காதல் பேசும் பிப்ரவரி: கானல் நீர்

by admin 2
43 views

எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்

கலைந்து போன மேகங்கள்..! 

மதுரை. ஆர்வி பட்டி… திருப்பரங்குன்றம் அருகே தான் ஒரு ரூமில் தங்கி படித்து வந்தேன்.  விடலை பருவம். 

காலை திருநகர் சென்று திரும்பும் போது திருமங்கலத்தில் இருந்து வரும் பஸ்ஸில் ஓரமாக அழகான இளம் பெண் இருப்பார். ஒரு நொடி பார்வை தான். ஆனால் அவள் அழகில்… தேவதை போன்றவள்… அவளும் பார்ப்பாள்.  தினமும் இது வாடிக்கை. 

எனக்கு அவளை ரொம்ப பிடித்து இருந்தது. திங்கட்கிழமை காலை திருமங்கலம் சென்று அவள் வரும் பஸ்ஸில் ஏறுவேன். இது எப்போதும் நடக்கும். 

ஒரு நாள்… அவள்… டிரைவர் சீட்டுக்கு அருகே உட்கார்ந்தார்.  நான் அவளை ரசித்து வரும் போது… அவள் மெல்ல மெல்ல தனது இடது கையை காட்டினார். 

அதில் நன்கு எழுதி இருந்தது. 

     பத்மா

அவள் பெயரை எனக்கு சூசகமாக சொன்னார். 

எனக்கு அவளுடன் பேச விருப்பம். முயன்றேன். முடிய வில்லை. என் மனம் ” பத்மா… பத்மா…!! ” என்றே ஆட்டம் போட்டது. 

என் கல்லூரி வாழ்க்கை முடிந்தது. என் சொந்த ஊர் ஊட்டிக்கு செல்ல வேண்டும்.  அவள் எனக்காக… என் பெயர் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டார். எனக்கு வேலை இல்லை. எப்படி கல்யாணம் செய்ய முடியும்…? 

இன்றும் என் நினைப்பில் இருப்பது… 

                 பத்மா… 

                 பத்மா மட்டுமே…!

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!