எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
நான் எப்போதும் ரோடு ஓரமாக இருக்கும் டீ கடையில் காலை மற்றும் மாலையில் குடிப்பேன். டீ கடை நண்பர்கள் பலர். அதில் ஒருவரை பற்றி மட்டுமே இப்போது சொல்ல வந்து உள்ளேன்.
அவர் பெயர் இஸ்மாயில்.
சுமார் 40 அல்லது 45 வயது இருக்கும். அவர் சிகரெட் பற்ற வைக்க என்னிடம் தான் லைட்டர் வாங்குவார். யாரிடமும் பேச மாட்டார்.
ஒரு நாள்… “சார்… உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று கேட்டேன்…? “திடீரென அழ ஆரம்பித்து விட்டார். நான் 2 டீ ஆர்டர் செய்தேன்.
” சார்… எனக்கு கல்யாணம் ஆகி 20 வருடங்கள் ஆகிவிட்டது. எனக்கு 2 குழந்தைகள். நாங்கள் தென் ஆப்பிரிக்காவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம்.
ஒரு நாள்… என் மனைவி மற்றும் குழந்தைகள் காரில் வெளியே சென்றார்கள்.
ஒரு குடிகாரன்… காரில் பலமாக மோதி விட்டான்.
சம்பவ இடத்திலேயே மூவரும் இறந்து விட்டார்கள். அவர்களை என்னால் மறக்க முடிய வில்லை….! “
” ஏன் சார்..? நீங்கள் ஏன் மீண்டும் திருமணம் செய்து கொள்ள கூடாது…? “
” இல்லை சார்… என் மனைவி என் மீது அபார காதல் கொண்டு இருந்தார். என்னால் அவரை தவிர வேறு யாரையும் நேசிக்கும் நிலையில் இல்லை. கண்ணீர் துடைத்து கொண்டு தனது ஆபிசிற்குசென்று விட்டார்
என் மனதை உளுக்கியவர்.
ஆம்.
உண்மை காதல் சாகாது..!
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.