எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
சேகர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது காதலியை கட்டாயப் படுத்தி வேறு ஒருவனுக்கு கல்யாணம் செய்ய ரெடி ஆனார்கள். முகூர்த்தத்திற்கு இன்னும் அரை மணி நேரம் இருந்தது. போலிசுடன் கல்யாண மண்டபம் வந்தார்கள். போலிசை பார்த்ததும் மாப்பிள்ளை ஒட்டம் பிடித்தார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. போலிஸ் அவனை விட வில்லை. பிடித்து அடித்து உண்மையை கக்க வைத்தார்கள்.
அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இருந்தது. முதல் மனைவி புகாரின் பேரில் தன்னை கைது செய்யவே வந்து உள்ளதாக நினைத்து ஒட்டம் பிடித்தார். மாப்பிள்ளை நண்பர்கள் காணாமல் போனர்கள்.
இன்ஸ்பெக்டர் பெண்ணின் தந்தை இடம் பேசினார். நீங்கள் உங்கள் மகளின் வாழ்க்கையே கெடுத்து இருப்பீர்கள். அவரது காதலன் சேகர் சொன்ன படி மேஜர் ஆகி விட்டால் அவருக்கு பிடித்தவரை கல்யாணம் செய்து கொள்ள உரிமை உண்டு. நாங்கள் வராது இருந்தால் எல்லாம் நாசமாக போய் இருக்கும்.
பெண்ணின் அப்பா என்ன செய்வது என்று கேட்டார். இதே முகூர்த்தத்தில் சேகரை கல்யாணம் செய்து வையுங்கள். சேகர் கல்யாணம் நடந்தது. மணமகள் சந்தோஷத்தில் போலீசுக்கு நன்றி தெரிவித்தார்.
ஆம்.
இன்று தனக்கு கல்யாணம் நடக்கும் என்று கனவில் கூட அவர் எதிர் பார்க்க வில்லை…!
ஆம்.
எல்லாம் சுபமே….!
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.