ கொலை செய்ய உங்கள் அப்பா தயங்க மாட்டார்.
நாளை பதிவு திருமணம் செய்து விட்டு சென்னை சென்று விடுங்கள். மேலும்… கோர்ட்டில் உங்கள் அப்பா மீது ஒரு வழக்கு போட்டு விட்டு செல். வழக்கை நான் பார்த்து கொள்கிறேன். நீ இப்போதே புகார் மனு எழுது.
ஸ்ரீ மதி அவ்வாறே செய்தார். மறு நாள். பதிவு திருமணம் நடந்தது. புனிதா ஸ்ரீ மதி சார்பில் கோர்டில் ஸ்ரீ மதி அப்பா மீது வழக்கு போட்டார். அவர் ரெளடிகளை அனுப்பி வைத்தார்.
புனிதா வீடும் விடுப்பட வில்லை. கல்யாணம் முடிந்ததும் கபிலன் மற்றும் ஸ்ரீ மதி சென்னைக்கு ரகசியமாக போய் விட்டார்கள்.
ஆம்.
ஒரு ஆணவ கொலையை.. தடுத்து விட்டார். …
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.