எழுதியவர்: மித்ரா சுதீர்
“விதுன். சீக்கிரம் வாடா நேரம் ஆகுது எல்லாரும் ரெடி ஆகிட்டாங்க வேன்கூட வந்தாச்சு “என்றார் அப்பா நாயகம்
“அம்மாடி அனிதா ரித்விகாவுக்கு தேவையான சாப்பாடு.. சுடு தண்ணி.. துணி ..டயபர் எல்லாம் முன்னாடி வச்சிரு அப்பத்தான் எடுத்துக்க தோதா இருக்கும்”அம்மா வேதவள்ளி .
“அம்மா நா பைங்க எல்லாத்தையும் வேன்ல ஏத்தறேன் நீ பொறுமையா மறுபடியும் நிதானமா எல்லாம் எடுத்து வச்சிட்டியா ஏதும் மறந்துட்டியான்னு யோசனை செய் அப்புறம் அது எடுக்கல யாருக்கும் பொறுப்பில்லைன்னு சொல்லாத “பெரியவன் விமலேஷ்
“அதெல்லாம் நா பாத்துக்கறேன் அம்மா அனிதா கிச்சன்ல ஸ்டவ் ஆப்ஆகியிருக்கான்னு பாத்துரு ராஜா …டேய் விதுன் ரித்விகா தூளில தூங்கறா அவள தூக்கிக்கோ நானும் அண்ணியும் ஒரு தடவ எல்லாத்தையும் செக் செஞ்சிட்டு வரோம்
ஏங்க நீங்களும் போங்க “வேதவள்ளி.
“இந்த அம்மா வேற நிலமை புரியாம …ஊருக்கு வா தேருக்கு வான்னு ச்சை “என்று நொந்துக்கொண்டே குழந்தையை தூக்கிக் கொள்ள போனான்.
தூளி அப்பொழுதுதான் அசைந்தது .ஆறு மாத குழந்தை ரித்விகா அப்பொழுதுதான் குரல் எழுப்ப ஆயுத்தமானாள் சித்தப்பா முகம் தெரிய பொக்கை வாய் கொண்டு சிரித்தாள் அதில் கரைந்ததுப் போனான் அவன்.
“என் குட்டி மகாராணி எழுந்தாச்சா ..உங்க பாட்டி இருக்காங்களே ம்ஹீம் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல உங்க வருங்கால சித்திக்கு நா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்னு யோசிக்கிறேன் ஆனா உங்க பாட்டி ஊருக்கு வரச்சொல்றாங்க சரி வா “என்றான் அந்த குட்டிக்கும் கேட்காமல் தனக்கு மட்டுமே கேட்கும் குரலில்
“என்னடா அவகூட என்ன பேச்சு வார்த்தை நடத்தி கிட்டு இருக்க அம்மா பார்த்தாங்க நீ அவ்ளேதான் “என்றபடி குழந்தையை வாங்கிக்கொண்டான் விமலேஷ்.
“அட ஏன்னா நீ வேற எல்லாம் தெரிஞ்சும் இப்படி பேசுற ?”
“சரிடா அதுக்கு இன்னும் டைம் இருக்கு நாளைக்குத்தானே அதுக்குள்ள உனக்கு நானே நல்ல கிஃப்ட் சட்ஜெஸ்ட் செய்யறேன் இப்ப வா “
“டேய் உள்ள என்னடா செய்றீங்க நேரம் ஆகுது வாங்கப்பா “நாயகம்
“இதோப்பா “என்றபடி இருவரும் வர அனைவரும் ஏறிட வேன் புறப்பட்டது.
விமலேஷ் அனிதா காதல் திருமணம் புரிந்தவர்கள் .அனிதாவிற்கு உறவென்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை.
முதலில் அம்மாவும் அப்பாவும் எதிர்த்தாலும் மகனின் பிடிவாதத்தாலும் அவன் மனதை புண்பட்டுவிடக்கூடாது என்றும் யோசித்து அனிதாவை பற்றி தெரிந்து அவளோடு பேசி பழகி புரிந்துகொண்ட பிறகே காதல்.. கல்யாணத்தில் முடிந்தது.
இதனால் கல்யாணம் முடிந்த கையோடு புகுந்தவீடே பிறந்த வீடாகிப் போனது அனிதாவிற்கு .அத்தையும் மருமகளும் அத்தனை ராசியும் கூட.. தொட்டதிற்கெல்லாம் அனிதா ..அனிதா.. தான்.அவளும் அம்மா என்றே அத்தையை அழைக்கலானாள் அலுத்தே போனாலும் இன்முகத்தோடே வலம் வருவாள் கேட்காமலே தேவைகளை பூர்த்தி செய்ய கத்துக்கொண்டாள்.
இவர்களின் காதல் பரிசு ரித்விகா .வீட்டின் செல்ல பிள்ளையாகிப்போனாள்.
விமலேஷும் விதுனும் மிகவும் பாசம் நட்பு கொண்ட சகோதரர்கள் .பெற்றவர்களுக்கு ஏற்ற பிள்ளைகளும் கூட .இதோ இப்பொழுதா விதுன் அதுல்யாவை காதலிகிறான் .
ஆனால் வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை அண்ணனை தவிர.அவளுக்கு நல்லதொரு காதல் பரிசு தர ஆசைப்பட்டான் முடிவெடுக்க தெரியாமல் குழம்பிப்போய் இருக்கும் சமயத்தில்தான் அம்மா குலதெய்வ கோயிலுக்கு போய் பொங்கல் வைத்து வழிபட வேண்டும் என்றாள் தடுக்க மனம் இல்லை சரியென்று கிளம்பிவிட்டான்.
வழி நெடுக கேலி பேச்சும் ..கூத்தும்.. பாட்டு மாய் கடந்தது.
எண்ணி சில மணி நேர பயணத்திற்குப் பிறகு குலதெய்வம் கோயில் வர பொங்கல் வைத்துவழிப்பாடு எல்லாம் சிறப்பாக முடிந்தது.
அங்கேயே சாப்பிட்டு விட்டு சிறிது இளைப்பாறி மீண்டும் பயணம் தொடங்கியது.அம்மாவும் அப்பாவும் தூங்கி விட்டிருந்தனர் அண்ணனும் கூட அலுப்பில் கண்ணயர்ந்தான் அனிதாவிற்கும் தூக்கம் தான் ஆனால் ரித்வி குட்டி தூங்காது அவளை படுத்திக் கொண்டிருக்க
“அண்ணி பாப்பாவ இப்படி குடுங்க நீங்களும் தூங்குங்க நா பாத்துக்கிறேன் “என்றபடி வாங்கிக்கொண்டான் பின் சீட்டில் அமர்ந்த விதுன் .
அப்பா டிரைவர் பக்கத்தில் அமர்ந்திருந்தார்.பின் சீட்டில் அம்மா அண்ணி அண்ணன் அமர்திருக்க அதற்கும் பின் சீட்டில் விதுன் அமர்திருந்தான்.
கணநேரத்தில் என்ன நடந்தது என்று தெரிவதறக்கு முன்பே பெரிய சத்தத்தோடு விதுன் எங்கோ விழுந்து கிடந்தான் விழி திறந்து பார்க்வே கண நேரம் ஆனது.
ஆங்காங்கே வலி தெறித்து
எழுந்து பார்த்தபொழுது வண்டி பொறுக்கித் போயிருந்தது.உள்ளே இருந்தவர்கள் உரு தெரியாமல் சிதைந்திருந்தனர்.
“அம்மாஆஆஆஆஆஆஆ. ……”என்று கத்தியவன் கண்களில் கண்ணீர் ஆறென ஓடியது எதேதோ நினைவுகள் மோத சட்டென ரித்வி மனக்கண் முன் வந்து போக
“பாப்……ப்பாப்ப்பா பாப்பா பாப்பாஆஆஆஆ”என்று கத்த சட்டென வீறிட்டு குழந்தை அழும் சத்தம் கேட்க கேட்ட திசையில் விறு விறு வென ஓடினான்.
நல்ல வேளை எங்கோ ஒரு வைக்கோல் மண்டி இருக்க அதன் மேல் குழந்தையின் கையும் கவுனும் தென்பட மேலும் விறு விறு வென ஓடினான்.
சுற்றி முற்றி பார்க்க தென் பட்ட கற்களை கொண்டு மேலே ஏறி குழந்தையை எடுத்துக்கொண்டான் தன்னோடு அணைத்துக் கொண்டான்.கண்ணீர் சுடும் நீராய் அவர்களை நனைத்தது.
இது நடந்து ஒரு மாதம் உருண்டோடியிருக்கும் ஒரு காலை நேரம் விதுனின் கைபேசி சிணுங்கியது .புது நம்பராய் இருக்க யோசனையுடன் எடுத்தான்.
“ஹலோ நா அதுல்யா பேசறேன் எனக்கு நாளைக்கு கல்யாணம் எந்த மண்டபம்.. நேரம்.. எல்லாம் வாட்ஸ்அப் செய்றேன் மறுபடியும் ஏமாத்தாம வந்து சேரு “அவன் பேசும் முன் எதிர் முனையில் நிசப்தம்.
மீண்டும் கன்னங்களில் சுடு பரவியது “ப்ப்அஆ”என்ற ரித்வியின் குரல் களைக்க கைபேசி இடம்மாறியது.
இரவெல்லாம் குழப்பம் எப்படி என் எண்ணை தெரிந்துக்கொண்டாள்? ஏன் அழைக்கிறாள் போகத்தான் வேண்டுமா? அவளை மணக்கோலத்தில் பார்க்கும் சக்தி உண்டா..?!! ஓஓ கடவுளே இது என்ன சோதனை ?என்று பலவாறு யோசித்தாலும் கடைசியாய் அவள் சொன்ன வார்த்தை “மறுபடியும் ஏமாத்தாம வா”என்றாளே அப்பொழுது கண்டிப்பாக போகத்தான் வேண்டும் .
யோசனைகளுக்கு நடுவில் பிள்ளையை தூங்கைத்து தானும் தூங்கிப்போனான்.
விடிந்ததும் அதுல்யாவின் குறுஞ்செய்திதான் அவனை எழுப்பியது .மணி பார்க்க நான்கென்றது.
பரபரவென குளித்து உடை மாற்றி தூங்கும் குழந்தையை பூச்செண்டாய் கையில் ஏந்திக்கொண்டு புறப்பட்டான்.
வாசல் அலங்காரத்தில் தொடங்கி உள்ளே வரை அமர்களமாய் இருந்தது .
உள்ளே சென்றான் கிடைத்த இடத்தில் அமர்ந்தான் சற்று நேரத்திற்கெல்லாம் மணப்பெண் அதுல்யா அத்தனை அழகாய் வந்தாள் .கண்ணீர்தான் வந்தது அவனுக்கு .
மாப்பிள்ளை தாலி எடுக்கும் நேரம் விதுனால் அமர முடியவில்லை எழுந்து விட்டான்.திரும்பி நடக்க முற்பட்டவன் கைகள் தடுத்து நிறுத்தப்பட திரும்பிப்பார்கையில் அதுல்யா நின்றிருந்தாள்
“ஏய் என்னயிது கைய விடு அது நீ …”
“ஷ்ஸ்ஷூ வா என்னோடு”என்று இழுத்துச் சென்றாள் மணவறைக்கு
மாப்பிள்ளை தானாய் வந்து இவன் கழுத்தில் மாலை போட்டவன்”இப்படி ஒரு பிராங்கை நா எங்கும் பார்த்ததில்லை எனி னவே கங்கிராட்ஸ் “என்றான் காதோடு தெளிவாக .
“குழந்தைய குடு உட்கார்ரா ம்ம் தாலி கட்டு “என்றாள் அழுத்தமாய் அவள் .
கெட்டி மேளம் முழங்க விதுன் அதுல்யா கழுத்தில் தாலி கட்டினாள் .
மேளசத்தத்தில் எழுந்து மிரண்டு அழுத குழந்தையை அருகில் இருந்த தன் தோழியிடம் தந்தவள் பக்கதில் நின்ற தாயிடம் ஏதோ கிசுகிசுத்தாள் பின் விதுனிடம் திரும்பி
“வா எந்திரி சொல்றேன்”என்று அழைத்து ம்ம் கொஞ்சம் இழுத்துக்கொண்டும் போனாள்.
“என்ன அதுல்யா இதெல்லாம் ?”விதுன்
“அறஞ்சிடுவேன் எதாவது பேசினா தெரியுமா ?நா உன்ன பாக்க ஓடி வந்தா நீ என்ன விட்டிட்டு ஓடி போற அதுவும் ஊர் மாத்தி ஃபோன் நம்பர் மாத்தி …”சிறு மௌனம்
“உன்ன கண்டு பிடிக்க மூனே நாள்தான் ஆச்சு எனக்கு ஆனாலும் உன் முன்னாடி வந்து நிக்கல ஏன் தெரியுமா ?அப்பவும் நீ எதாவது சாக்கு சொல்லிட்டு ஓடிதான் போயிருப்ப ஏன்னா நீதான் தியாகி ஆச்சே
அதுக்காக நா துரோகி ஆக முடியுமா? அதான் உன்ன உன் வழியிலயே விட்டு பிடிச்சேன்
எனக்கு கொஞ்சம் டைம் தேவ பட்டுச்சு எங்க வீட்டுல கொஞ்சம் பேசி சமாதான படுத்தி சரிசெய்ய “மீண்டும் சிறு மௌனம்
“என்ன அத்தன மோசமானவளா நினசிட்டியா எப்படிடா உன்ன விடுவேன்னு நினச்சே “என்று பேசிக்கொண்டு போனவள் சற்று உணர்ச்சி வசப்பட்டு அவன் சட்டையை பிடித்து அழுதே விட
“ஸாரிடி “என்று கட்டிக்கொண்டான்.
“அதுல்யா நாழியாறது மத்த சடங்கு எல்லாம் செய்ய வேண்டாமா ?வாம்மா சீக்கிரம் மாப்பிள்ளைய அழசிண்டு “என்று அதுல்மாவின் தாய் அழைக்க
“வந்துட்டேன் மா “என்றவள் தன் விழிகளை துடைத்துக்கொண்டு
“வாடா போலாம் உன்னால் என் மேக்கப் எல்லாம் போச்சு “என்றாள் கண்ணீரை துடைத்தபடி
விதுன் அவளின் கரம் பற்றி நடந்தான் சிரித்தபடி.
முதலிரவு அறையில் காத்திருந்தான் விதுன்.
கொஞ்சம் தாமதமாகவே வந்தாள் அதுல்யா
“ஏன்டி இத்தன லேட்டு?”
“பாப்பாவ தூங்க வெச்சிட்டு வர வேண்டாமா ?”என்றவளை இமைக்காமல் பார்த்தான்
“தேங்ஸ் “என்றான்
“உதப்பேன் “என்றவளை இழுத்து பக்கத்தில் அமர்த்திக்கொண்டான்.
“அது இருக்கட்டும்… இனி நடக்கப் போறது தானே ..உங்கம்மா அப்பாவ எப்படி சமாதானம் செஞ்ச அத சொல்லு ?”
“நா என்ன செஞ்சேன் உங்க அண்ணா தான் அதுக்கு காரணம்”
விதுன் புரியாது விழிக்க அதுல்யா தன் கைபேசியில் ஓர் வீடியோவை ஓட விட்டாள்
“ஏன்டா விதுன் அம்மா அப்பா உன் காதல ஒத்துக்கலைன்னா என்ன பன்னுவ?”
“விட்டிருவேன் “
“எத டா அதுல்யாவையா இல்ல லூசுதனமா உயிரையா ?”
“இரண்டும் இல்ல கல்யாணங்கிற பந்தத்த மனைவிங்கிற உறவ “
“இதுக்கு அவள கூட்டு போய் கல்யாணம் செய்துக்கலாம் இல்ல “
“அது கூட்டிட்டு போறது இல்ல பிரிச்சிட்டு போறது இல்ல கடதிட்டு போறது அவள அவங்க குடும்பதுக்கிட்ட இருந்து பெத்தவங்கள கஷ்டப்படுத்தகூடாதுங்கிறதுதானே எங்க காதல் அக்ரிமெண்டே “
“நல்ல அக்ரிமெண்ட் ஆனா அது அவ மீறிட்டா அம்மா மிரட்டினாங்க அப்பாவோட மரியாதைய காப்பாத்தன்னு சொன்னா ?”
சிறிது நேரம் மௌனம்…பிறகு
“ஏன்ணே ரித்வி குட்டி நீ சொன்ன படிப்ப படிக்கலைனா அதுக்காக அவள ஒதுக்கிடுவியா என்ன ?”
“என்னடா இது கிறுக்குத்தனமா ?அவளுக்கு எது விருப்பமோ அது அவ படிக்கட்டும் அதுக்காக அவள எப்படிடா?? அவ என் உயிராச்சே…”
“அதுல்யாவும் எனக்கு அப்படிதானே” தன்னையுமறியாமல் அழுதவன் கண்ணீரை துடைத்து விட்டாள்
“அழாதடா “என்றவள் பேச்சை மாற்ற
“ஆனாலும் நீ சரியான எஸ்கேப் பார்டிடா “
“ஏன் அப்படி சொல்ற ?”
“பின்ன கடைசி வரை எனக்கு பரிசே தரல பாரு “என்றாள் கொஞ்சம் ஏமாற்றம் கலந்த குரலில்
விதுன் முகம் வாட “போதும் போதும் உன் நடிப்பெல்லாம் “
அதற்கு அவன் ஏதோ சொல்ல வாய்யெடுக்க
“உனக்கு பதிலாக உன் சார்பில் அதையும் உங்க அண்ணனே குடுத்திட்டு போய்டார்”
அவன் விழிக்க
“ரித்விக்கா “என்றாள்
இன்பமாய் அவன் அதிர்ந்தாளும் “அப்ப நா “என்றான் சற்று தோய்ந்த குரல் போன்ற நடிப்பில்
“என் உயிரே நீதானே டா “என்றவளை இழுந்து அணைக்க இருட்டு அறையை அணைத்துக்கொள்ள காதல் ஒளிர்ந்தது
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.