காதல் பேசும் பிப்ரவரி: காதல் போயினும் காதலிக்கிறேன்

by admin 2
45 views

எழுதியவர்: சினேகிதா ஜேஜெயபிரபா

லவ் பண்றேன்னு சொல்றீங்கள்ல..?

… ம்ம் ஹ்…..

ஆமா… லவ்வுன்னா என்ன?

இப்படியாக வார்த்தைகளை கோர்வையில்லாமல் சற்றே தட்டு தடுமாறி திக்கித் திணறியே ஜெரின் ன் அத்தை மகள் ஜெரிபா என்கிற ஜெயபிரதீபா ஜெரினிடம் கேட்டாள்

ஜெரினால் இதற்கு உடனடியாக பதிலளிக்க இயலவில்லை  சிறிது இடைவெளி கொடுத்து மீண்டும் ஜெரிபாவே தொடர்ந்தாள்

லவ்வுன்னா…

 காதல் 

அதாவது ஒரு ஆணும் பெண்ணும் அதிகமா அன்பு வைக்கிறது அப்படின்னு சொல்லுவீங்க அப்படித்தானே!?

என்ன இது எல்லாமும் முதலிலேயே யோசித்து  பேசிப் பார்த்து தான் வந்திருக்கிறாள் போல் என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டான் ஜெரின் எனினும் இவளா பேசியது இதை என்ற ஆச்சரியமே அவனை வேறு எதுவும் யோசிக்க விடவில்லை

ஏனென்றால்  ஜெரிபாவின் சிறு வயதில் அத்தையின் குடும்பம் சென்னையில் இருந்தார்கள்  இங்கு வந்து சுமார் ஏழு எட்டு வருடங்கள் இருக்கும் பாதிமுக்கால் நேரம் அவர்கள் வீட்டில் தான் இருப்பார்கள் என்றாலும்  யாரேனும் ஏதாவது கேட்டால் மட்டுமே பதிலளிப்பாள் 

அதுவும் பல வேளைகளில் தலையை மட்டும் ஆட்டிவிட்டு சென்றிடுவாள் அவள் பேசியது இவன் பார்த்ததே இல்லை

ஜெரிபா அப்படித்தானே என்றதும் ஏதோ தலையாட்டி பொம்மை போல் ஜெரின் அவசரமாக தலையாட்டினான். ஆமோதிப்பதாய் ஆனால் பின்னர் தான் புரிந்தது அவள் அதை பதிலாக கொள்ளவில்லை என்பது  ஜெரிபா தொடர்ந்தாள் 

அவ்வளவுதானா.. அது மட்டும் தான் லவ்வுன்னா நானும் உங்கள லவ் பண்றேன் ஒரு குழப்பமும் இல்லை 

ஆனா… என இழுத்தவாறு சிறு தயக்கத்தோடு தொடர்ந்தாள்  அதுல செக்ஸ்ம் இருக்கும் ல 

ஏதோ வார்த்தைகளை வரிசையாக்கி பேசி விட்டாள் 

பேசப் பேச கண்கள் நீர் கோர்த்தது நாவில் நீர் வற்றியது வார்த்தைகள் வர தயங்கியது 

எனினும் பலமுறை யோசித்து யோசித்து மனதில் பேசி பார்த்து இன்று எப்படியாவது பேசி இந்த காதல் பிரச்சனைக்கு ஒரு முடிவு கொண்டு வர வேண்டும் என்று தெளிவோடு தான் பேச தொடங்கியதால் வலுக்கட்டாயமாக வார்த்தைகளை சேர்த்து தொடர்ந்து பேசினாள்

ஆனா செக்ஸ் எனக்கு பிடிக்கல அது தப்பு நினைக்கிறேன் அதனால மேரேஜும் புடிக்கல ஜென்சும் புடிக்கல  சற்று நிறுத்தி மூச்சு வாங்கிக் கொண்டாள் 

என்னையும் பிடிக்கலையா என கேட்க நினைத்த ஜெரின் கேட்கவில்லை ஜெரிபாவே தொடர்ந்தாள் 

நான் கன்னியாஸ்திரியா போகலாம்னு இருக்கேன்  அண்ணன் கிட்ட கூட இது பத்தி பேசிட்டேன் அம்மா கிட்ட பர்மிஷன் வாங்குவதற்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் 

ஜெரிபா பேசப்பேச ஜெரின் மனதுக்குள் தன் அண்ணன் பாதரா போறது இவள கன்னியாஸ்திரி ஆக்குறதுக்கா என்று எண்ணிக் கொண்டான்

அவனது எண்ணத்தை கலைத்து ஜெரிபா பேச்சை தொடர்ந்தாள்

அப்படி ஒரு வேளை உங்களுக்காக உங்கள லவ் பண்றேன்னு வச்சுக்கங்க ஊருக்காக கல்யாணம் பண்ணிக்கலாம் ஆனால் நான் வேற எதுக்கும் உங்களுக்கு யூஸ் ஆக மாட்டேன் என்று முடித்தாள் ஒரு வழியாக 

இப்போது மனதுக்குள் எண்ணிக்கொண்டான் கள்ளி எதுவும் தெரியாதது போல் இருந்து விட்டு உன்னை தொட விட மாட்டேன் என்பதை நாசுக்காக கூறுகிறாள்

இருப்பினும் காதல் என்பது காமத்துக்காக மட்டுமில்லையே தவறாக புரிந்து வைத்திருக்கிறாள் புரிய வைக்க வேண்டும் என்று பேச தொடங்கினான் அவன் பேசும் முன் மீண்டும் ஜெரிபாவே தொடர்ந்தாள்

சோ உங்க லைப்ப என்ன நெனச்சு ஸ்பாயில் பண்ணிக்காதீங்க ப்ளீஸ் என்னை மறந்துடுங்க என்னை விட அழகான அறிவான அன்பான பொண்ணு உங்களுக்கு கிடைப்பா என சொல்லி முடித்து கண்களை மூடிக்கொண்டாள் அழுது விடுவோம் என்ற பயத்திலே

அடி பெண்ணே குழந்தையாகவே இருக்கிறாயே என்றெண்ணியே அனைத்து கொள்ள எண்ணியவன் அச்சச்சோ அதையும் தப்பா புரிஞ்சுப்பா என்று தன்னை அடக்கி கொண்டான்

அவளை நிமிர்ந்து பார்த்து ம் ம்.. அவ்வளவுதானா நீ இவ்வளவு பேசுவேன்னு எனக்கு தெரியவே தெரியாது 

ரொம்ப நல்லா பேசுற என பாராட்டியவனை விழி திறந்து பார்த்து விழித்தாள்

என்னடா இவன் சீரியஸாவே எடுத்துக்கலையோ என்றே கவலையாய் எண்ணிக் கொண்டவளின் எண்ணத்தை தொடரவிடாமல் ஜெரின் தொடர்ந்தான் 

நீ சொன்னது ரொம்ப கரெக்ட் லவ்ல செக்ஸ் இருக்கும் பட் செக்ஸ் மட்டுமே லைஃப் ம் இல்லை  அப்படி இருந்தா அது லவ்வும் கிடையாது

நான் உன்னை காதலிப்பதும் கல்யாணம் பண்ணி வாழ நினைக்கிறதும் எந்த அளவு உண்மையோ அந்த அளவு துல்லியமான உண்மை உன் உடல் அழகை பார்த்து உன்னை நேசிக்கவில்லை உனக்கு பிடிக்கலைன்னா சாகுற வரைக்கும் உன்னை தொடாமலே உனக்கு பிடிச்ச மாதிரி உன் கூட என்னால குடும்பம் நடத்த முடியும்

அதுக்கு மேலயும் என்னை பிடிக்கல லவ் பண்ண பிடிக்கல மேரேஜ் புடிக்கல செக்ஸ் புடிக்கல அப்படி இப்படி என காரணம் சொல்லிக்கிட்டு என்னை லவ் பண்ணலனாலும்  நான் லவ் பண்ணுவேன்  சாகுற வரை உனக்காக காத்திருப்பேன்  நீ காதலிச்சாலும் காதலிக்காவிட்டாலும் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் சொல்லி முடித்தான் 

எதனாலும் தன்னை அசைக்க முடியாது என்று எண்ணி இறுமாந்திருந்த ஜெரிபாவின் மனதை மிக எளிதாக அசைத்து அவள் அனுமதியின்றிஅதனுள் ஆசனம் போட்டு அமர்ந்து விட்டான் ஜெரின்

ஆண் என்றாலே அழகை அடைய நினைப்பவன் என்றே தவறாய் எண்ணிக் கொண்டிருந்த ஜெரிபாவுக்கு தன் மனதை மட்டுமே நேசிக்கும் ஜெரின் நினைக்கவே பெருமிதமாகத் தான் இருந்தது 

ஆனால் ஏனோ அவளது உள் மனம் இந்த உணர்வுகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் விடாப்பிடியாய் மீண்டும் பேசினாள் இல்ல இல்ல நம்ம குடும்பம் ரொம்ப ஒற்றுமையாய் இருக்கு ஆனா இது தெரிஞ்சா பெரியவங்களுக்குள்ள பிரச்சனை வரும்  நம்ம குடும்பம் பிரிஞ்சுடும் என சிறுபிள்ளையாய் பேசினாள் 

நாம பிரண்ட்ஸாவே இருந்துருவோமா ப்ளீஸ் கெஞ்சினாள் பாவமாகத்தான் இருந்தது அவளிடம் பேசி புரிய வைக்க ஜெரின் யோசித்த வேளை வெளியே போயிருந்த பெற்றோரும் அத்தையும் வந்தனர் 

அதன் பின் பெரியவர்களுக்குள் ஏதேதோ பேசினார்கள் ஜெரியும் அத்தையும் அவர்கள் வீட்டுக்கு சென்றதால் இதன் பிறகு இதைப்பற்றி பேசிக் கொள்ள வாய்ப்பேதும் கிடைக்கவில்லை 

ஜெரினும் வெளியூர் வேலைக்கு சென்று விட்டதால் ஜெரிபாவுக்கு இரண்டொரு முறை கடிதம் எழுதினான் நலம் விசாரிப்பான் நான் கேட்டதற்கு பதில் கிடைக்கவில்லை காத்திருக்கிறேன் என்று கேள்வியோடு முடிப்பான் 

சில முறை ஜெரிபா அறிவுரை கூறி பதில் எழுதுவாள் இப்படியாக ஒரு சில மாதங்கள் கடந்தன 

தொடர்ந்து ஜெரின் சிங்கப்பூர் சென்று விட்டதால்  இனி தன்னை மறந்து விடுவான் இது பற்றி யோசிக்க வேண்டாம் என்று ஜெரிபா தனது வேலையில் கவனம் செலுத்தினாள்

சிங்கப்பூர் சென்றவன் வீட்டுக்கு கடிதம் போடவில்லை தொடர்ந்து கடிதம் எழுதினான் ஜெரிபாவுக்கு

 ஜெரிபாவுக்குள் பயம் தொற்றிக் கொண்டது குடும்பம் பிரிந்து விடுமென்று  பதில் எழுதினால் தானே தொடர்ந்து தன்னை நினைத்துக் கொண்டிருப்பான் என்று பதில் போடவில்லை ஏழெட்டு மாதங்களாக

திடீரென ஒரு நாள் மாமன் மனைவி அதாவது ஜெரினின் அம்மா தேடி வந்தாள் ஜெரிபாவை 

என் பையன் உனக்கு லெட்டர் போடுறானாமே எங்க பாக்கலாம் என்று கேட்கவே ஜெரிபாவும் கள்ளம் இல்லாதவளாய் அத்தனை கடிதத்தையும் அத்தையின் கையில் எடுத்து கொடுத்தாள்

அதன் பின்னரே அவளின் சுயரூபத்தை பார்த்தாள் ஜெரிபா மிகவும் மோசமான வார்த்தைகளால் மருமகளை திட்டி தீர்த்தாள் 

என் பையன் ஃபாரினுக்கு போயிருக்கிறான்னு அவனை மயக்க பாக்குறியாடி உன்னோட ரேஞ்சுக்கு உங்க ஊரிலேயே எவனும் கிடைக்கலையா ஏன் என் பையன் பின்னாடி அலையுற இந்த மாதிரி  இன்னும் அசிங்கமான வார்த்தைகளை பேசினாள் மனசொடிந்த ஜெரிபா சாக நினைத்து பக்கத்தில் இருந்த கிணற்றில் குதிக்க முயல்கையில் அவளது கரத்தை பிடித்து இழுத்து அவளது தாய் வீட்டிற்கு அழைத்து வந்து ஆறுதலும் தேறுதலும் கூறி அமர்த்தினாள்

அதன் பின்னர் அவளுக்குள் ஆத்திரத்தில் தோன்றிய வேகம் உடனே ஒரு வெளிநாட்டு கடிதம் வாங்கி வந்து உனக்கும் எனக்கும் என்ன பொருத்தம் நீ எதனால என்னை காதலிக்கிற என்னை விட நீ அழகா இருக்கியா உனக்கு படிப்பு இருக்கா எந்த வகையில் நீ எனக்கு பொருத்தம் இனிமேல் எனக்கு லெட்டர் போடாத என்று கோபத்தை ஏற்படுத்த வேண்டி  அவள் மனதில் தோண்றாத வார்த்தைகளையெல்லாம் சேர்த்து கடிதம் எழுதி அனுப்பிவிட்டாள்

ஒவ்வொரு நாளும் அதை நினைத்து நினைத்து கண்ணீர் வடித்தாள் என்னை நேசித்ததற்காக நான் இத்தனை காயப்படுத்தி விட்டேனே என்று இதை அறிந்த ஜெரிபாவின் தோழி மகிளா நீ செய்தது ரொம்ப தப்பு ஒரு சாரி மட்டும் சொல்லியாவது ஒரு லெட்டர் போடு நீ லவ் பண்றது பண்ணாதது உன்னோட இஷ்டம்  அதுக்காக இப்படி தான் காயப்படுத்துவியா  என்று புத்தியில் உறைக்குமாறு திட்டினாள்

ஜெரிபா மனதுக்குள்ளும் பெரும் வருத்தம் இருந்ததால் ஒரு கடிதம் வாங்கி பெயர் ஏதும் எழுதாமல் சாரி மட்டும் எழுதி அனுப்பி வைத்தாள்

ஜெரினுக்குள் ஆயிரம் கோடி மின்னல்கள் ஒரே நேரத்தில் மின்னியதைப் போன்ற பிரகாசம் 

பூமழை பொழிந்ததாய் பெருமகிழ்வு ஜெரிபாவின் கடிதம் பார்த்து அவள் எழுதிய சாரி என்ற வார்த்தையில் அவள் அவன் மேல் கொண்டிருந்த நேசத்தை முழுதாய் உணர்ந்தான் 

அதன் பின்னும் ஜெரிபாவால் தன்னை ஏமாற்றிக்கொண்டு ஜெரினையும் ஏமாற்ற இயலவில்லை 

ஜெரின் போடும் கடிதங்களுக்கு அவளும் பதில் எழுதினாள்  மூன்று வருட காலம் கடிதத்தில் காதலித்தனர் காதலினும் மிகுநேசமாய் இந்தியா வந்ததும் ஜெரிபாவை சந்திக்க சென்றான் 

அவனது வீட்டில் பெரும் பூகம்பமே வெடித்து சிதறியது  அவளிடம் எடுத்துக் கூறினான்  இன்னொரு மூன்று வருடம் காத்திரு பெற்றவர்களுக்கான கடமைகளை முடித்துவிட்டு மற்றவர் சம்மதம் இல்லாதே போனாலும் மணம் முடித்துக் கொள்வோம் அதுவரை நான் உன்னிடம் பேசாமல் இருந்தாலும்  என்னை மறந்து விடாதே என்று உறுதிபட கூறி சென்றான் சொன்னது போலவே அதன் பின் அவளை தொடர்பு கொள்ளவே இல்லை 

அவளும் அவனது வார்த்தைகளை தெய்வ வாக்காக எண்ணி காத்திருந்தாள்  இரண்டு வருடங்களுக்குப் பின் தகவல் வந்தது ஜெரினுக்கு திருமணம் பேசி முடித்தாயிற்று இரண்டு மாதத்தில் திருமணமென

ஜெரிபாவால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை உயிர் பிரிந்ததாய் உணர்ந்ததால் உணர்வற்றே இருந்தவளுக்காய் ஜெரிபாவின் தாயை அழைத்துக் கொண்டு உறவினர் சிலர் அவளது மாமன் வீட்டிற்கு மாப்பிள்ளை கேட்டு சென்றனர் தோல்வியில் திரும்பியவர்கள் காவல் நிலையமும் அழைத்துச் சென்றார்கள்

ஏதேதோ செய்து யார் யாரோ மூலமாக ஜெரினை தொடர்பு கொண்ட ஜெரிபாவுக்கு கிடைத்த இறுதி பதில் இப்ப வரைக்கும் என் மனசுல நீ தான் இருக்க ஆனா என்னால உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது எங்க அம்மா அப்பா பாத்திருக்கும் பெண்ணை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்

காவல் நிலையத்திலும் கல்லு மாதிரி நின்று கொண்டான் வெளி உலகமோ தனி சுதந்திரமோ எந்தவித தைரியமோ இல்லாத ஜெரிபா எவ்வளவோ போராடினபின்பே உணர்ந்தாள் செத்துப் போனது காதலென ஜெரினுக்கு திருமணம் முடிந்து 5 வருடங்களுக்குப் பின் இதோ இப்போது இன்று ஜெயப்பிரதீபாவுக்கும் ஜெயபிரகாசுக்கும் திருமணம் நடந்தேறியது 

முதல் நாள் இரவில் முழு கதையும் தன் கணவனிடம் சொல்லி முடித்தாள்  அவள் சொல்ல சொல்ல அதுவரை மௌனம் காத்த பிரகாஷ்  சிறு புன்னகையுடன் முதல் நாளே எல்லாத்தையும் என்கிட்ட சொல்றியே நான் உன்ன தப்பா புரிஞ்சு ஒதுக்கி வச்சிட்டா இப்படி எல்லாம் யோசிக்க மாட்டியா  பிரதீபா மிகத் தெளிவா சொன்னாள் பிரகாஷ் நான் எனக்குள் செத்துப்போன காதலை நமக்குள் உயிரூட்ட விரும்புகிறேன் உண்மை இல்லாது போனால் பொய்யா தானே நேசிக்கணும் நான் நிஜமாவே நேசிக்க விரும்புகிறேன் நீங்க விரும்பினால் சாதலில் என் காதல் போன பின்னும் உங்களை சாதல்வரை காதலிக்க விரும்புகிறேன் 

மனைவியின் கள்ளமற்ற உள்ளத்தை கண்டுணர்ந்த கணவன் கட்டியணைத்து முத்தமிட்டான் நானும் உன்னை காதலிக்கிறேன் என்பதை சொல்லாமலே…

திருமண வாழ்வில் வெற்றிகரமாய் 15 ஆண்டுகள் நிறைவடைந்து 16 வது ஆண்டினைத் தொடங்கிட திருமண நாளான இன்று குடும்பத்தோடு கோவிலுக்கு செல்லும் பிரகாஷ் மனதுக்குள் படமென ஓடியது 

தன் காதல் ஆரம்பித்த முதல் நாள் இரவு

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!